periyar meetingசென்னை நகரசபைக்கு செனட்டிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற்றது. அதற்குத் திரு.புர்ரா சத்திய நாராயணாவும், இங்கிலாந்திற்கு வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருக்கும் திவான்பகதூர் ஏ.ராமசாமி முதலியாரும் போட்டியிட்டனர். இவர்களில் திரு.ராமசாமி முதலியாருக்கு 109 ஓட்டுகளும் , திரு.சத்திய நாராயணாவுக்கு 46 ஓட்டுகளும் கிடைத்தன. திரு. ராமசாமி முதலியாரே செனட்டின் பிரதிநிதியாக நகரசபைக்கு தெரிந்தெடுக்கப்பட்டார். இந்தியாவுக்கு தானே பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும், காங்கிரசைக் சேர்ந்த திரு.சத்தியநாராயணாவுக்கு செனட்டு அங்கத்தினர்களின் ஆதரவில்லாமையைக் கொண்டு படித்தவர்களிடத்தில் காங்கிரசுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம். ‘காங்கிரசுக்கு விரோதமான ஜஸ்டிஸ்கட்சி’யைச் சேர்ந்த திரு.ராமசாமி முதலியார் அவர்கள் ஊரில் இல்லாதிருந்தும் வெற்றி பெற்றதைப் பாராட்டுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1931)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.