மும்பைத் தாக்குதலில் முக்கிய குற்றவாளி ராணா என்று இந்திய அரசும், அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ.யும், சர்வதேச ஊடகங்களும் பரப ரப்பை கிளப்பி வந்த நிலை யில் அமெரிக்க நீதிமன்றமோ ராணாவுக்கு மும்பைத் தாக்குதலில் தொடர்பில்லை என அறிவித்திருக் கிறது.

மும்பைத் தாக்குதலில் முக்கிய குற்ற வாளியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தஹ வூர் ராணாவும், பாகிஸ்தானிய அமெரிக்க ரான டேவிட் கோல்மென் ஹெட்லியும் சேர்க்கப்பட்டனர். சர்வதேச தீவிரவாதிக ளாக ஹெட்லியும், ராணாவும் காட்டப் பட்டு வந்த நிலையில் அவர்கள் இருவ ரையும் அமெரிக்க உளவு நிறுவனமாக எப்.பி.ஐ. கைது செய்து சிறையிலடைத் தது.

இதில் ராணா மீது தொடரப்பட்ட வழக் கின் விசாரணை ஒரு மாத காலத்திற்கும் மேலாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. 12 நீதிபதிகள் கொண்ட குழு ராணாவின் வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை அறி விக்கும் பணிக்கு இரண்டு நாட்கள் எடுத் துக் கொண்ட நீதிபதிகள் கடந்த வாரம் தீர்ப்பை அறிவித்தனர்.

அந்த தீர்ப்பின்போது இந்திய அரசின் எதிர்பார்ப்பை பொய் யாக்கும் வகையில் மும்பைத் தாக்குதலில் ராணாவுக்கு எவ் விதத் தொடர்பும் இல்லை. 2008 நவம் பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கர வாதத் தாக்குதலுக்கு ராணா எவ்வகையி லும் உதவி செய்யவில்லை என்று 12 நீதி பதிகள் கொண்ட குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்த நீதிபதி ஹாரி லெனின் வெப்பர் தீர்ப்பை வாசித்துள் ளார்.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ராணாவுக்குத் தொடர்பில்லை என்று அமெரிக்க கோர்ட் அறிவித்திருப்பது இந்த வழக்கில் இந்தியாவிற்கு பின்ன டைவு ஏற்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ராணாவை வைத்துத்தான் மும் பைத் தாக்குதலின் முழு சதிகளை யும் அறிந்து கொள்ள இந்திய விசாரணை அதிகாரி கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ராணா வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி யாக மாறி ராணாவுக்கு எதிராக வாக்கு மூலம் அளித்திருந்தான் ஹெட்லி. ஹெட் லியின் வாக்குமூலத்தில் இந்தியாவில், தானும் லஷ்கரே தய்யிபாவும் செய்த சதி வேலைகள், உளவுப் பணிகள் குறித்தும் விவரித்திருந்த ஹெட்லி, மும்பை -பயங் கரவாத தாக்குதல் குறித்த அனைத்து சதி வேலைகளும் ராணாவுக்கு தெரி யும் என்றும் கூறியிருந்தது. அமெரிக்க எப். பி.ஐ. அதிகாரிகளுக்கும், இந்திய விசா ரணை அமைப்புகளுக்கும் தெம்பூட்டியி ருந்த நிலையில் அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பு எதிர்பாராத விதமாக அமைந்து விட்டது.

மும்பைத் தாக்குதலிலிருந்து ராணாவை விடுதலை செய்த அமெரிக்க கோர்ட் வேறு இரண்டு வழக்குகளில் ராணா வுக்கு தண்டனை வழங்கியுள் ளது.

நபிகள் நாயகம் குறித்து கேலிச் சித்திரம் வரைந்த டென்மார்க் நாளித ழான ஜீலன்ட்ஸ்-போஸ்டனின் அலுவல கம் மற்றும் அந்நாளிதழின் கார்ட்டூ னிஸ்ட் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டதற்குத் தேவையான தகவல் உள்ளிட்ட விபரங்களை ராணா திரட்டிக் கொடுத்தார் என்ற வழக்கிலும், லஷ்கரே தய்யிபாவிற்கு பல்வேறு உதவி களைச் செய்தார் என்ற வழக்கிலும்தான் ராணா விற்கு 30 ஆண்டுகள் தண்டனை வழங்கி யுள் ளது அமெரிக்க கோர்ட்.

இந்தத் தீர்ப்பே விசித்திரமாக உள்ளது. டென்மார்க் நாளிதழ் விஷயத்தில் தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறார் ராணா. ஆனால் அந்த சதி முறியடிக்கப்பட்டது. இதில் ராணாவால் எவ்வித மரணமும் ஏற்படவில்லை. டென்மார்க் பத்திரிகை அலுவலகமே தாக்கப்படவில்லை. இதற்காக 15 வருடத் தண்டனை.

அடுத்து லஷ்கரே தய்யிபா என்ற அமைப்பிற்கு பல்வேறு உதவிகளைச் செய்தது. இதற்கு 15 வருடத் தண்டனை. அதே சமயம் மும்பைத் தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படும் லஷ்கரே தய்யிபாவிற்கு அந்த சம்பவத்தில் உதவ வில்லை என்று சொல்லி ஒரு பயங்கர வாத உதவினார். இன்னொரு செயலுக்கு (மும்பை) உதவவில்லை என்கிறது அமெரிக்க கோர்ட். அதாவது, லஷ்கரே தய்யிபாவின் (வேறு) பயங்கரவாதச் செயல்களுக்கு உதவினார். ஆனால் மும் பைத் தாக்குதல் என்கிற பயங்கரவாத சம்பவத்திற்கு உதவவில்லை என்பது தான் தீர்ப்பின் சாரமாக உள்ளது.

அமெரிக்க கோர்ட்டின் இந்த வித்தியா சமான தீர்ப்பை இந்தியா ரசிக்கவில்லை. அமெரிக்காவிற்கு பாகிஸ்தானோடு முறுகல் ஏற்பட்டிருக்கும் நிலையில் - மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டி வந்த நிலையில் முக்கிய வழக்கான மும் பைத் தாக்குதலில் பாகிஸ்தானியரான ராணாவிற்கு தொடர்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி விட்டால் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக அமையும்.

இதனால் பாகிஸ்தானுடனான முறு கல் நிலை இன்னும் இறுக்கமாகும் என்ப தால் - மும்பை தாக்குதல் சம்பவத்தில் ராணா வுக்கு தொடர்பில்லாததைப்போல் காட்டியிருக்கிறது அமெரிக்கா என்ற எண் ணத்தைத்தான் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்ப டுத்துவதாக உள்ளது.

- ஹிதாயா

Pin It