கீழக்கரை கிழக்குத் தெரு... தனது ஆட்டோவை ரோட்டோரம் நிறுத்தி வைத்து சவாரிக்காக காத்திருந்தார் சித்தீக் என்ற ஆட்டோ டிரைவர். மாலை 6 மணியள வில் ஒரு பெண்மணி தனது குழந்தை யோடு சித்தீக்கின் ஆட்டோவில் ஏறி சூப்பர் மார்க்கெட்டுக்குப் போப்பா... எனச் சொல்ல... ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார் சித்தீக்.

சூப்பர் மார்க்கெட் வாசலில் ஆட்டோ நிற்பதற்குள் ஆட்டோவின் முன் திடீரென தோன்றிய கீழக்கரை காவல் நிலைய எஸ்.ஐ. கார்மேகம், “வண்டியை ஆஃப் பண்றா...'' என்றபடியே சித்தீக்கை நெருங் கினார்.

இதோ ஆட்டோ டிரைவர் சித்தீக்கே சொல்கிறார்.

“சார்... வண்டியில இருந்த பாசஞ்சர் இறங்குறதுக்கு முன் னாடியே வண்டிய ஆஃப் பண் ணச் சொல்றீங்களே அவங்க இறங்கட்டும் சார்னு எஸ்.ஐ. கிட்ட சொன்னேன். வண்டி யில ஒரு அம்மா குழந்தையை வச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்களும், கொஞ்சம் பொறுங்க சார். நான் இறங்கிக்கிறேன்னு சொன்னாங்க. உங்களுக்கு எது வும் பிரச்சினை இல்லம்மா... நீங்க போங்க... இவன்தான்...! என்று சொன்னபடியே, “ரிக் கார்டை (லைசென்ஸ், ஆர்.சி. புக், இன்ஷு ரன்ஸ்) எட்றான்னாரு.

“சார்... இது சொசைட்டி வண்டி. எம்பேர்ல இல்ல. ஆனா ரிக்கார்டு கரெக்டா இருக்கு''ன்னு சொல்லி ரிக்கார்டோட ஜெராக்ஸ் காப்பியை காட்டினேன். எல்லாத் தையும் பார்த்தாரு எஸ்.ஐ. எல்லாம் கரெக்டா இருந்துச்சு.

அப்புறம், “லெஃப்ட் இன்டிக் கேட்டரைப் போடு, ரைட் இன்டிக்கேட்டரைப் போடு''ன் னாரு. அதுவும் எரிஞ்சுச்சு. “ஹெட் லைட் டைப் போடு''ன்னாரு. அதுவும் கரெக்டா இருந்துச்சு. அப்புறமா, “ஹெட் லைட்டுக்கு நடுவுல கருப்பு ஸ்டிக்கர் சரியா தெரியலையே ஃபைன் வாங்கிக்கோ''ன்னாரு.

அப்ப நான், “எல்லா ரெக்கார்டும் இருக்கு. ஃபைனை ஏத்துக்க மாட்டேன்''னு சொன்னேன். அப்புறம், “ஏன் நோ பார்க்கிங்குல நிக்கிற...?''ன்னு கேட்டாரு. “நீங்கதானே சார் நிறுத்தினீங்க''ன்னு சொன்னப்போ... “வண்டிய ஸ்டேஷனுக்கு எடுத்துட்டுவா''ன்னாரு. “என்ன சார்... நீங்க என்ன ஆர்.டி.ஓ.வா?

டிராஃபிக் போலீஸ?''ன்னு கேட் டேன்.

உடனே, “என்னையே எதிர்த்துப் பேசுறியா?''ன்னு என் சட் டையை கொத்தா பிடிச்சு இழுத்தாரு. இதையெல்லாம் பார்த்துக் கிட்டிருந்த கடைகாரங்கள்ல சில பேரு வந்து, “என்ன சார்... நடு ரோட்டுல நின்னுக்கிட்டு அராஜகம் பண்றீங்க... அவன் என்ன குற்றவாளியா?''ன்னு சத்தம் போட ஆரம்பிச்சவுடனே வயர்லஸ்ல இன்ஸ்பெக்டருக்கு மெஸ்சஜ் கொடுத்து அவரை ஸ்பாட்டுக்கு வர வச்சுட்டார்.

அதுக்குள்ள அந்தப் பகுதியில மக்கள் கூடிட்டதால, என் லைசென்ஸ், ஆர்.சி.புக்கோட ஜெராக்ஸ் மட்டும் எடுத்துக் கிட்டு போயிட்டாங்க...'' என்று நடந்த சம்பவத்தை சீன் பை சீனாகச் சொன்ன சித்தீக்,

“சார் என் லைசென்ஸ் காப்பியை வச்சுக்கிட்டு பின்னாடி ஏதாவது பொய் கேஸ்ல என்னை சேர்த்துடுவாங்களோன்னு பயமா இருக்கு...'' என்றார்.

தமிழக போலீசைப் பற்றி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரே என்று நம் மனதில் தோன்றினா லும், “அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க. பயப்படாதீங்க...'' என அவருக்கு ஆறுதல் சொல் லிக் கொண்டிருந்தபோதே சம்ப வத்தை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் நம்மிடம்,

“சார் கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி நீங்க வந்திருந்தா நீங்களே போலீஸ் அராஜகத்தைப் பார்த் திருப்பீங்க. எஸ்.ஐ. கார்மேகம் வயர்லெஸ்ல இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டதும் அவருலத்தி சார்ஜ் பண்ணி கூட்டத்தை கலைங்கன்னு சொல்லிக்கிட்டே வந்தாரு. வந்து சித்தீக்கைப் பார்த்து, “இந்தப் பையனா...?''ன்னு கேட் டுக்கிட்டே “வண்டிச் சாவியைக் கொடு''ன்னு கேட்டாரு. அதற்கு, “சாவியைத் தர முடியாது; நீங்க வேணா வண்டியை எடுத்துக் கிட்டு போங்க''ன்னு சித்தீக் சொன்னாரு. கூட்டம் ஜாஸ்தியா னதைப் பார்த்தவுடன் “நீ எப்படி வண்டி ஓட்டுறன்னு பார்க்கு றேன்''னு சித்தீக்கை மிரட்டிட்டுப் போயிட்டாரு...'' என்றார்.

நடு ரோட்டில் நின்று போக்கு வரத்துக்கு நெரிசலை உண்டு பண் ணியபடியே ஆட்டோ டிரைவரி டம் தனது பலத்தைக் காட்டிய கார்மேகத்தைப் பற்றி குமுறித் தீர்க்கின்றனர் கீழக்கரைவாசிகள்.

“இந்த எஸ்.ஐ. கார்மேகம் ரொம்பவே அடாவடியா நடந்து கொள்கிறார். சில தினங்களுக்கு முன்பு கிழக்குத் தெருவில் ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத் திய எஸ்.ஐ. கார்மேகம், ஆட்டோ விலிருந்த சீட்டைக் கழற்றி அருகி லிருந்த பள்ளிவாசலுக்குள்ளே வீசியிருக்காரு.

இது சம்பந்தமா ஸ்பெஷல் பிராஞ்ச் எஸ்.ஐ. ஜேம்ஸ் சார் கிட்ட நான் ஓரலா கம்ப்ளைன்ட் பண்ணேன். சீட்டை கழட்டின வரு எங்கேயாவது தூக்கிப் போட வேண்டியதுதானே. பள் ளிவாசல் புனித ஸ்தலம்னு தெரி யாதா எஸ்.ஐ.க்கு. அங்கு ஏன் தூக்கிப் போடனும்'' என்று கோபத்தை வெளிப்படுத்தினார் ஐஎன்டிஜேவின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்.

இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கும் எஸ்.ஐ. கார் மேகத்தைப் பற்றி மாவட்ட எஸ். பி.க்கும், காவல்துறை தலைவருக்கும் புகார் மனு அனுப்பியிருக்கும் சித்தீக், கார்மேகம் மீது மான நஷ்ட வழக்குத் தொடரவும் தயாராகி வருகிறார்.

கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் சம்பவம் குறித்து பேசினோம்.

“அந்த டிரைவர் பாசஞ்சரை இறக்கி விடும்போது வண்டியை எடுப்பான்னு எஸ்.ஐ. சொல்லியி ருக்காரு. அப்ப, சரி சார்... எடுத்து டறேன்னுல சொல்லனும்... அத விட்டுட்டு நீங்க யார் சார் சொல் றதுக்கு? நீங்க என்ன ஆர்.டி.

ஓ.வா? டிராபிக் போலீசுன்னு கேட்டா... அப்புறம் அங்க எஸ்.ஐ. க்கு என்ன வேலை? எஸ்.ஐ. சொல்லாம யாரு சொல்வாங்க? டிராபிக் இன்ஸ்பெக்டர்தான் வரணுமாம்!

அந்தப் பையன் கொஞ்சம் மெண்டலி டிஸ்ஆர்டர் பர்ஸனா இருக்கான். ஜமாஅத்துல இருந் தெல்லாம் வந்து சந்திச்சாங்க. அவனைத்தான் அவங்க கண்டிச் சிருக்காங்க...'' என்றவரிடம்,

“பொது மக்கள் பார்க்குற மாதிரி இப்படி சட்டையைப் பிடிச்சு இழுத்தா அது காவல்து றைக்குத்தானே கெட்டப் பெயரை ஏற்படுத்தும்?'' என்றோம்.

“சார்... காவல்துறையை யார் தான் சார் பாராட்டுறாங்க! அந்த சம்பவம் நடந்த ஸ்பாட்டுக்கு நானே போனேன். நான் கேட்ட துக்கே... சார் நீங்க வண்டிய வேணா எடுத்துட்டுப் போங்கங் கிறான். எனக்கே டென்ஷன் ஆயிடுச்சு. சரி அவன் புத்தி அவ்வள வுதான்னு நினைச்சுக்கிட்டேன்.

வண்டியை எடுத்துடறேன் சார்னு சொல்லியிருந்தா பிரச் சினை முடிஞ்சிருக்கும்ல. ஆனா நீங்க யாரு சார்... ஆர்.டி.ஓ. சொல் லட்டும்னு சொன்னா யாரா இருந்தாலும் டென்ஷன் ஆகத் தானே செய்வாங்க. பொது மக்கள் வேடிக்கை பார்க்கும்போது யூனிபார்ம் போட்ட போலீஸ் ஃபோர்ஸ் காட்டலைன்னா அப் புறம் போலீஸ் வேலை செய்ய முடியாது இல்ல...'' என்றவரிடம்,

“போலீஸ் நல்ல மாதிரியா அணுகலாமே. இப்படி நடு ரோட்டுல சட்டையைப் பிடிச்சு இழுக்குறது நல்லாவா இருக்கு?'' என்று மீண்டும் கேட்டதும்,

“அப்படியெல்லாம் ஒண்ணு மில்ல சார். உங்களுக்கு யாரோ தவறான தகவலைத் தந்திருக் காங்க. நானே ஸ்பாட்ல இருந் தேனே!'' என்று மறுத்தார் இன்ஸ்பெக்டர்.

நடு ரோட்டில் ஆட்டோ டிரை வரின் சட்டையைப் பிடித்து எஸ்.ஐ. இழுக்கின்ற போட்டோ நம்மிடம் இருக்கின்றது என்று நாம் சொன்னதும்...

“சார் அந்த போட்டோவை என் செல்லுக்கு அனுப்பி வையுங்களேன். நான் என்னன்னு விசாரிக்கிறேன்...'' என்றார்.

Pin It