aabunaasu 300இந்தியாவை பொருத்தமட்டில் முதலீடுகள் இல்லாமல் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் சாமியார் என்கின்ற ஒற்றை அவதாரம் போது பல கோடிகள் வந்து தானாக குவியத் தொடங்கும்.

மக்களின் மதிகெட்ட தனத்தை பயன்படுத்திக் கொண்டு தங்களை கடவுளின் அவதாரம் என்றும் கடவுளின் தூதர் என்றும் கூறும் இவர்கள் பல்வேறு மோசடிகளிலும் குற்றச்சாட்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கற்பழிப்பு, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடங்கி கொலை குண்டுவெடிப்புகள் என பயங்கரவாத செயல்களில் தொடர்புவரை ஏன் பயங்கரவாத செயல்களையே முன்னின்று நடத்தியது என இந்தியாவில் நடைபெற்றுள்ளன. 

பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணமானவர்கள் இந்த சாமியார்களே. சுவாமியார் என்கின்ற போர்வையில் நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய இந்துத்துவ பயங்கரவாதிகளான ஆசிமானந்தா, பிரக்கியசிங் வரிசையில் தனி ராஜ்ஜியமே நடத்தி வந்த பயங்கரவாத சாமியார் ராம்பால் ஒருவழியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பயங்கரவாதி ராம்பால்

ஹரியானாவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தில் குவியல் குவியலான ஆயுதங்கள், பல்வேறு சொகுசு வசதிகளை உள்ளடக்கிய சொகுசு அறைகள், குண்டு துளைக்காத பூஜை அறைகள், பல்வேறு நகைப் பெட்டகங்கள் காவல்துறையின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்றில்ப் குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்று பின்பு பினையில் வெளிவந்த ராம்பாலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மூன்று முறை பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் முரண்டு பிடித்த சாமியாரை நவம்பர் 21 இற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டப்பின் கைது செய்ய காவல்துறை ஆசிரமத்திற்கு சென்றபோது சாமியார் ராம்பாலால் உருவாக்கப்பட்ட ராஸ்ட்ரிய சமாஜ் சேவ சமிதி (RSS) படை காவல்துறையை உள்ளே நுழையவிடாமல் அவர்களுடன் போர் செய்துள்ளனர்.

ஒரு வழியாக இரண்டு நாள் போராட்டத்திற்கு பின்னால் சாமியார் ராம்பால் என்கின்ற பயங்கரவாதியை நவம்பர் - 19 ஆம் தேதி காவதுறையினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாதி ராம்பாலின் படைகளுக்கும் காவல்துறையினருக்கும் நடைபெற்ற மோதலில் ஒரு குழந்தை ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நவம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது கைது செய்வதற்கான செலவு அறிக்கையை ஹரியானா டி.ஜி.பி.வாஹிங்ட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதேபோல் பஞ்சாப் மற்றும் சண்டீகர் நிர்வாகமும் தனது செலவு அறிக்கையினை தாக்கல் செய்தது. இந்த மோதலில் ஈடுபட்டதாக இதுவரை 900 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்கல் செய்யப்பட்டுள்ள செலவு அறிக்கைகளில் ஹரியானா அரசு ரூபாய் 15.43 கோடியும், பஞ்சாப் அரசு 4.34 கோடியும் மற்றும் சண்டீகர் நிர்வாகம் 3.29 கோடி என மொத்தம் 26.61 கோடி ரூபாய் பயங்கரவாதி ராம்பாலை கைது செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. ஹரியான மாநிலம் சோனிபட் மாவட்டம் நானா கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்த ராம்பால் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து ஹரியானா மாநிலத்தின் நீர்பாசனத்துறையில் பணிபுரிந்துள்ளான்.

பின்பு சாமியாரான இவன் 1999 ஆம் ஆண்டு சட்லக்கில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கியுள்ளான். பின்பு ரோட்டக் மற்றும் பர்வாலா பகுதிகளில் ஆசிரமங்களை அமைத்துள்ளான். இதில் சட்லக் ஆசிரமம் சண்டிகர் - ஹசர் மீதசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 12 ஏக்கர் பரப்பளவில் ஐந்து மாடிகளுடன் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ளது.

masudhi 350ஆசிரமத்தின் சொகுசு வசதிகள்

ஆசிரம வளாகம் முழுவதும் கிராணைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் பயங்கரவாதி ராம்பாலுக்காக பல்வேறு தனி அறைகள் உள்ளன.

அவற்றில் குளிர்சாதன வசதி, மசாஜ் படுக்கைகள், பிரம்மாண்ட டீவி போருத்தப்பட்டுள்ளது. ஆசிரமத்திற்கு உள்ளே நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், 25 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளம், குளிர் சாதன வசதிகளுடன் 24 அரைகள் உள்ளன. ஆசிரமத்தில் 50,000 நபர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

ஒரு இலட்சம் பேருக்கு சமைக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய சமையலறை உள்ளது. இங்கு ஒரு மாதத்துக்கு தேவையான் அசமையல்ன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக்கூடம் உள்லது.

ராம்பாலுக்கென்றே பிரத்யோகமாக பூஜை அறை உள்ளது. இங்கு பெண் ப்கதர்களுக்காக தனி வரிசை ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பூஜை அறை அருகே நகை பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட மைதானம் உள்ளது. மைதானத்தின் உயரமான மேடையில் குண்டு துளைக்காத கூண்டில் இருந்துதான் ராம்பால் சொற்பொழிவாற்றுவானாம். அவனது உரையைக் கேட்க வசதியாக ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத புல்லட் பூஃப் கார்களை ராம்பால் பயன்படுத்தியுள்ளான். அவனின் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ படை இருந்துள்ளது.

ஆசிரமம் முழுவதும் கண்கானிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாத வகையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர்  எழுப்பப்பட்டுள்ளன. அதில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரமத்தின் வாயிலில் 4 மெட்டல் டிடெக்டர் பொருத்திய கதவுகள் உள்ளன. அதன் வழையாகவே பக்தர்கள். உல்லே நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரகசிய அறையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக்குவியல்கள்

ஆசிரமத்தின் இரண்டு இரகசிய அறைகளில் ஏராளமான துப்பாக்கிகள், பெற்றோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள், என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு  தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஹெல்மட், கைத்தடிகள், கருப்பு நிற கமாண்டோ சீருடைகள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அங்குள்ள இரண்டு டேங்குகளில் 800 லிட்டர் டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிகள் அனைத்திலும் தோட்டாக்கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு ராம்பாலின் கமாண்டோ படை வீரர்கள் தங்குவதற்காக தனி அறைகளும் உள்ளன. சிறிய இராணுவத்துக்கு தேவையான வைகையில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக ஹரியான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் மேலும் கூறியபோது கைது செய்யப்பட்டவர்களிடம் இரகசிய ஆயுதக்கிடங்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதன் மூலம் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரிவித்தனர்.

கர்ப்ப சோதனை கருவிகள்

சாமியார் ராம்பாலின் ஆசிரமத்துக்கு பென்பக்தர்கள் ஏராளமாக வந்துள்ளனர். இந்நிலையில் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்களின் குளியறையில் இரகசிய கேமாராக்கள் பொருத்தியிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

kanchisankaracharya 350காஞ்சி சங்கரமடத்தில் ரூபாய் 3992 கோடி கருப்புப் பணம்

தமிழ்கத்தில் பரபரப்பு ஏற்படுத்திய சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் ஓட்டைகளில் வெளியாகி குற்றமற்றவராக தன்னைத் தானே கூறிக்கொள்ளும் ஜெயேந்திரன் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு 3992 ரூபாய் வங்கிகளில் வைக்கப்பட்டுள்லது. இந்த பணவருவாய்க்கான விவரங்கள் இல்லை.

கணக்கில் வராத இந்த கருப்புப் பணம் குறித்து விசாராணை தொடங்கப்படுகிரது. 2011 - 2012 ஆம் ஆண்டில் சங்கரமடத்திற்கு ரூபாய் 3992 கோடி நன்கொடையாக வந்த விவரம் குறித்து மத்தியப் புலானாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கராச்சாரியைத் தலைவராகக் கொண்டு காஞ்சிகாமகோடி மடம் செயல்பட்டு வருகிறது.

இம்மடத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்கில் 2011 - 2012 ஆம் ஆண்டிற்கான வரவாக ரூபாய் 3992 கோடி வைப்பு நிதியாக செகுத்தப்பட்டது. இதை காஞ்சிமடத்தின் தலைமைக் கணக்காளர் எஸ்.ஸ்ரீதர் உறுதி செய்தார்.

இதுகுறித்து மத்திய வருமான ஆய்வுக்குத் தலைவர் அசோக் குமார் என்பவருக்கு காஞ்சி சங்கரமடம் எழுதிய கடிதத்தில் 2011 -2012 ஆம் ஆண்டு எங்களுக்கு நன்கொடை மூலம் ரூபாய் 3992 கோடி வருவாய் வந்துள்ளது.என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ரூபாயை காஞ்சி மடத்தின் மூன்று வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு சரியான வருவாய் ஆதாரமின்றி 3992 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையின் புகார் கொடுக்கப்பட்டது. அதில் காஞ்சி சங்கரமடத்தின் நன்கொடையாளர்கள் பட்டியலில் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்தான் உள்ளன. இதில் யாரும் இலட்சங்கள்வரை கொடுக்கவில்லை.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மடத்தின் கணக்கில் 15 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள்ளது. ஆனால் திடீரென 2011 - 2012 ஆம் ஆண்டில் சங்கரமடத்தின் சார்பில் ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கிக்கணக்கில் 3992 கோடி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் நேரடியாக நன்கொடை பெற இயலாத நிலையில் சங்கரமடம் எப்படி நேரடிக்கணக்கில் அதுவும் ஓர் ஆண்டிற்குள் நன்கொடையாக பெற்றிருக்க முடியும்?

இந்த நன்கொடையாகப் பெற்ற பணம் யாரிடமிருந்து வந்தது என்பதனையும் சரிவர கணக்கில் காட்டவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இப்புகாரைக் குறித்து விசாரணை செய்து வரும் மத்திய புலனாய்வுத்துறையின் இணை ஆணையார் (சட்டம் ஒழுங்கு) அபிசேக் கோயல் கூறும்போது; சங்கரமடத்தில் நடந்த இந்தப் பணமோசடி தொடர்பாக தனிப்பிரிவௌ அமைத்து விசாரணை செய்து வருகிரோம்.

ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள நீலகண்டாச்சாரியா சுவாமிகள் மற்றும் எட்டு நபர்கள் எங்களின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். பெங்களரூ மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளோம். இது தொடர்பாக விஜயநகர் காவல் நிலையத்தில் 15 பேர் மீது பணமோசடி மற்றும் தவறான வழியில் பணம் சேர்த்தல் தொடர்பான குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளோம்.

சங்கரமடத்தில் நடக்கும் இந்த பண மோசடி சில கருப்புப் பண முதலைகளுக்கு தங்களது பணத்தை வெள்ளையாக்க உதவி புரிந்துள்ளது. அத்துடன் சங்கரமடத்திற்கும் தரகுத்தொகைக் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.....

police 350இப்படியாக பல சாமியார்களும், மடாதபதிகளும், தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வரும் நிலையில் இந்த குற்றங்களுக்கு துணைபோகும் அதன் ஆட்சியாளார்களும் இந்துத்துவ தீவிரவாதிகளும், மதராஸக்கள் பயங்கரவாதத்தை போதிப்பதாக கூறி நாடு முழுவதும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது நகைப்பிற்குறியது.

நாட்டில் எங்கீ நடந்த உண்டுவெடிப்புகளுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போது இயவந்தான் முக்கிய சதிகாரன் அல் - காயிதா, அல் கொய்யாக்கா உடன் இவனுக்கு நெருங்கிய தொடர்பிருக்கின்றன என்றும் பாகிஸ்தானுடன் தொடர்புள்ளது என பாகிஸ்த்தான் பல்லவி பாடியும் பத்தி பத்தியாக பல பக்கங்களுக்கு கப்சா விடும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அதே அப்பாவி நிரபராதி என்று விடுதலையாகும் போது ஒரு துனுக்கு செய்தியைக் கூட போடுவதில்லை.

இஸ்லாமிய சமூகத்தின் மீது தனது வெறுப்பை சகட்டுமேனிக்கு காரி உமிழும் ஊடகங்களோ குவியல் குவியலாக ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட பின்னும் பயங்கரவாதி ராம்பாலை சாமியார் என்றும் காவல்துறையுடன் துப்பாக்கி வெடிகுண்டு பயன்படுத்தி போர் செய்த பயங்கரவாதி ராம்பாலின் கூலி படையினர் சாமியாரின் ஆதரவாளர்கள் என்று கூறுகின்றன ஐ.பி.யிடம் தனது பேனாவை விற்றுவிட்ட வேசி ஊடகங்கள். நாட்டின் அமைதியை நிலைநாட்ட இந்துத்துவத்தையும் அதன் ஆக்கமான சாமியார்களையும் வேறோடும் வேறடி மண்ணோடும் சாய்த்தால் தான் சமத்துவம் தளைத்து அமைதி நிலவும்.

Pin It