தஞ்சை மாவட்டம் மதுக் கூரில் 4வது வார்டில் தண்ணீர் வராததால் அப்பகுதி இல்லத்தரசிகள் பரிதவித்தவர்களாய் நிற்க... இதனை அறிந்த அப்பகுதி தமுமுகவைச் சேர்ந்த ஷேக் என்பவர் அதிமுகவின் வார்டு கவுன்சி லர் பி.சி. மாரிமுத்துக்கு போன் செய்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

“தண்ணி வரலைன்னா என்கிட்ட ஏண்டா கேட்குற...'' என்று கவுன்சிலர் எகிற... “உங்களுக்குத் தான்யா ஓட்டு போட் டாங்க... நீங்கதானே கவுன்சிலரு... வேற யார்கிட்ட சொல்ல முடியும்...'' என்று பதி லுக்கு ஷேக் எகிற வாக்குவாதம் முற்றிப் போயிருக்கிறது.

வாக்குவாதத்தின் உச்சத்தில், “நீ எங்கடா இருக்க?'' என்று கவுன்சிலர் மாரி முத்து கேட்கவும், “நான் வீட்லதான் இருக்கேன்...'' என்று தைரியமாக பதில் சொல்லியிருக்கிறார் ஷேக்.

அவ்வளவுதான்!

அடுத்த சில நிமிடங்களில் ஷேக் வீட்டிற் குள் நுழைந்த கவுன்சிலர் மாரி முத்துவும் அவரது மகன் பாரத்தும் ஷேக், ஷேக்கின் தாயார், தம்பி நத்தர் ஷா ஆகியோரை சரமாரியாகத் தாக்கிவிட்டு சாவகாசமாக அங்கி ருந்து வெளியேறியுள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து போலீஸிடம் புகார் அளித்துள்ளார் ஷேக்கின் தம்பி நத்தர் ஷா. புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட மதுக்கூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கைப் பதிவு செய்யாமல் "நான் விசாரிக்கி றேன்' என்று மட்டும் சொல்லி அனுப்பியிருக் கிறார்.

இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கவுன்சிலர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுக்கூர் இளைஞர்கள் உறுதியேற்றபடி இருக்க... இத்தகவலை அறிந்த தேமுதிகவின் மதுக்கூர் நகர அவைத் தலைவரான ராவுத்தர் ஷா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் நிர்வாகிகளின் கவனத்திற்கு விஷயத்தைக் கொண்டு போயிருக்கிறார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் நிர்வாகிகளான செய்யது, அன்வர், ஜெபர் அலி, ஃபைஸல், ஷேக், மதுக்கூர் மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தேமுதிக ராவுத்தர் ஷாவும் - தாக்குதலுக் குள்ளான ஷேக் வீட் டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு தாக்குதலில் ஈடுபட்ட மாரிமுத்து மற்றும் அவரது மகன் பாரத் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியு றுத்துவோம் என உறுதியளித்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்த பிற இஸ்லாமிய அமைப்புகளும் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர) ஐஎன்டிஜே நிர்வாகிகளுடன் இணைந்து காவல் நிலை யம் சென்று குற்றவாளிகள் மேல் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

விவகாரம் பெரிதாவதை உணர்ந்த கவுன்சி லர் மாரிமுத்து தரப்பு, மதுக்கூர் பேரூராட்சித் துணைத் தலைவர் ஆனந்த் மற்றும் அதிமு கவைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்திக்கிறார். அவரை காப்பாற்றும் வகையில் முஸ்லிம் அமைப்புக ளின் பிரதிநிதிகளோடு அதிமுக பிரமுகர்கள் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்க... முஸ்லிம் அமைப்பு களின் பிரதிநிதிகளோ, “தாக்குத லுக்குள்ளான குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்ல நீங்கள் யாரும் வரவில் லையே! தாக்குதலில் ஈடுபட்டவரை காப்பாற் றவருவது நியாயமா?'' எனக் கேட்டதோடு, மாரிமுத்து மீது வழக்கு பதியுமாறு இன்ஸ் பெக்டருக்கு அழுத்தம் கொடுத்தனர்.

கவுன்சிலர் மாரிமுத்து 2 மணி நேரம் காவல் நிலையத்தில் இருந்தாலும் அது கட்சிக்கு அவமானமாகப் போய்விடும் என அதிமுக பிரமுகர்கள் கெஞ்சிய நிலையிலும் அதற்கு உடன் படாத முஸ்லிம் அமைப்புக ளின் நிர்வாகிகள், “தவறு செய்தவருக்கு சப் போர்ட் பண்ணாதீங்க...'' என்படியே சமாதா னத்திற்கு மறுத்துவிட்டனர்.

மாரிமுத்து மற்றும் அவரது மகன் பாரத் மீது 294பி, 326 உள்ளிட்ட பிரி வுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு கடந்த 1ம் தேதி முழுவதும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் மறுநாள் 2ம் தேதி பட்டுக் கோட்டை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியபின் விடுவிக்கப்பட்ட னர்.

மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அடிப்படை வசதிகளுக்கு பொறுப் பேற்று இருக்கக் கூடியவர்கள், மக் களின் குரலுக்கு செவி சாய்க்காமல் அவர்களுக்கு எதிராக வன்முறை யைப் பிரயோகிப்பது என்பது மக்கள் பிரதிநிதியின் செயலல்ல... அது ரவு டித்தனம். அதைத்தான் தனது பொறுப்பை மறந்து செய்திருக்கிறார் கவுன்சிலர் மாரி முத்து.

இனியாவது மக்கள் பிரதிநிதியாக நடந்து கொள்ள அவர் முன் வர வேண்டும் என்பதே 4வது வார்டு மக்களின் விருப்பமாக உள்ளது

Pin It