திருமணங்களின்போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கசக்கிப் பிழிந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளுவதை பொரும்பாலான மாப்பிள்ளை வீட்டார் ஒரு கலாச் சாரமாகவே செய்து வருகிறார்கள். இதுபோன்ற வரதட்ச ணைக் கொடுமைகள் இந்திய சமூகங்கள் அனைத்தி லும் நடைபெற்று வருகிறது.

வரதட்சணை காரணமாக ஏற்படும் உயிர் பலிகள் இதன் தீவி ரத்தை உணர்த்துகிறது. இதனை சமூகத் தீமையா கக் கருதி வரதட்சணையில்லாத திரும ணங்களை இந்திய தவ்ஹீத் ஜமா அத் உள்ளிட்ட சில சமுதாய அமைப்புகள் நடத்தி வருகின்றன.

வரதட்ணையை ஒழிப்பதை ஒரு பிரச்சார இயக்கமாகவே இந் திய தவ்ஹீத் ஜமாஅத் முன்னெ டுத்து வருகிறது. பொதுக் கூட்டங் கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் என பல்வேறு வழிகளில் வரதட்சணையின் தீமையை விளக்கி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

பொதுவாக வரதட்சணைக்கு எதிராக தவ்ஹீத் சிந்தனை கொண்ட சமுதாய அமைப்புகள் தான் போராடி வருகின்றன. அதே சமயம், மஹல்லா ஜமாஅத்து களோ, "சுன்னத் ஜமாஅத்' என்று சொல்லிக் கொள்ளும் ஜமாஅத் துல் உலமா சபை போன்ற அமைப் புகளோ வரதட்சணை விஷயத் தில் அலட்டிக் கொள்ளாத நிலை தான் இருந்து வருகிறது.

மஹல்லா ஜமாஅத்துகள் எல்லாமே ஜமாஅத்துல் உலமா சபையை பின்பற்றுபவையாக இருக்கின்றன. வரதட்சணை பணத் தில் ஜமாஅத் நிர்வாகத்திற் கென்று மஹல்லா ஜமாஅத் துகள் கமிஷன் கேட்டுப் பெறும் நிலை பெரும் பாலான ஜமா அத்துகளால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதை ஜமாஅத் துல் உலமா சபையும் கண்டு கொள்ளாமலே இருந்து வருகிறது.

இச்சூழலில் ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அனைத்து ஜமாஅத்துகளுடனும் நல்லி ணக்கமான உறவை பேணி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமா அத் துல் உலமா சபை சமூகப் பிரச் சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சமூகத் தீமைக ளுக்கு எதிரான குரலை உயர்த்த வேண்டும் என்று அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர் பங்கு கொள்ளும் சமுதாய மேடைகளில், “சமூகப் பிரச்சினை களில் உலமா சபை களமிறங்கி போராடியிருந்தால் சமூகத் தீமை களை எதிர்த்து குரல் கொடுத்தி ருந்தால் எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு வேலை இருந்தி ருக்காது...'' என்று அவ்வப்போது சொல்லி வருவது குறிப் பிடத்தக் கது.

கடந்த டிசம்பர் மாதம் சென் னையில் நடந்த முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கான கூட்டத் தில் உலமா சபையின் தலை வர் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத்தைப் பார்த்தபடியே, உலமா சபைக்கு களப் போராட்டத் திற்கான அழைப்பை விடுத்தார் ஐஎன்டிஜே தலைவர்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த அந்த செய்தி நமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது. யார் சமூ கத் தீமைக்கு எதிராக குரல் கொடுக்க மாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டதோ அங்கிருந்தே வரதட்சணைக்கு எதிரான குரல் உயர்ந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் நெல்லை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் கூட் டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உலமா சபையின் முன்னாள் தலைவரான டி.ஜெ.எம். சலாஹுத்தீன் ரியாஜி, அப்துல் ரஹீம் பாகவி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சமூக நலன் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள் ளனர்.

இஸ்லாமியர்கள் அரசியலில் பல சிந்தனைகளில் இருந்தாலும் சமுதாயத்தின் கண்ணியத் தையும், மரியாதையையும் பாதுகாக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு 1 முதல் 10 சதவீதம்வரை இட ஒதுக் கீடு தர வேண்டும். வரதட்சணை எனும் கொடுமையால் பெண்கள் பாதிக்கப் படுவதால் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று பட்டு வரதட்சணையை ஒழித்துக் கட்ட முன் வர வேண்டும் என்ப னதான் அந்த தீர்மானங்கள்.

ஜமாஅத் கட்டமைப்புக ளோடு பெரிய அமைப்பாக இருக்கும் உலமா சபை, வரதட்ச ணைக்கு எதிரான இந்தத் தீர்மா னங்களை அனைத்து முஹல்லா ஜமாஅத்துகளும் நிறைவேற்ற வேண்டும் என கறாராக அறிவித் தால் சமூகத்திலிருந்து வரதட் சணை எனும் தீமையை எளிதாக அகற்றி விடலாம். ஜமா அத்துல் உலமா சபை இப்படி களமிறங்கி னால் சமுதாய அமைப்புகளும் அதற்கு ஒத்துழைப்பு தரும்.

Pin It