உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஆஸம்கர் முஸ்லிம்கள் நிறைந்த ஊர். சமீபத்தில் நடை பெற்ற உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தலின் போது அரசியல்வாதிகள் அதிகளவில் பிரச்சாரம் செய்த ஊர். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆஸாத், உ.பி. முஸ்லிம்களுக்கு 9 சதவிகித இட ஒதுக்கீடு வழங் கப்படும் என அறிவிப்பு செய்த ஊர். இவை எல்லா வற்றையும் விட, டெல்லி காவல்துறையினரால் அதிக ளவில் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என்று பிடித்துச் செல்லப்படும் ஊரும் ஆஸம்கர்தான்.

இங்குள்ள ஜம்மியத்துல் ஃபலா என்கிற மதரஸாவில் படித்துக் கொண்டிருந்த காஷ்மீர் மாணவர்கள் இருவரை கடந்த 24ம் தேதி அதிகாலையில் அதிரடி யாக கைது செய்த உத்திரப் பிர தேச தீவிரவாதத் தடுப்புப் படை (ஏ.டி.எஸ்.) 4 நாட்களாகியும் அவர்களைப் பற்றிய தகவலை பெற்றோருக்குத் தெரிவிக்காம லும், அவர்களை நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தாமலும் தடுப்புக் காவலில் வைத்து விசா ரித்து வருகிறது.

உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது இப்பிரச்சினை. இரண்டு இளைஞர்கள் ஏ.டி.எஸ். படையினரால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கும் விவகாரத் தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகிலேஷ் யாதவிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சஜ்ஜாத் அஹ்மத் பட், 5 வருடத்திற்கான (அரபிக் அவ்வல்) அர பிக் பாடத்தில் முதலாம் ஆண்டு மாணவர். வசீம் அஹ்மத் பட் அதே பாடத்தின் 2ம் ஆண்டு மாணவர். இருவரும் உறவினர்கள். இருவரும் ஆஸம்கர் மதரஸôவில் படித்து வரும் நிலையில், வசீம் அஹ்மதின் சகோதரர் காஷ்மீரிலிருந்து சிகிச்சைக்காக டெல் லிக்கு வந்திருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக மதரஸாவில் அனுமதி பெற்று டெல்லி செல்லத் தயாரான இருவரும் ஆஸம்கரிலிருந்து கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 23ம் தேதி புதன் கிழமை இரவு பயணித்தனர்.

இரயில் அலிகார் ரயில் நிலை யத்தை அடைந்ததும் அதி நவீன துப்பாக்கிகளுடன் இரயிலுக்குள் ஏறிய உத்திரப் பிரதேச ஏ.டி.எஸ். படையினர் சஜ்ஜாத்தையும், வசீமையும் பிடித்துக் கொண்டு பறந்தனர்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத் தும் ஜம்மியத்துல் ஃபலா மதரஸாவின் இயக்குனரான மவ் லானா முஹம்மது தாஹீர் மதனி, “டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் தங்கள் சகோதரரைக் காண புறப்பட்ட மாணவர்கள் இருவ ரும் 24ம் தேதி டெல்லிக்கு போய் சோராததால் அவர்களது பெற்றோர் மதரஸôவிற்கு தொடர்பு கொண்டு தகவலைச் சொன்னார் கள்.

மறுநாள் வெள்ளிக்கிழமை இரண்டு இளைஞர்கள் கைஃபி யாத் இரயிலில் ஏ.டி.எஸ். படை யினரால் கைது செய்யப்பட்ட தாக உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன...” என செய்தியா ளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஏ.டி.எஸ். படையினரால் மாணவர்கள் கடத்தப்பட்டதை அறிந்த மதரஸô நிர்வாகிகள் தங் களது மாணவர்கள் இருவரைக் காணவில்லை என உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர். ஆஸம்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிட மும் முறையிட்டனர்.

இரண்டு மாணவர்களும் அப் பாவிகள், அவர்கள் பாதுகாப்பு அமைப்புகளால் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்கின்ற னர் மதரஸா ஆசிரியர்கள்.

மதரஸா மாணவர் ஏ.டி.எஸ். படையினரால் கடத்தப்பட்ட தக வலை அறிந்த சமாஜ்வாதி கட்சி யின் தலைவர்களில் ஒருவரும், இந்திய முஸ்லிம் அரசியல் கவுன் சில் அமைப்பின் தலைவருமான டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி, இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்.

அதோடு, முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரியான ஜக் தேவ் சிங் கைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையில் கவனம் எடுத்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியிருக்கி றார்.

“இது அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க தீட்டப்பட்டிருக்கும் சதித்திட்டத்தின் வெளிப்பாடு...” எனக் கூறும் டாக்டர் ரஹ்மானி, “இளம் முதல்வரான அகிலேஷ் யாதவ் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிதியை நிலைநாட்ட வேண்டும். ஏனெனில் உத்திரப் பிரதேச ஏ.டி.எஸ். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

இது உ.பி. அரசு மற்றும் முதல்வரின் இமேஜை பாதிக்கும் என்பதால் உடனடியாக நடவ டிக்கை எடுத்து அப்பாவிகள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்...” எனத் தெரிவித்திருக் கிறார்.

நாடு முழுவதுமுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைத்து அவர்களை சித்திரவதை செய்யும் தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதிதான் ஆஸம்கர் மதரஸô மாணவர்கள் ஏ.டி.எஸ். படையினரால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பது.

பாதுகாப்பு அமைப்புகளின் தொடர்ச்சியான இந்த சட்ட மீறல்களை மத்திய உள்துறை அமைச்சகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏ.டி.எஸ். படை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்கிற அதிகார வெறியோடு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடு வது மும்பை, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் தொடர்ச் சியாக நடந்து வரும் நிகழ்வுகள் தான்.

தற்போது உ.பி.யிலும் தனது வேலையைக் காட்டத் துவங்கியி ருக்கிறது ஏ.டி.எஸ். படை

- அபு

Pin It