பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்காயிதா அமைப்பின் நிறுவனரான உஸôமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் படுகொலை செய்தனர். அவரது உடலை கடலில் புதைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார்.

உஸôமாவின் உடல் கடலில் புதைத்த செய்தி உலக முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இஸ்லாமிய முறைப்படிதான் அவரது உடல் (கடலில்) நல்லடக்கம் செய்யப்பட்டது என்று ஒபாமா தெரிவித்திருந்தார்.

ஒபாமா சொன்னது பொய்தான் என்றும் உஸôமாவின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை, மாறாக ரகசியமாக அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்றும் தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத் தோடு தொடர்பில் இருக்கும் அல்லது ஒப் பந்த அடிப்படையில் செயல்படும் தனியார் உளவு நிறுவனங்களின் இமெயில்கள் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

உஸôமாவின் உடல் தகனம் செய்ய அமெ ரிக்காவிற்கு எடுத்துச் சொல்லப்பட்டதாக அந்த இமெயில் தகவல்கள் கூறுகின்றன என்கிறது டெய்லி மெயில் பத்திரிகை.

அமெரிக்க பாதுகாப்பு அமைப்புக ளோடு இணைந்து உளவு மற்றும் பூகோள அரசியல் பகுப்பாய்வை கவனித்து வரும் தனியார் நிறுவனமான "ஸ்ட்ராட்ஃபர்' என்ற நிறுவனத்தின் ரகசிய இமெயில்களை அடையாளம் தெரியாத சிலர் "ஹாக்' (பிறரது மெயிலைத் திருடுபவர்) செய்து இந்தத் தகவல்களை எடுத்திருக்கின்றனர்.

இச்செய்தியை விக்கி லீக்ஸ் இணையதளத்திற்கு அந்த ஹாக்கர்ஸ் தர விக்கி லீக்சும் வெளியிட்டுள்ளது. அடையா ளம் தெரியாத இந்த ஹாக் கர்கள் நிழல் சி.ஐ.ஏ. என்று அமெரிக்க மக்களால் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நிழல் சி.ஐ.ஏ., ஸ்ட்ராட் பாட் உளவு நிறுவ னத்திடமிருந்து 2.7 மில்லியன் ரகசிய தக வல்களை ஹாக் செய் திருப்பதாகவும் கடந்த வாரம் அறிவித்திருக்கி றது என்கிறது டெய்லி நியூஸ் இதழ்.

ஸ்ட்ராட்பர்ட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரட் பர்டன், “பின்லேடனின் உடலுக்கு என்னவானது என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளி டத்தில் சந்தேகத்தை எழுப்பியது மற்றும் அமெரிக்க உளவு நிறுவன மான சி.ஐ.ஏ.விற்கு சொந்தமான விமானத்தில் பின்லேடனின் உடலை மேரிலேண்ட் நகரில் பெர் தெஸ்டா என்ற இடத்தில் அமைந் துள்ள ஆயுதப்படை நோய்க்குறி யியல் ஆய்வு நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றது குறித்து பேசும் இமெயில்களும் வெளியிடப்பட்டுள்ளன.

நோய்க்குறியியல் ஆய்வு நிறுவனம்தான் அல்காயிதா தலைவரின் இறுதி உறக்கம் கொள்ளும் இடம் என்கிறது ஹாக்கர்ஸ் குழு. இமெயில் ஹாக்கர்களை "திருடர்கள்' என வர்ணித்திருக்கும் ப்ரட் பர்டன், ஹாக் செய்யப்பட்ட இமெயில்களில் போலியாக உருவாக்கப்பட்டவையும், மாற்றம் செய்யப் பட்டவையும் இருக்கின்றன எனத் தெரிவித் துள்ளார்.

மேரிலேண்டில் உள்ள நோய்க்குறியியல் நிறுவனம் செப்டம்பர் 15, 2011 அன்று மூடப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் அங்கு ப்ரட்பர்டன் பார் வையிட்டு விட்டு சென்றிருக்கிறார் என்றும், பின்லேடன் கொல்லப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து இது நடந்தது என்றும் கூறும் இமெயில் தகவல்கள், பின்லேடனின் உடல் விஷயத்தில் சதி நடந்திருப்பதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

ஒரு இமெயில் தகவலில், பின்லேடன் உடல் கடலில் புதைக்கப்படுகிறது என்றால் அது நாஜி தலைவன் அடால்ப் ஈச்மேனின் சம்ப வத்தோடு ஒத்துப் போகிறது. பழங்குடியி னர் நாஜித் தலைவனின் சாம்பலை கடலில் கரைத்தது நினைவுக்கு வருகிறது. ஈச்மே னுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கி அத்தண்டனை நிறை வேற்றப்பட்ட பின் அவரை எரியூட்டி அந் தச் சாம்பல் கடலில் (பழங்குடியினர் மூலம்) கடலில் கரைக்கப்பட் டது. ஏனெனில் ஈச்மே னுக்கு நினைவுச் சின் னம் எழுப்பவோ அவரை நிறுத்தப் பார் க்கவோ தயாரில்லை...'' என்று ப்ரட்பர்டன் கூறுவதாக வெளியா கியுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது பின் டேலன் தியாகியா கவோ, வீரப் புருஷனா கவோ அடையாளப்படுத்தப்பட்டு அவர் எவரது நினைவிலும் நின்று விடக் கூடாது என்பதற்காக அவரது உடல் அமெரிக்கா விற்கு கொண்டு சென்று எரிக்கப்பட்டு கட லில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தை எழுப்புகிறது இந்த இமெயில் செய்தி!

“கடந்த பிப்ரவரி 27 அன்று ஸ்ட்ராட் ஃபர்ட் நிறுவனத்திலிருந்து பெரும் எண் ணிக்கையிலான எங்கள் வாடிக்கையாளர் கம்பெனிகள், சந்தாதாரர்களின் இமெயில் கள் திருடப்பட்டு அவை விக்கி லீக்ஸில் வெளியிடப்பட்டன. இது தனியுரிமை மீறல் மற்றும் சட்ட விரோதமானதாகும்...'' எனக் கூறும் ப்ரட்பர்டன், “அவற்றில் சில மோச டியானவை; மேலும் சில மெயில்கள் உண் மையானவை. ஹாக்கர்களின் கேள்விக ளுக்கு நாங்கள் விளக்கம் சொல்லி இரண் டாவது முறையாகவும் நாங்கள் பாதிப்புக் குள்ளாக தயாரில்லை...'' என்கிறார்.

ஹாக்கர்கள் சிலரை அமெரிக்க உளவு நிறுவனமான எஃப். பி.ஐ. கைது செய்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கும் அமெரிக்க தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ், இந்த ஹாக்கர் களின் தலையை துண்டிப் போம்... என்று ஸ்ட்ரட்ஃபிரட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சொன்னதாகவும் கூறுகிறது.

திருடப்பட்ட சில மெயில்கள் உண்மைதான் என்று ப்ரட் பார் டன் ஒப்புக் கொள்வதைப் பார்த் தால் விக்கி லீக்ஸ் வெளியிட்டி ருக்கும் செய்தி உண்மையாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

உஸôமா பின்லேடனின் உடல் ஒபாமா சொல்வதைப்போல் இஸ்லாமிய முறைப்படி கடலில் அடக்கம் செய்யப்படவில்லை. அமெரிக்காவிற்கு எடுத்துச் செல் லப்பட்டிருக்கிறது. ஆனால் அதற் குப் பின் என்னவானது என்பது தான் தெரியவில்லை. இதற்கான பதிலையும் விக்கி லீக்ஸ் வெளியி டலாம் என்று மட்டும் இப்போ தைக்கு நம்புவோம்.

ப்ரட்பர்டன் கூறும் அடால்ஃப் ஈச்மென் யார்?

ஜெர்மானிய நாஜிப்படையின் லெப்டினன்ட்தான் அடால்ஃப் ஈச்மென். இண்டாம் உலகப் போரில் முக்கிய கதாப்பாத்திரம் இவர். இரண்டாம் உலகப் போரில் பெரும் நாச கார சக்தியாக கருதப்பட்டவர்.

1945ல் இரண்டாம் உலகப் போர் முடி வுக்கு வந்தவுடன் அமெரிக்கப் படையின ரால் சிறை பிடிக்கப்பட்டார் ஈச்மென்.

அமெரிக்கப் படையினரிடம் போலி யான பெயரைக் கொடுத்த ஈச்மென் அவர் களின் கஸ்டடியிலிருந்து தப்பித்து இத்தா லிக்குச் சென்றார். அங்கிருந்தபடியே போரி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங் கப்பட்ட அகதிகளுக்கான பாஸ்போர்ட்டை இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

பின்னர் 1950களில் இத்தாலியிலிருந்து அர்ஜென் டினாவிற்கு சென்று அங்கு பியுனஸ் ஏர்ஸ் என்ற நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்த ஈச்மென், 1960ல் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத் அதிகாரிகளால் ஈச்மென் கைது செய்யப்பட்டார். ஈச்மென் மீது போர்க்குற்றம் மற்றும் மனித குலத் திற்கு எதிரான குற்றங்களைச் சுமத்தி தீர்ப்பளித்தது இஸ்ரேலிய நீதிமன்றம். ஈச்மென் தூக்கிலிடப்பட்டார். பின்னர் தகனம் செய்யப்பட்டார். அதன்பின் ஈச்மெனின் அஸ்தி மத்திய தரைக்கடலின் மீது தூவப்பட்டது.

Pin It