ஒரு நல்ல தேசிய நாளேடு என்று அனைத்து தரப்பு வாசகர்களாலும் பாராட்டப்பட்டு வந்த ‘தி ஹிந்து' நாளேட்டில் பிரவீன் சுவாமி என்பவர் மூத்த துணை ஆசிரியர் என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு பொறுப்பற்றத் தனமாக எழுதிக் குவிக்கும் கட்டுரைகள் ‘தி ஹிந்து' பத்திரி கைக்கு இந்துத்துவா வர்ணம் கொடுத்து வந்தன.

பிரவீன் சுவாமி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வார்த்தெடுக்கப் பட்ட சங்சாலக்கைவிட வீரிய மாகவே தி ஹிந்துவில் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி வந்திருக்கிறார்.

இவரது தூண்டுதலின் பேரில் வாசகர்கள் என்ற போர்வையில் ‘தி ஹிந்து'வின் ‘திறந்த பக்கம்' உள்ளிட்ட பல பக்கங்களில பலர் இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்து களை வெளிப்படுத்தி வருகின்ற னர். சிலவேளை முஸ்லிம் பெயர் களில் கூட இஸ்லாமிய விரோதக் கருத்கள் ‘தி ஹிந்து'வில் வெளிப் பட்டு வருகின்றன.

அத்தனைக்கும் பின்னணியாக இயங்கி வருபவர் சாட்சாத் பிர வீன் சுவாமிதான். தற்போது அவர் அந்த ஏட்டிலிருந்து விலகி யிருப்பதாகத் தகவல்.

நாட்டில் எங்காவது குண்டு வெடிப்பு நடந்தால் அது குறித்து அதிகாரப்பூர்வமான விசாரணை அமைப்புகள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்,சம்பவம் நடந்த சில தினங்களுக்குள் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் குண்டு வெடி ப்பை நிகழ்த்தியவர்கள் என்று தனது பிரத்யேக மற்றும் புல னாய்வு கதைகள் மூலம் முடிவு கட்டி விடுவார் பிரவீன்.

ஆக, குண்டு வெடிப்பு நிகழும் காலங்களில் இப்படி புதிய அவ தாரம் எடுப்பவர்தான் பிரவீன் சுவாமி.

மற்ற பத்திரிகையாளர்களைப் போல் இவர் எழுத்துகளோடு முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வதில்லை. பவர் பாயிண்ட் நிகழ்ச்சிகள் மூலம் விளக்க வகுப்புகளையும் நிகழ்த்து பவர். அதனால்தான் அவரை ‘சங்-சாலக்' என்று குறிப்பிடுகிறோம்.

இஸ்லாமிய தீவிரவாதம் மற் றும் ஜிஹாதி நெட்வொர்க் குறித்து, தான் எழுதும் பிரத்யேக கட்டுரை களைப் போலவே நாடெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார் பிர வீன். இந்துத்துவாவிற்கு கிடைத்த இன்னொரு பிரவீன் தொகாடியா தான் இவர்.

குஜராத் தலைநகர் அஹ்மதா பாத்திலுள்ள ‘சர்தார் பட்டேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்' என்கிற பயிற்சி மாணவர்களுக்கான இன்ஸ்டிடியூட்டில் ‘இந்திய முஸ் லிம்களும் உலகளாவிய ஜிஹாதிய அமைப்புகளும்' என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் நிகழ்ச்சியை நடத்தி அம்மாணவர்கள் மத்தி யில் விஷப் பொடிகளைத் தூவி யுள்ளார். இன்றுவரை யாருக்கும் தெரியாத பல ரகசிங்களை அந்த நிகழ்ச்சியில் வழங்கியிருக்கிறார் பிரவீன் சுவாமி.

இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதிய அமைப்புகள் குறித்த சுவாமியின் புதுக்கதைகளை கேட் பதற்கு முன், பயங்கரவாதம் குறி த்த அவரது பழைய கதைகளின் மீது ஒரு பார்வையை செலுத்து வோம்.

இவற்றில் பெரும்பாலானவை மாலேகான், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவங் களில் காவி பயங்கரவாதியான சுவாமி அசீமானாந்தாவின் ஒப் புதல் வாக்குமூலத்திற்கு பின்பும், இந்த வழக்குகளில் பொய்யாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்குப் பின்பும் தவிடு பொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி பிரவீன் சுவாமியின் புலனாய்வு மற்றும் பயங்கரவாதக் கதைகளின் புனைவுகளைப் பார்ப்போம்.

2007ல் பிரவீன் சுவாமி தி ஹிந்து பத்திரிகையின் பல செய்தி களிலும், தலையங்கம் பகுதிகளி லும், ஹைதராபாத் மக்கா மஸ் ஜித் குண்டு வெடிப்புக்கு கார ணம் முஸ்லிம் இளைஞர்கள் தான் என்றும்,ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கள் ஹர்கத்துல் - ஜிஹாதி - யே - இஸ்லாமி (ஹுஜி) என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என் றும் உறுதிபட பிரகடனப்படுத்தி வந்தார்.

இது தவிர, அஜ்மீர் தர்கா மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவங்கள், இஸ்லா மிய தீவிரவாதிகளின் வேலை தான் என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டு வந்தார். ஆனால் இந்த சதி வேலைகளில் இஸ்லா மியர்கள் ஈடுபடவில்லை. அபினவ் பாரத், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா தீவிரவாதி கள்தான் இதில் ஈடுபட்டனர் என்பதை புலனாய்வு அமைப்பு கள் வெளிக் கொணர்ந்து விட் டன.

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் புச் சம்பவம் கடந்த மே 18, 2007ல் நிகழ்ந்தது. இதற்கான விசா ரணை துவங்குவதற்கு முன், குண்டு வெடிப்பு குற்றவாளிகள் யார் என்பதை முன் கூட்டியே தீர்மானித்து 23, மே 2007 தேதி யிட்ட தி இந்து பத்திரிகையில் எழுதி நாட்டு மக்களுக்கு தெரி யப்படுத்துகிறார் பிரவீன் சுவாமி.

‘மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் புகளுக்குப் பின்னால்' என்ற தலைப்பிட்ட அவரது பகுப்பாய் வுக் கட்டுரையில், மிக உறுதியாக இப்படி கூறுகிறார்.

“மும்பை தொடர் குண்டு வெடிப்புக்குப் பிறகான வன்மு றைகளை மறுத்த போதிலும், “இந்திய நகரங்களின் மீதான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இடம் பிடித்துக் கொண்டிருக்கி றன என்பதை மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவம் தெளி வுபடுத்துகிறது...'' (23, மே 2007 தேதியிட்ட தி இந்து நாளிதழ்)

அஜ்மீர் தர்கா குண்டு வெடி ப்பு குறித்த தனது எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்டில் பிரவீன் சுவாமி கீழ்க்கண்டவாறு எழுதியிருந் தார்.

இஸ்லாமிய நவீன வாதிகளின் தாக்குதல் என்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதே ஷில் இஸ்லாத்தை பிரபலமாக் கிய பாரம்பரிய மதச் சித்தாந்தங் கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரானதாக உள்ளது. தெற்கா சிய பயங்கரவாத குழுக்கள் சமீப காலமாக முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலில் சம்மந்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக லஷ்கரே தய்யிபா அமைப்பு ஸலஃபி பிரிவினரிடமி ருந்து வேத சாஸ்திரங்களை உள் வாங்கியிருக்கிறது. இந்த நவீன பிற்போக்குவாதிகளின் தத்துவ நடைமுறைகள் சிலவேளை வஹா பிசம் என்று அறியப்படுகிறது. இவர்கள் ஸலஃபி கொள்கை கொண்டவர்கள். தங்களை இறை நேசர்களாக சொல்லிக் கொள் ளும் சிஷ்தி போன்றவர்களால் நிறுவப்பட்டுள்ள சூஃபி கொள் கைக்கு எதிரான விரோதப் போக்கை கொண்டிருப்பவர்கள். (தி ஹிந்து, அக். 12, 2007)

ஆனால், இந்த அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட் டது அபினவ் பாரத் போன்ற இந் துத்துவா தீவிரவாத அமைப்பு கள்தான் என்பது அதிகாரப்பூர்வ விசாரணையின்போது கண்டுபி டிக்கப்பட்டது.

ஆயினும், தி ஹிந்து ஏடு தவ றாக எழுதியதற்காக அல்லது முஸ் லிம்கள் மீது பழியைப் போட்ட தற்காக ஒரு வார்த்தையில் மன்னிப்பு கேட்கவோ, பிரவீன் சுவாமி வருத்தம் தெரிவிக்கவோ அல்லது பாடம் படிக்கவோ இல்லை.

உளவு அமைப்புகளிடமிருந்து பெற்ற விபரங்களின் அடிப்படை யில் தமது புலனாய்வுக் கதை களை புனைந்ததன் மூலம் விரும் பியோ, விரும்பாமலோ இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை அதிகப்படுத்தி யிருக்கிறார் பிரவீன்.

இந்தியாவை வழி நடத்தும் எதிர்கால நிர்வாக அதிகாரிக ளின் (சர்தார் பட்டேல் இன்ஸ்டி டியூட் மாணவர்கள்) சிந்தனைக ளில் (முஸ்லிம்) வெறுப்பை செலுத்தியிருக்கிறார் பிரவீன் சுவாமி.

‘இந்திய முஸ்லிம்களும் உலக ளாவிய ஜிஹாதிய அமைப்புக ளும்' என்ற தலைப்பில் அஹ்மதா பாத் சர்தார் பட்டேல் பொது நிர் வாக கல்லூரியில் பவர் பாயிண்ட் நிகழ்ச்சி நடத்திய பிரவீன் சுவாமி, இஸ்லாமிய பயங்கர வாத அமைப்புகள் மற்றும் தனிப் பட்ட இஸ்லாமியர்களின் இறுக் கமான பிடிக்குள் இந்தியா சிக்கி யிருக்கிறது என தனது வழக்க மான திரிபு வாதங்கள் மூலம் நிறுவ முயற்சித்திருக்கிறார்.

ஜமாஅத்தே இஸ்லாமி அமை ப்பும், டாக்டர் ஜாகீர் நாயக்கும் இந்தியாவில் இயங்கும் ஜிஹா திய அமைப்புகளின் ஒரு பகுதியி னர் என தெரிவித்துள்ளார்.

இந்த பவர் பாயிண்ட் நிகழ்ச்சி யில் ‘இந்தியன் முஜாஹித்தீன்' என்ற தலைப்பில் (மாணவர்க ளுக்கு) விளக்கம் அளித்த பிரவீன் சுவாமி, மூன்றாவது ஸ்லைடாக (காட்சியாக) பாகிஸ்தானிலிரு ந்து வெளிவரும் ‘காஸ்வா' என்ற பத்திரிகையின் அட்டைப் படத் தைக் காட்டி விளக்கம் அளித் துள்ளார்.

அந்த ‘காஸ்வா' பத்திரிகையின் அட்டைப் படத்தில் போராளி கள் சிலர் குதிரைகளின் மீது அமர்ந்தபடியிருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதனை காட்டிப் பேசியதன் மூலம் இந்தியன் முஜா ஹித்தீன் என்றால் எந்த அளவிற்கு ஆபத்தானவர்கள் பாருங்கள் என்ற சிந்தனையை விதைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த காட் சியில் (சிலைடு) ‘இந்தியன் முஜா ஹித்தீனின் தோற்றம்' என்ற தலைப் பிலான நிகழ்ச்சியில், இந்தியன் முஜாஹித்தீனின் துவக்கம் 1996ன் முற்பகுதியில் எனத் தெரிவித்தார்.

இந்தியன் முஜாஹித்தீன் என்ற (கற்பனை) அமைப்பு தோன்றியது 1996ல்தான் என்று உளவு அமைப்பு களோ, விசாரணை அமைப்புகளோ, காவல்துறையோ இதுவரை கூறிய தில்லை.

இந்தியன் முஜாஹித்தீன் என்ற வார்த்தை பொதுப் புழக்கத்திற்கு வந்ததே கடந்த 2008ன் முற்பகுதியில். ஜெய்ப்பூர், அஹ்மதாபாத், டெல்லி போன்ற நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்த குண்டு வெடிப்பு களை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று அறிவிக்கவும், முன் எச்ச ரிக்கை செய்யவும் பயங்கரவாதக் குழுக்கள் மீடியாக்களுக்கு இமெ யில் தகவல்கள் அனுப்பிய பிறகு தான்.

பவர் பாயிண்ட்டின் இன்னொரு காட்சியில், ‘குஜராத் கலவரத்திற்கு பிறகு வீசிய அலை' என்ற தலைப் பின் கீழ் பிரவீன் சில தகவல்களை வெளிப்படுத்தினார்.

* 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு டஜன் கணக்கிலான இளைஞர்கள் லஷ் கரே தய்யிபா பயிற்சி முகாம்களுக்குப் புறப்பட்டனர்.

* 2003ல் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா படுகொலை செய்யப் பட் டார்.

* 2005லிருந்து தொடங்கிய குண்டு வெடிப்புகள் ஜூலை 2006ல் 186 பேரை பலிவாங்கிய மும்பை புறநகர் ரயில் நிலைய குண்டு வெடிப்பின்போது உச்ச கட்டத்தை அடைந்தது.

இவைதான் அந்தத் தகவல்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பிர வீன் புனைந்த இந்தக் கதையில் எந்த ஏரியா விலிருந்து அந்த இளைஞர்கள் லஷ்கரே தய்யிபாவிடம் பயிற்சிக்காக சென்றனர்?

அவர்கள் பயிற்சிக்காக எந்த இடத்திற்குச் சென்றனர்? தற்போது அவர்கள் எங்கிருக்கி றார்கள்? என்ற கேள்விகளுக்குண்டான எந்த விபரத்தையும் அவர் முன் வைக்கவில்லை.

ஹரேன் பாண்டியாவின் படுகொலைக்குப் பின்னால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருக்கிறார் என இன்றுவரை முன்னாள் உள் துறை அமைச்சர் ஹரேன் பாண்டி யாவின் மனைவியும், தந்தையும் உறு திபடக் கூறி வருகின்றனர்.

இன்னும், ஹரேன் பாண்டி யாவை படுகொலை செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு ஹைதராபாத் மற்றும் அஹ்தாபாத் திலிருந்து கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர் (காண்க : ஆக. 29, 2011 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு)

2005லிருந்து இந்தியாவில் நடை பெற்ற அத்தனை குண்டு வெடிப்பு களுக்கும் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்புகள்தான் காரணம் என குற்றம் சுமத்துகிறார் பிரவீன் சுவாமி. அதே சமயம், அதே 2005க்குப் பிறகு நடைபெற்ற மாலேகான், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புகள் அனைத்திலும் காவி பயங்கரவாதத்தின் கைகள் இருப் பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த பவர் பாயிண்ட் நிகழ்ச்சி யின் மிக முக்கிய பகுதி, ‘ஜிஹாதிய வலைப்பின்னல்' (The Jihadist Network) என்ற தலைப்பின் கீழ் வரைபடங்க ளாக இணைக்கப்பட்டுள்ளன.

இதில் அம்புக்குறி அடையாளமி டப்பட்டு, ஒவ்வொரு அம்புக்குறி அடையாளத்துடனும் 13 தொகுதி கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு தொகுதியும் 2 அல்லது 3 இஸ்லாமிய அமைப்புகளின் பெயர் கள் அல்லது தனி நபர்களை குறிப் பிடும் வகையில் உள்ளது. இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக முதலி டத்தில் குறிப்பிட்டிருப்பது சிமியும், ஜமாஅத்தே இஸ்லாமியும்தான்.

கடைசி ஒரு தொகுதியில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் (IRF) டாக்டர் ஜாகிர் நாயக், இஃப்ரான் தேஷ்முக், ரஹில் ஷேக், ஜபியுத்தீன் அன்சாரி என்கிற அபு ஜிந்தால் ஆகி யோர் பெயர்கள் இணைக்கப்பட் டுள்ளன.

இதில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பெய ரும், அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவன மும் வேறு இரு (தீவிரவாத பட்டியல் கொண்ட) தொகுதிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதி, குஜராத் 2002 கலவரம் மற் றும் 2002க்குப் பிறகு குஜராத்தில் ஏற்பட்ட புத்தொழுச்சி என்று குறிப்பிடுகிறது. இன் னொரு தொகுதி 2006 ஒளரங்காபாத் மற்றும் குஜராத்தில் நடந்த தாக்குதல் முயற்சி குறித் தும் விவரிக்கிறது. இந்த பவர் பாயிண்ட் நிகழ்ச்சி மூலம் இஸ்லாமிய அமைப்புகளை தீவிரவாதத்தோடு சம்மந்தப்படுத்தி வரைப டங்களாக விளக்கம் அளித்து மாணவர்களு க்கு விஷம் ஊட்டியிருக்கிறார் பிரவீன் சுவாமி.

பயங்கரவாத குண்டு வெடிப்புகளை தனியாக விட்டு விட்டு, வன்முறைக்கு ஆதரவளிக் காத ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பையும், டாக்டர் ஜாகீர் நாயக்கையும் பயங்கர வாதிகளாக முத்திரை குத்தும் முயற்சியின் துவக்கம்தான் பிரவீன் சுவாமியின் இந்த விஷத் தூவல்.

இதழியல் பயங்கரவாதியான பிரவீன் சுவாமி போன்றவர்கள்தான் இந்தியாவிற்கு வெளியே இருந்து வருகிற பயங்கரவாதத்தை விட மிக ஆபத்தானவர்கள்.

இவரை தி இந்து வெளியேற்றியதோ அல்லது அவராகவே வெளியேறினாரோ!இரண்டில் எது நடந்திருந்தாலும் அது இந்திய சமூகத்திற்கு நல்லதுதான்.

பிரவீனுக்கு எதிராக வழக்கு

பிரவீன் சுவாமிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுத் திருக்கிறது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த். தி ஹிந்து இதழில் ஆதாரமற்ற, வெறுப்பு மிகு பிரச்சாரத்தை ஜமாஅத்திற்கு எதிராக பிரவீன் மேற்கொண்டாகவும், குஜராத் மாநிலம் அஹ்மதா பாத்தில் உள்ள சர்தார் பட்டேல் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி மாணவர் களுக்கு மத்தியில், ஜமாஅத்தே இஸ்லாமி இந்தியாவின் ஜிஹாதிய நெட்வொர்க்கின் ஒரு பகுதி என்று அடிப்படையற்ற முறையில் பிர சங்கம் செய்ததாகவும்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

“பிரவீன் சுவாமி எந்த விதமான ஆதாரங்களுமில்லாமல் ஜமா அத்தே இஸ்லாமிக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். மேலும் நேரடியாகவோ, மறைமுக மாகவோ ஜமாஅத்தின் நன்ம திப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடு பட்டு வருகிறார்...'' என்கிறார் ஜமா அத்தே இஸ்லாமியின் தேசியச் செயலாளரான சலீம் முஹம்மது இன்ஜினியர்.

“பிரவீன் சுவாமியின் எழுத்துக் கள் அவரது சொந்த தொழில் மற்றும் இதழியல் மீது அவதூறை பொழிவதாகவே உள்ளது. பிரவீன் சுவாமி யின் எழுத்துகள் பெரும்பாலும் உளவு அமைப்புகள் தரும் விபரங்களின் அடிப் படையிலேயே அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

தேசிய மற்றும் சர்வதேச உளவு அமைப்புகள் இஸ்லாத்தின் நன்மதிப்பை சிதைப்பதிலும், முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை உருவாக்குவதிலும் குறியாக இருக்கின்றன...'' என்றும் தெரிவித்துள்ளார் சலீம் முஹம்மது.

Pin It