ஆய்வு தரும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

அண்மையில் மஹாராஷ்டிரா மாநில சிறு பான்மை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட குழு மேற்கொண்ட ஆய்வில் மஹாராஷ்ட் ராவிலுள்ள மொத்த சிறைக் கைதிகளில் 36 சதவீத சிறைவாசிகள் முஸ்லிம்கள் என்ற அதிர்ச்சித் தக வலை வெளியிட்டுள்ளது.

சச்சார் கமிட்டி அறிக்கைக்குப் பின் ஃபாலோ அப் அறிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தின் நீதி மற்றும் குற்றவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் விஜய் ராகவன் & ரோஷினி நாயர் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

(2001 சர்வேபடி) மஹாராஷ் டிராவின் பொது ஜனத் தொகை யில் 10.6 சதவீதமாக இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை, சிறைவாசிகள் ஜனத் தொகை யில் 32.4 சதவீதமாக உள்ளது. தற்போதைய முஸ்லிம் சிறைவாசி களின் எண்ணிக்கை 36 சதவீத மாகும் என்று ஆய்வுக் குழுவி னர் அளித்த ஆய் வறிக்கை அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் சூடான விவாதங்களை எழுப்பி யிருக்கிறது.

கடந்த வாரம் இது தொடர்பாக மஹாராஷ்டிராவின் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் நசீம்கான் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியிருந்தார். இக்கூட் டத்தில், முஸ்லிம் இளைஞர்கள் குற்றச் செயலில் ஈடுபடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மட்டு மல்லாது... சிறையிலிருக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கு சட்ட உதவிகளை அளிப்பது, விடுதலைக்குப் பின்னர் அவர்க ளுக்கு மறு வாழ்வு அளிப்பது உள்ளிட்ட திட்டமிடல்கள் குறித்து விவா திக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் சிறைவாசிகளுக் கான இந்த திட்டங்களில் இல வச சட்ட உதவிகள், தொழிற்ப யிற்சி மற்றும் மனநல ஆலோ சனை முக்கிய அம்சமாகவும், பொதுவான முஸ்லிம் இளை ஞர்களுக்கு தொழில் வழிகாட்டு தல்கள் ஆகியவையும் அடங் கும். இது தனி செய்தியாக இருக்க...

டாக்டர் விஜய் ராகவன், ரோஷினி நாயார் ஆகியோர் மஹாராஷ்டிராவிலுள்ள 15 முக்கிய சிறைகளுக்குச் சென்று 339 முஸ்லிம் கைதிகளை சந்தித் துப் பேசியுள்ளனர்.

வழக்குகள் பதிவு செய்யப்ப டும் நேரத்தில் முஸ்லிம் குற்ற வாளிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக அடிக்கடி எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ராகவன் & ரோஷினி நாயர் அளித்த அறிக்கையில் ஒன் றும் கூறப்படவில்லை. ஆனால் இதற்கான காரணம் காவல்து றையினரின் கடுமையான கட் டுப்பாடுகள் என்கின்றனர் விஜய் ராகவனும், ரோஷினி நாயரும்.

“எங்கள் குழுவினரின் கேள்வி களுக்கு முதலில் ஜெயில் அதிகா ரிகளால் ஒப்புதல் பெறப்பட் டது...” என்று கூறும் ராகவன்,

“சிறைவாசிகளைச் சந்திக்கச் செல்வதற்கு முன் "மந்த்ராலயா' எனச் சொல்லப்படும் மஹா ராஷ்டிரா தலைமைச் செயலகத் திலுள்ள சில அதிகாரிகளை ஆய்வுக் குழு சந்தித்து தங்களின் ஆய்வுப் பணி குறித்து கூறிய பொழுது, அதில் சில முக்கிய அதிகாரிகள் (முஸ்லிம்) சிறைவாசிகள் குறித்த எண் ணிக்கையை கணக்கிட, முஸ் லிம் சிறைவாசிகளிடம் நேர் காணல் நடத்த அனுமதிய ளிக்க மறுத்து விட்டனர்.

இருப்பினும், சிறுபான் மைக் கமிஷனும், ஆய்வுக் குழுவினரும் பிடிவாதமாய் இருக்கவே, கேள்வித் தாளை நாங்கள் சரி பார்த்தே அனு மதிப்போம் என்ற நிபந்த னையுடன் ஒப்புக் கொண்ட னர். ஆயினும், முஸ்லிம் கைதி கள் விஷயத்தில் போலீசார் காட்டும் பாரபட்சம் மற்றும் சித் திரவதை தொடர்பான கேள்வி களை அவர்கள் கேள்வித் தாள்க ளிலிருந்து நீக்கிய பின்பே அனு மதித்தார்கள்...” என்கிறார்.

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு குற்றவாளிகள் தடைச் சட்டம் (டழ்ர்ட்ண்க்ஷண்ற்ண்ர்ய் ர்ச் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள் அஸ்ரீற்) 1958 குறித்து போதிய விழிப் புணர்வு இருந்தால் அவர்களில் பெரும்பாலானோரை காவல் துறை சிறைப்படுத்துவதில்லை. காரணம் குற்றம் சிறியதாக இருந்தால் சிறைப்படுவதை தவிர்க்கச் சொல்கிறது இந்தச் சட்டம்...” என்பதை சுட்டிக் காட் டுகிறார்கள் விஜய் ராகவனும், சீனியர் குற்றவியல் வழக்கறிஞ ரான மஜீத் மேமனும்!

இந்தி நடிகரான ஜான் ஆப் பிரஹாம் கண் மூடித்தனமாக கார் ஓட்டிய வழக்கில் இந்த சட்டத்தின் அடிப்படையில் தான் விடுவிக்கப்பட்டார் என் றும் மேற்கோள் காட்டுகிறார் மேமன்.

இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் 12 அல் லது 24 மாதங்களுக்குரிய உறுதி மொழிப் பத்திரத்தை நீதிமன்றத் தில் தாக்கல் செய்தால்... நீதிமன் றம் அவரது நடத்தையை கண் காணிக்க, சோதனைக் கால அல் லது தகுதிக்காண் அதிகாரியை நியமிக்கும். அவர் மீண்டும் குற் றச் செயலில் ஈடுபட்டு குற்ற வாளி என்று உறுதியானால் மட் டுமே அவருக்கு சிறைத்தண் டனை விதிக்கப்படும்.

இந்த வகையில், சிறிய அளவி லான சட்ட மீறல்களில் ஈடுபட் டவர்கள் சிறைபடுத்தப்பட்டிருக் கிறார்கள் என்ற உண்மையை இந்த அறிக்கை வெளிப்படுத்து வதாய் உள்ளது. விஜய் ராகவன் மற்றும் ரோஷினி நாயர் ஆகி யோர் முஸ்லிம் சிறைக் கைதிக ளிடம் நடத்திய நேர்காணலின் போது 75.5 சதவீத கைதிகள் முதன் முறையாக கைது செய்யப் பட்டிரக்கிறார்கள். 24.5 சிறைக் கைதிகள் மீண்டும் தவறு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார் கள் என்பது தெரிய வந்திருக்கி றது. இதன்படி பெரும்பான்மை கைதிகள் குற்றவாளிகள் அல்ல என்பது புலனாகிறது.

குற்றவாளிகள் தடுப்புச் சட் டத்தின்படி 75.5 சதவீத கைதி கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. இவர்கள் முதல் முறை யாக சட்ட மீறலில் ஈடுபட்ட வர்கள். ஆனால் முஸ்லிம்கள் என்ற வகையில் இவர்கள் மேல் காவல்துறையினர் பாகுபாடு காட்டியிருப்பது தெளிவாகிறது.

“30 சதவீத முஸ்லிம் சிறைவா சிகள் கைது செய்யப்பட்ட நேர த்தில் அவர்களின் உறவினர்களி டத்தில் பேசக் கூட அனுமதிக் கப்படவில்லை என்று தெரிய வருகிறது. இது குற்றம் சாட்டப் பட்ட ஒருவரின் உரிமையை மீறும் செயலாகும்...” என்கிறார் விஜய் ராகவன்.

மேலும், மஹாராஷ்டிரா வைப் பொறுத்தவரை முஸ்லிம் இளைஞர்கள் குற்றப்பட்டிய லில் ஏன் சேர்க்கப்படுகிறார்கள் என்று ஆராயும்போது பல கார ணங்கள் இருப்பது தெரிய வரு கின்றது.

வாழ்வாதாரத் தேவைகள், வரு மான வாய்ப்புகள் இல்லாமை, (குற்றம் செய்யத் தூண்டும்) பெரிய மனிதர்களின் அழுத்தம், போலீசுடனான மோதல் போக்கு, இதோடு முக்கியமாக இவர்கள் வாழ்கின்ற குடியிருப்பு பகுதி போன்றவை குற்றச் செயலுக்கு இந்த இளைஞர் களை இட்டுச் செல்கின்றன.

இரண்டாவது முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கும் சிறைவாசிகள் பலரிடத்தில் பேசியதில், அவர்கள் குழந் தைப் பருவத்திலிருந்தே சட்ட விரோதச் செயல்க ளுக்கு சாட்சிகளாக இருந்தே வளர்ந்து வந்திருக்கின்றனர் என் பது தெரிய வருகிறது.

இவர்களில் கணிசமானோர் ஆவணங்கள் மோசடி, கள்ள நோட்டுகள் தயாரித்தல், ஏமாற்று, மோசடி போன்ற வற்றில் ஈடுபட்டதற்காக கைது செய்யப் பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

இன்னும், சேரிப் பகுதிகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் வங்கிகளால் கருப்புப் பட் டியலில் வைக்கப்பட்டிருக்கி றார்கள். படித்தவர்கள் கூட வங் கிகளில் கடனுதவி பெறுவதற் காக போலி ஆவணங்களை தயாரித்துள்ளனர். சிலர் கடனு தவி பெறுவதற்காக போலி ஆவ ணங்கள் தயாரிக்க முகவர்க ளுக்கு பணம் கொடுத்துள்ளனர் - என்றெல்லாம் குற்றத்திற்கான காரணங்களை ஆய்கிறது இந்த அறிக்கை.

இவற்றையெல்லாம் சொல் லும் ராகவனும், ரோஷினி நாய ரும், முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறை காட்டும் பாரபட் சங்கள் குறித்து விளக்கமாக விவாதிக்க மறுத்த போதிலும் சிலவற்றை உள்ளபடி வெளிப்ப டுத்துகிறார்கள்.

“காவல்துறையினரால் வைக் கப்பட்டிருக்கும் குற்றப்பட்டிய லில் சாஜித் என்ற இளைஞர் எங்களிடத்தில் பேசும்போது, “நான் புதிய வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கிறேன். ஒவ் வொரு முறை நான் ஏதாவது ஒரு தொழிலை துவங்கும்போதெல் லாம் என்னை ஏதாவது குற்றத் தில் கைது செய்கிறது போலீஸ். போலீசார் என்னிடத்தில் பணம் கேட்டு தொல்லை தருகிறார்கள். பணம் கொடுத்தால் விட்டு விடு கிறார்கள். போலீசார் மிகவும் அதிகாரம் படைத்தவர்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியும் என்கிறார் சாஜித்” என்று தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர் ஆய் வாளர்கள் இருவரும்.

முஸ்லிம் இளைஞர்களிடத் தில் காவல்துறையினர் பாகுபாடு காட்டியிருக்கிறார்கள் என்ப தற்கு சான்றாக, மும்பாய் கல் யாண் குடியிருப்பில் கைது செய் யப்பட்டு பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல் துறையினரால் வழக்கு போடப் பட்டிருக்கும் பிலால் ஷேக் வழக்கை உதாரணமாக காட்டுகி றார் பிரபல மனித உரிமை ஆர்வ லரான ஷப்னம் ஆஸ்மி.

பெரிய பாரதூரமான குற்றச் செயலை பிலால் ஷேக் செய்து விடவில்லை. சிக்னலை கிராஸ் செய்யும்போது டிராஃபிக் கான்ஸ்டபிள்கள் நால்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தான் ஷேக் செய்த குற்றம். ஷேக்கை கொடூரமாகத் தாக்கி யிருக்கிறார்கள் காவலர்கள் நால் வரும்.

வலது தோல்பட்டையில் எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு தாக்கப்பட்ட பிலால் ஷேக் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் புரிந்த காவலர்கள் நால் வரும் சம்பவத்தன்றே பிணை யில் வெளி வந்து விட்டனர்.

இச்சம்பவம் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு எதிராக காவல் துறை மேற்கொள்ளும் விரோ தப் போக்கு. ஒரு சார்புத்தன் மையை காட்டுகிறது.

ஷப்னம் ஆஸ்மியின் இந்தக் கூற்றைமேற்கோள் காட்டி முஸ்லிம் சிறைவாசிகள் பாரபட் சமாக நடத்தப்படுகின்றனர் என்கின்றனர் விஜய் ராகவன் மற்றும் ரோஷினி நாயர்.

மஹாராஷ்டிரா சிறையில் முஸ்லிம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அறிந்து மஹாராஷ்டிரா மாநில சிறுபான்மை விவகார அமைச்சகம் பல்வேறு திட்டங்களை முன் வைத்து முஸ்லிம் கைதிகளின் எதிர்கால விஷயம் குறித்து அக்கறை காட்டி வருகிறது.

சிறுபான்மை அமைச்சகம் சிறைவாசிகளின் நலனிற்காக எந்தத் திட்டத்தைப் போட்டாலும் அதை அமுல்படுத்த வேண்டியது அதிகாரிகள்தான். அதனால் அதிகாரிகள் மனது வைத்தால்தான் முஸ்லிம் சிறைவாசிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும்.

மஹாராஷ்டிரா சிறைகளில் உள்ள சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கையில் 36 சதவீதம் முஸ்லிம்கள் என்பது மனதை கணக்கச் செய்கிறது. மஹாராஷ்டிராவில் இயங்கி வரும் இஸ்லாமிய அமைப்புகளும் சிறைவாசிகளின் விஷயத்தில் தங்கள் பார் வையை ஆழமாக பதிக்க வேண்டும்.

- ஃபைஸல்

Pin It