கடந்த ஒரு மாதத்திற்குள் சென்னை நகரத்தில் மட்டுமே இரண்டு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறி சில தினங்களுக்கு முன் சென்னை வேளச்சேரி பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டர் கொலைகள் அவர்களுக்கே தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது.

மனித உரிமை அமைப்புகள் இந்த என்கவுண்ட்டரை கண்டித்து வருகின்றன. வங்கிக் கொள்ளையர்கள் என சந்தேகப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது பற்றி விளக்கம் தாருங்கள் என தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்.

என்கவுண்ட்டர் செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்பதால், பீகார் மாநில சட்டமன்றத் தில் சென்னை என்கவுண்ட்டர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. இதன் காரண மாக தமிழக அரசிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளச் சொல்லி அழுத் தம் கொடுத்து வருகிறது பீகார் அரசு.

ஆனால் தமிழக போலீúஸô என்வுண்ட் டரில் கொல்லப்பட்டவர்கள் கொள்ளையர் கள்தான் என உறுதி காட்டி வருகிறது. ஆயி னும், அதற்கான காரணங்களும், என்கவுண்ட்டர் சம்பவங்களும் தமிழக காவல் துறையின் கூற்றுக்கு வலுசேர்ப்பதாக இல்லை.

என்கவுண்ட்டர் நடத்தி விட்டு காவல் துறை கூறுகின்ற வழக்கமான காரணங்களாகவே இருக்கின்றன என்ற விமர்சனம் தான் பரவலாக தமிழக காவல்துறை மீது எழுப்பப்படுகிறது.

தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை கலெக்டருக்கும் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸில், "வங்கிக் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப் பட்ட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்ப வம்' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

என்கவுண்ட்டர் குறித்து கமிஷ்னர் திரி பாதி செய்தியாளர்களிடம் பேசியதை, "சந்தேகப்பட்டோம்; சுட்டுக் கொன்றோம்' என்ற தலைப்பில் சில ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தியை வெளியிட்டிருந்தன. ஆக, இந்த என்கவுண்ட்டர் கொலை என்பது சந்தேகத் தைத்தான் உறுதிப்படுத்தியுள்ளது.

சமூக விரோதிகளை காவல்துறை கடந்த காலங்களில் என்கவுண்ட்டர் செய்த போதெல்லாம் விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளான நிலை தெரிந்தும் அதற்கான முன்னேற் பாடுகளுடன் வேளச்சேரி என்க வுண்ட்டரை நடத்தவில்லை. மோதல் கொலையில் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபடும். ஆனால் வங்கிக் கொள்ளையர்களுடனான மோதலில் போலீஸ் சொல்வதை மக்கள் ஏற்க வில்லை.

வீட்டில் தங்கியிருந்த கொள் ளையர்கள் முதலில் சுட்டதாக வும், 2 இன்ஸ்பெக்டர்கள் காய மடைந்ததாகவும் அதன் பின்னரே நாங்கள் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றோம் என் றும் போலீஸ் சொல்கிறது. ஆனால் சுடப்பட்டவர்களில் 4 பேருடைய தலையில்தான் குண்டு பாய்ந்திருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்ற கேள் விக்கு போலீஸ் தரப்பில் பதிலில்லை.

இரவு 10.30 மணிக்கே யாரும் வெளியே வர வேண்டாம் என போலீஸ் எச்சரித்ததாக ஏரி யாவாசிகள் கூற... போலீஸார் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல்தான் என் கவுண்ட்டரை நடத்தினோம் என்கிறது.

சுடப்பட்டவர்கள் உண்மையிலேயே கொள்ளையர்கள்தான் என்றால்... அவர் களை உயிருடன் பிடிப்பதற்கான குறைந்தபட்ச முயற்சியைக்கூட போலீஸ் மேற் கொள்ளவில்லை என மனித உரிமை அமைப்புகள் சொல் வதை மறுக்க முடியவில்லை.

ஒன்றுமில்லாத சாதாரண நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வீடியோ கிராஃபரோடு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியை படம் பிடிக்கும் போலீசார் இந்தக் கொள் ளையர்கள் ஆபத்தானவர்கள் என்று அறிந் திருந்தும் தங்கள் மீது களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கையுணர் வோடு வீடியோ கிராஃபரோடு சென்று என் கவுண்ட்டரை நிகழ்த்தியிருந்தால் அவர்கள் தான் முதலில் சுட்டார்கள் என்று சத்தியம் செய்து சொல்லும் நிலை போலீசுக்கு ஏற்பட்டிருக்காது.

கொள்ளையர்கள் பதுங்கியிருந்த வீட்டி லிருந்து 7 துப்பாக்கிகளை கைப்பற்றியதாகக் கூறும் போலீஸ் அந்தத் துப்பாக்கிகளிலி ருந்து எத்தனை குண்டுகள் வெளியேறியுள்ளன? அது எந்த வகை குண்டு கள் என்பது போன்ற எந்த விபரத்தையும் தரவில்லை என்பது காவல்துறையே துப்பாக்கியை வைத்து பின் னர் எடுத்திருக்குமோ என்று எழும் சந்தேகத்தை உறு திப்படுத்துவதாக உள்ளது.

எதிர் தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் இரண்டு இன்ஸ்பெக்டர்களின் உடலிலி ருந்து துப்பாக்கி குண்டுகள் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இதுபோன்று இன்னும் கிளப்பப்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு போலீஸ் தரப் பில் "நோ கமெண்ட்ஸ்'தான்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றதும் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்பதைத்தான் முன்னிலைப்படுத்தினார். பொது மக்கள் மத்தியிலும், அம்மா ஆட் சிக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற கருத்து நிலவியது. ஆனால் சமீப காலமாக கொலை, கொள்ளை என்ற செய்திகள் மீடியாக்களில் அதிகளவில் இடம் பிடித்திருக்கின்றன.

கலைஞர் டி.வி.யில் கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களை மட்டும் கவனித்து ஃபோகஸ் செய்யுமாறு அந்த டி.வி. யின் செய்தியாளர்களுக்கு அசைன்ட் மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணுமளவிற்கு நாட்டில் நடக்கும் வன்முறை, கொள்ளை, கொலைச் சம்பவங் களைத் தேடிப் பிடித்து ஒளிபரப்புகிறது கலைஞர் தொலைக்காட்சி.

முதல்வர் ஜெயலலிதாவின் இமெஜை இவை சற்றே டேமேஜ் ஆக்கியிருக்கின்றன. எனவே சட்டம் - ஒழுங்கு கேள்விக் குறியா வதை தடுத்து நிறுத்தவும், மேலிடத்தை திருப்திபடுத்தவும் மொழி தெரியாத - கேட்பதற்கு நாதியில்லாத வட மாநில கட்டிடத் தொழிலாளிகளை போலீஸ் போட்டுத் தள்ளியிருக்கிறது என்ற விமர்சனத்தையும் கேட்க முடிகிறது. நம்மைப் பொறுத்த வரை நாட்டில் கடுமையான சட்டங்கள் வேண்டும். பணத்தை இழந்து, நகைகளை இழந்து பாதிக்கப் பட்டு நிற்கும் மக்களின் மனநிலையிலிருந்துதான் கொள் ளையர்களைப் பார்க்க வேண் டும். அதனால் என்கவுண்ட்டர் என்பதும் ஏற்புடையதுதான்.

சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருக்க, மக்கள் அமைதியாக வாழ சமூக விரோதிகள் வீழ்த்தப் பட்டுதான் ஆக வேண்டும். ஆனால் அவர்கள் சமூக விரோதிகளாக, கொள்ளையர்களாக, கொலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது இதில் மிக முக்கியம்.

போலீஸ் சுட்டது கொலைக் காரர்களைத்தான் என்றே வைத் துக் கொள்வோம். ஆயினும் சட் டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க, இருக்கின்ற அத்தனை வாய்ப்புகளும் பயன் படுத்தப்பட வேண்டும். ஆனால் அது குறித்த அக்கறை இல்லாமல் தமிழக போலீஸ் இந்த என் கவுண்ட்டரை நடத்தியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

என்கவுண்ட்டர் நடந்திருப் பது உண்மையிலும் உண்மை. ஆனால் அது உண்மையான என் கவுண்ட்டர்தான் என்று சந்தேகத் திற்கிடமில்லாமல் நிரூபிக்கும் பொறுப்பு தமிழக காவல் துறைக்கு இருக்கிறது. இதை தமிழக போலீஸ் செய்யாதவரை சட்ட அங்கீகாரம் பெற்ற சீருடை அணிந்த குற்றவாளிப் படை நடத்திய என்கவுண்ட்டராகவே இதனை மக்கள் பார்ப்பார்கள்.

இதற்காகத்தானோ?

சென்னை என்கவுண்ட்டர் சம்பவத்தில் தமிழக போலீஸார் மீது பல்வேறு விமர்சனங்கள் பல தரப்பிலிருந்தும் முன் வைக்கப் படுகிறது. அதில் முக்கியமாக கவனிக்கப்படக் கூடிய விமர்சன மாக இருப்பது (போலி என்கவுண்ட்டரில்) "குஜராத்தாக மாறுகிறதா தமிழகம்?' என்ற விமர்சனம்தான்!

தமிழகத்தில் மோடியை அழைத்து வந்து மரியாதை செய்யும் துக்ளக் சோ மற்றும் இல. கணேசன் வகையறாக் கள் அடிக்கடி குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்கள் முன்னுதாரண மாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். அந்த முன்னு தாரணம் இதற்காகத்தானோ என்பதை துக்ளக் சோவிடம் கேட்க வேண்டும் போலிருக்கிறது.

Pin It