குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்ததாகக் கதை கட்டி குஜராத் போலீஸ் நடத்திய போலி என் கவுண்ட்டரில் சொராப்புதீன் கொல்லப்பட்டதை நேரடியாக பாரத்த துளசி ராம் பிரஜாபதியையும் விட்டு வைக்காமல் போட்டுத் தள்ளியது போலீஸ்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் டின் உத்தரவின்படி விசாரணையைத் துவக்கியிருக்கிறது சி.பி.ஐ.

2006ல் ராஜஸ்தான் குஜராத் போலீஸôர் இணைந்து தான் பிரஜாபதியை குஜராத் பனஸ் கந்தா மாவட்டம் அம்பாஜி என்ற இடத்தில் சுட்டுக் கொன் றனர். இந்த இடம் ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.

பிரஜாபதி வழக்கை விசாரணை செய்த அதிகாரியான டிஎஸ்பி ஆர்.கே.பட்டேலிடமிருந்து விசாரணைத் தொடர்பான விவரங்களை பெற்றிருக்கிறது சி.பி.ஐ.

அதோடு, இந்த வழக்கை துவக்கத்தில் விசாரித்து வந்த மாநில குற்றப்பிரிவு (சிஐடி) அதி காரிகளையும் தம்மோடு இணைத் துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. டீம். ஏற்கெனவே மாநிலக் குற் றப்பிரிவு விசாரணை அதிகாரி கள் பிரஜாபதி போலி என்க வுண்ட்டரில் ஈடுபட்டதாக குற் றம் சாட்டப்பட்ட காவல்துறையி னர் 16 பேர் மற்றும் பனஸ் கந்தா மாவட்ட டிஎஸ்பி விஜய் பால் அகர்வால் ஆகியோரை கஸ்டடி யில் எடுத்திருக்கிறார்கள்.

அதோடு எல்லைச் சரக ஐ.ஜி யான டி.ஜி. வன்சரா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அந்தஸ்து கொண்ட அதிகாரி தினேஷ் குமார் ஆகியோரை சொராப்புதீன் போலி என்க வுண்ட்டர் வழக்கில் மாநில குற்றப் பிரிவு போலிசார் கைது செய்திருக்கின்றனர்.

முன்னதாக, சொராப்புதீன் மற்றும் அவரது மனைவி கௌசர் பீ ஆகியோரின் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசா ரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கிறது உச்ச நீதி மன்றம். இந்நிலையில் பிரஜாபதி போலி என்கவுண்ட்டர் வழக்கும் சொராப்புதீன், கௌசர் பீ போலி என்கவுண்ட்டர் சம்பவத்தோடு மிக நெருக்கமாக தொடர்பு கொண்டது. எனவே பிரஜாபதி என்கவுண்ட்டர் வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என பிரஜா பதி தரப்பினரும் மனித உரிமை அமைப்பினரும் கோரி வந்தனர்.

கடந்த 2005ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஆந்திராவில் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த சொராப்புதீன் கௌசர் பீயை குஜராத் மாநிலத் திற்கு கடத்திக் கொண்டு வந்தது அம்மாநில காவல்துறை. பின்னர் மோடியை கொல்ல வந்ததாக புளுகி இருவரையும் என்கவுண்ட்டர் செய்தது. இப்படி குஜராத் போலீசாரால் கடத்தி வரப்பட்டு, கொல்லப்பட்ட மூன்றாவது நபர் பிரஜாபதி என்று உறுதியாக நம்பப்படுகிறது.

இச்சூழலில், சொராப்புதீன், கௌசர் பீ வழக்கேடு பிரஜாபதி வழக்கும் சம்பந்தப்படுவதால் இந்த வழக்கையும் விசாரிக்க அனுமதி வேண்டும் என சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.

இனி, விசாரணையை நேர்மையாக நடத்தி காவல்துறைக்கு களங்கம் கற்பித்த கயவர்களை தண்டிக்கும் சூழலை, உறுதியான ஆவணங்களோடு ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு சி.பி.ஐ.க்கு உள்ளது. பொறுப்பை சரியாக நிறைவேற்றுமா சி.பி.ஐ?

- ஃபைஸல்

Pin It