கோவை சிறையில் 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் விடுதலையான அப்துல் நாசர் மதானியை பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புபடுத்தி கைது செய்த பெங்களூரு காவல்துறை அவரை பெங்களூரு சிறையில் அடைத்து வைத்திருக்கிறது.

மதானி நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு போடும்போதெல்லாம் பிணை கிடைக்கவிடாமல் செய்வதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளதோ அத்தனையையும் பிரயோகிக்கிறது பெங்களூரு காவல்துறை.

கடந்த வாரம் மீண்டும் பெங்களூர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு செய்திருந்தார் மதானி. இந்த விசாரணையின்போது மதானிக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட வாக்கு மூலங்களைத் தந்து பிணை கிடைக்கவிடாமல் செய்து விட்டது பெங்களூரு காவல் துறை.

மதானிக்காக அவரது சொந்த வழக்குரைஞரான உஸ்மான் மற்றும் பிரபல வழக்குரைஞர்களான ஜவஹர்லால் குப்தா, சாந்தி பூஷன், சுஷீல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகி மதானி மீது போடப்பட்டது பொய் வழக்கு என பல மணி நேரங்கள் வாதாடினர். ஆயினும் மதானியின் பிணை குறித்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது பெங்களூரு நீதிமன்றம்.

மதானி வழக்கை ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட’த்தின் (UAPA) கீழ் கொண்டு வந்திருக்கிறது பெங்களூரு காவல்துறை. அரசுத் தரப்பு வழக்குறிஞராக முன்பு இருந்த ருத்ரசுவாமி ராஜினாமா செய்ததற்கும் புதிய அரசு வழக்கறிஞர் பொறுப்பு ஏற்றுக் கொண்டதற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மதானி வழக்கில் UAPA-வைக் கொண்டு வந்திருக்கிறது காவல்துறை.

புதிய அரசு வழக்கறிஞர் பொறுப்பேற்ற பின் மதானியின் வழக்கறிஞர் குழுவிற்கு பிரதிகளை கொடுக்காமல் புதிய டாக்கு மெண்ட்டுகளை இந்த வழக்கில் தாக்கல் செய்திருக்கிறார்.

இப்படி மதானி வழக்கில் UAPAவைக் கொண்டு வந்தது அர்த்தமற்றது என்றுதான் மேற்சொன்ன மதானியின் வழக்குரைஞர் குழு நீதிமன்றத்தில் வாதங்ளை வைத்தி ருக்கிறது.

பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு குறித்த வழக்கே புனையப்பட்டது என்ற நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஏனை யோர், நீதிமன்றத்தின் மீது எங்க ளுக்கு நம்பிக்கையில்லை என விசாரணையின்போது தெரிவித் திருந்தனர். அப்போது மதானி மட்டும் அமைதியாக இருந்தார். மதானியின் கருத்தை நீதிமன்றம் கேட்டபோது,

“இந்த நீதிமன்றம் குற்றம்சாட் டப்பட்டிருப்பவர்களுக்கு நீதி வழங்கும் என்கிற மாதிரியான தோற்றத்தை கூட ஏற்படுத்தத் தவறிவிட்டது. இருப்பினும் இந்த நீதி மன்றத்தின் மீதான நம்பிக் கையை நான் இழந்து விட வில்லை என்பதை நான் கண்டிப் பாகச் சொல்வேன்...” என பதில ளித்திருக்கிறார். அதே சமயம், மேல் முறையீடு செய்யப் போவதாக வும் மதானி அறிவித்திருக்கிறார்.

மதானி மீது பெங்களூரு போலீஸ் பொய் வழக்குகளை ஜோடித்திருக்கிறது என்பதற்கு சில லாஜிக்கான பாயிண்டுகள் போதுமானதாக இருக்கின்றன.

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியிருந்து பெங் ளூரு தொடர் குண்டு வெடிப் புக்கு மதானி சதித் திட்டம் தீட்டி னார் என்பதுதான் பெங்களூரு காவல்துறை கூச்சநாச்சமில்லா மல் மதானி மீது வைக்கும் குற்றச் சாட்டு. ஆனால் உண்மை நிலை யென்னவென்றால்... கோவை சிறையிலிருந்து 10 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் மதானி விடுதலையானபோது, மதானிக்கு இரண்டு காவல்துறை அதிகாரிக ளைக் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மதானியுடனே எப்போதும் இருப்பவர்கள் இந்த பாதுகாப்பு அதிகாரிகள். அதோடு, கேரள போலீஸ் வேறு மதானியை மிக நெருக்கமாக கண்காணித்து வரு கிறது. இந்த நிலையில் மதானி எப்படி குடகு பகுதிக்கு தனியா கச் சென்று பெங்களூரு குண்டு வெடிப்பை நடத்த சதித் திட்டம் தீட்ட முடியும்?

இத்தனை பாதுகாப்பிலி ருந்தும் கண்காணிப்பிலிருந்தும் தப்பித்து, கேரள மக்களிடம் மதானி பரிச்சயமான வர் என்ற வகையில் அவர்களின் பார்வைக ளுக்கும் படாமல் அதுவும் சக்கர நாற்காலியில் நடமாடும் ஒருவ ரால் குடகு பகுதிக்குச் சென்று சதித் திட்டத்தில் ஈடுபட முடி யுமா?

பச்சைக் குழந்தைக்கும் தெரியும் இந்த அறிவு பெங்களூரு காவல்துறைக்கு இல்லாமல் போனது ஆச்சர்யம் என்று சொல் வதா? அறிவு கெட்டத்தனம் என்று சொல்வதா? இதுபோன்ற கேள்விகளுக்கு பெங்களூரு காவல் துறையினரிடத்தில் இதுவரை பதிலில்லை.

பதிலில்லாத இந்தக் கேள்வி கள் மதானியை விடுதலை செய்து விடுமா? விடுதலை செய்துவிட முடியாது. ஏனெனில் சாதாரண வழக்குகளில் குற்றம்சாட்டப்பட் டால் அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு விசா ரணை அமைப்புகளுக்கு உண்டு.

ஆனால், தடா, பொடா, UAPA போன்ற கறுப்புச் சட்டங்களின் கீழ் ஒருவர் குற்றம்சாட்டப்பட் டால்... தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கே உண்டு.

அதே சமயம், நீதிமன்றங்கள் பொதுவாகவே போலீஸôருக்கு முன் கொடுக்கப்படும் சாட்சி வாக்குமூலங்களை ஆதாரங்க ளாக ஏற்றுக் கொள்வது கிடை யாது. ஆனால் சிறப்பு நீதிமன்றங் கள் இதுபோன்ற வாக்குமூலங் களை ஏற்றுக் கொள்கின் றன.

ஆக, கறுப்புச் சட்டங்களின் எல்லாமே பழி வாங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. போலீஸ் எது சொன்னாலும் உண்மை. அதை பொய் யென நாம்தான் நிரூபிக்க வேண் டும்.

தனக்கு பிடிக்காதவனை இவன் குண்டு வைத்தான் என்று போலீஸ் சொன்னால் அதற்கு என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனெனில் போலீஸ் பொய் சொல்லாது. அவ்வளவு நல்லவர்கள் நமது நாட்டு போலீசார்! இதற்கு பெயர் ஜனநாயகம்... மக்க ளாட்சி... மதச் சார்பின்மை... நம்புங்கள்.

- ஃபைஸ்

Pin It