இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்த ஒத்திகை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் 48 மணி நேர சோதனையை போலீசார் நடத்தினார்கள். அந்த ஒத்திகையில் கூட மதத் துவேஷம் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. பொதுவாக தீவிரவாதிகளுக்கு மதம் என்பது இல்லை. கோயிலை தாக்க முற்படும் தீவிரவாதி இருக்கிறான் என்றால், மஸ்ஜிதையும் - சர்ச்சையும் தாக்கும் எண்ணமுள்ள தீவிரவாதியும் நாட்டில் இருக்கவே செய்வான்.

இப்படிப்பட்ட வழிபாட்டு தளங்களை தாக்கும் முயற்சியை முறியடிப்பது காவல்துறை ஒத்திகையின் நோக்கம் என்றால், அந்த ஒத்திகை கோயிலில் மட்டுமன்றி, மசூதி - சர்ச் ஆகியவற்றிலும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காவல்துறையோ இந்திய நாட்டில் கோயில்களுக்கு மட்டுமே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டும் வகையில் கோயிலில் மட்டும் ஒத்திகை நடத்தியுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் 5 இடத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அவற்றை அகற்ற காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பாளர் ராஜராஜன், சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர் சுகாசினி, வெடிகுண்டு குழு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் கோயிலுக்குள் மோப்ப நாய் உதவியுடன் அதிரடியாக புகுந்தனர்.

இதனால் கோயிலுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை கோயிலிலிருந்து வெளியேற்றினர். ஒரு மணி நேர தேடுதலுக்குப்பின் வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

பலமணி நேர தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்த இடம் தெரிய வந்தது. ஆபரேஷன் ஹம்லா என்ற இந்த சோதனை வெறும் ஒத்திகை என தெரிந்ததால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்கிறது செய்தி. ஏற்கனவே சங்கபரிவாரங்கள் கோயிலை தகர்க்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி என்று ஓயாமல் ஒப்பாரி வைப்பதும்- நடுநிலை ஊடகங்கள் அந்த கோயிலை தகர்க்க சதி - இந்த கோயிலை தகர்க்க சதி என்ற பொய்யான செய்திகள் மூலமும் முஸ்லிம்கள் கோயிலை தகர்க்கும் எண்ணமுடையவர்கள் என்ற சிந்தனையை மக்கள் மனதில் பதிய வைத்துள்ள நிலையில், இந்த ஒத்திகை மூலம் காவல் துறையும் தன் பங்குக்கு முஸ்லிம் கள் மீதான துவேஷ சிந்தனைக்கு வித்திட்டுள்ளதாகவே மக்களால் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது வரை இந்தியாவில் எந்த கோயிலி லும் தீவிரவாதிகள் தாக்கியதாக சான்றுகள் இல்லை. ஆனால் மசூ திகளும் - தர்காக்களும் - சர்ச்சுகளும் இந்துத்தவா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட வரலாறுதான் உண்டு. எனவே இனியாவது தமிழக காவல் துறை நடுநிலை பேணட்டும். முதல்வர்களுக்கு மம்தாவின் முன்மாதிரி!

'தூங்கிக்கிட்டு இருக்குறவனை தட்டி எழுப்பினால் உடனே கட்சி ஆரம்பிச்சுடறான்' என்று பெருகி வரும் புதுப்புது அரசியல் கட்சி குறித்து தமாஷாக குறிப்பிடுவார் மறைந்த திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான். அதை போல மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒரே சாதனை அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துவது தான்.

இப்போது மீண்டும் மத்திய அரசு கடந்த 24ம் தேதி டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாயும் உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. காங்கிரஸ் கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும் மேற்கு வங்காள மாநில முதல் மந்தி ரியுமான மம்தா பானர்ஜி, டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு, மக்களின் தலை மேல் மத்திய அரசு சுமத்தியுள்ள இந்த திடீர் சுமையை குறைக்கும் வகையில் ஒரு அதிரடி முடிவையும் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் மீது வசூலிக்கப்பட்டு வரும் செஸ் வரி ரூ 16ஐ வாபஸ் பெறுவது என்று முடிவு செய்து, அதை உடனடியாக அமுலுக்கும் கொண்டு வந்துள்ளார். மம்தாவின் இந்த முடிவால் மேற்கு வங்காளத்தில் கியாஸ் விலை உயர்வு, 50 ரூபாய்க்கு பதிலாக 34 ரூபாயாக இருக்கும். இத னால், மாநில மக்களுக்கு சிலிண்டருக்கு 16 ரூபாய் மிச்சம் ஆகிறது. இதன் மூலம் அவர்களின் சுமை குறையும் என்று நம்புகிறேன் என்றும் கூறிய மம்தா, இது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டார். பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணைய் போன்றவற்றின் விலையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதில் மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இருந்தாலும் மாநில அரசின் சக்திக்குட்பட்டு மக்களின் குறையை எந்த அளவுக்கு குறைக்கமுடியும் என்பதை கவனத்தில் கொண்டு மம்தா பானர்ஜி முடிவெடுத்துள் ளார். மம்தாவின் இந்த முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அமுல்படுத்தி மக்கள் சுமையை குறைக்க முன்வர வேண்டும் என்றே தமிழக மக்கள் எதிர்பார்க் கிறார்கள். செய்வாரா ஜெயலலிதா?

- தரசை தென்றல்

Pin It