ருவாண்டா நாட்டின் முன்னாள் குடும்ப நலத்துறை அமைச் சராக இருந்தவர் பாலின் நிராமா சுகுகோ. இவர் இனப் படுகொலை செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டு ஐக்கிய நாடு கள் சபையின் சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள் ளது.

ருவாண்டா நாட்டின் தென்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இம்மக்கள் பல்வேறு உரிமைகளைக் கேட்டு ருவாண்டா அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

கடந்த 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை டுட்சி இன மக்கள் தொடர் போராட்டங்களை வீரியமாக நடத்தினர். இம்மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்காக இராணுவப் படையை ஏவி சுமார் 8 லட்சம் டுட்சி இன மக்களை படு கொலை செய்ய வைத்ததில் நிராமாசுகுகோவிற்கு பெரும் பங்கு இருக்கிறது என்று தான் சானியாவில் அமைக்கப்பட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

கடந்த 2001ம் ஆண்டில் நிராமாசுகுகோ மீது தொடரப் பட்ட வழக்கு பல இழுபறிகளுக் குப் பிறகு தீர்ப்பாகியிருக்கிறது. ருவாண்டா நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் நீதி கிடைக் காது என்பதால் ருவாண்டாவுக்கு வெளியே தான்சானியாவிலுள்ள அருஷா நீதிமன்றத்தில் இவ்வ ழக்கு நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், நிராமாசுகுகோ மட்டு மல்லாமல், அவருடன் சேர்ந்து சதி செய்து டுட்சி மக்களை கொன் றதாக - அவரது மகன் ஆர்சன் ஷலோம் மற்றும் ஐந்து பேரை யும் குற்றவாளிகள் எனத் தீர்ப்ப ளித்தது.

இந்நிலையில், இனப்படு கொலை வழக்கு என்பதால் ஐ.நா.வின் தலையீட்டின் பேரில் சர்வதேச குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த இவ்வழக்கின் மேல் விசார ணையில் நிராமா சுகுகோ இனப் படுகொலை, மனித உயிர்களுக்கு எதிரான கிரிமினல் செயல்கள், கற்பழிப்புகள், அடக் குமுறை, அட்டூழியம், வன்முறை ஆகிய காரியங்களில் ஈடுபட்டது நிரூ பிக்கப்பட்டு 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டன.

இவ்வழக்கின் தீர்ப்பை கடந்த 24ம் தேதி வெளியிட்ட சர்வதேச நீதிமன்றம், நிராமா சுகுகோ மற் றும் அவரது மகன் ஆர்சன் ஷாலோம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித் துள்ளது.

உலக வரலாற்றிலேயே இனப் படுகொலைக்காக விசாரிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட முதல் பெண் என்ற அவப்பெயருடன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார் பாலின் நிராமாசுகுகோ.

மனித குல விரோதச் செயல்க ளில் யார் ஈடுபட்டாலும் அவர் கள் சர்வதேச சமுதாயத்தின் முன் கடுமையான முறையில் தண்டிக் கப்பட வேண்டும். ருவாண்டா பெண் அமைச்சருக்கு தண்டனை வழங்கிய சர்வதேச நீதிமன்றம் இலங்கை அதிபருக்கும் தமிழீழப் படுகொலை செய்ததற்காக தண் டனை அளிக்க முன் வருமா என்ற கேள்வி உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- ஹிதாயா

Pin It