ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் சரணடைய வந்த ஹிஸ்புல் முஜாஹித்தீன் அமைப்பின் முன்னாள் போராளிலியாகத் ஷாவை சமீபத்தில் டெல்லி போலீஸ் கைது செய்திருந்தது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லியின் முக்கிய பகுதிகளில் லியாகத் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தார் என்று மீடியாக்களுக்கு செய்தி கொடுத்தது டெல்லி ஸ்பெஷல் செல் போலீஸ்.

ஹிந்தி மீடியாக்கள் இந்த கைது குறித்து தமது கற்பனையில் உதித்த கதைகளையெல்லாம் சேர்த்து, இஸ்லாமியத் தீவிரவாதிகள் டெல்லியை தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக செய்திகளை வெளியிட்டு தலை நகர மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பின.

ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசுக்கு தகவல் கொடுத்து விட்டு சரணடைய வந்த லியாகத் ஷாவைத்தான் மஃப்டி டிரஸ்ஸில் போய் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு கூட தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்திருக்கிறது டெல்லி போலீஸ் என்ற செய்தி அம்பலமாகி டெல்லி போலீஸின் கயமைத்தனம் வெளிப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (இதை ஆஸ்த் காஷ்மீர் என்கிறது பாகிஸ்தான்) இருந்த போராளியான லியாகத் ஷா, ஜம்மு காஷ்மீர் அரசின் முன்னாள் போராளிகளுக்கான மறு வாழ்வு கொள்கையின் அடிப்படையில் காஷ்மீர் போலீசிடம் சரணடைந்து புதிய வாழ்வை துவங்குவதற்காக தனது குடும்பத்தினர் மூலம் காஷ்மீர் போலீசிடம் முறையிட்டிருந்தார்.

காஷ்மீர் காவல்துறையும் அதற்குத் தேவையான ஆவணங்களை சரி பார்த்து, சம்பிரதாய அலுவல்களை முடித்து லியாகத் ஷாவிற்கு கிரீன் சிக்னல் காட்டியபின் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் தனது பாகிஸ் தானிய மனைவி, இளவயது மகள் மற்றும் சிறுவயது மகனுடன் நுழைந்தார் லியாகத்.

இந்திய - நேபாள எல்லையான சனவ்லி சோதனைச் சாவடியில் அவர்களைப் பிடித்த சீருடையணியாத டெல்லி போலீஸ் நேரடியாக உத்திரப் பிரதேச மாநிலம் கொரக்பூருக்கு கொண்டு வந்து கடந்த மார்ச் 18ம் தேதி லியாகத்தை கைது செய்தது.

அதன் பின்னர் இரண்டு நாள் கழித்து டெல்லியில் மீடியாக்க ளுக்கு முன்னால் லியாகத் ஷாவை நிறுத்திய போலீஸ், டெல்லியில் ஷா குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டி யது. தனது குற்றச் சாட்டை மெய்ப்படுத்த டெல்லியின் ஜமா மஸ்ஜித் பகுதியிலிருந்து (தானே வைத்த) வெடி மருந்துகளை கண்டு பிடித்து கைப்பற்றியதாக வும் ஆதாரங்களை ஜோடித்தது.

இந்த தகவல் காஷ்மீர் அர சுக்கு தெரிய வந்தவுடன், டெல்லிக்கு வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் லியாகத் ஷாவையும், அவரது குடும்பத்தையும் டெல்லி போலீஸ்டீம் கடத்திக் கொண்டு வந்ததையும், லியாகத் ஷாவுக்கும் காஷ்மீர் போலீசுக்கும் இடையில் சரணடைவது தொடர்பாக நடந்த பரி வர்த்தனைகளையும் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண் டேவிடம் விளக்கினார். காஷ்மீர் முதல்வரின் இந்த நடவடிக்கை கள்தான் டெல்லி போலீûஸ தலை கவிழ வைத்திருக்கிறது.

இந்நிலையில், லியாகத் ஷாவின் கைது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த கைதில் சட்ட விரோதமாக ஈடுபட்ட டெல்லி போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது ரிஹாய் மன்ச் என்ற அமைப்பு.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வகுப்புச் சூழலை கெடுக்கும் நோக்கில் இந்த போலியான கைது சம்பவத்தில் டெல்லி போலீஸ் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது ரிஹாய் மன்ச்.

ரிஹாய் மன்ச் என்பது, பயங்கரவாதம் என்ற பெயரில் சிறைபடுத்தப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை மீட்டெடுப்பதற் கான அமைப்பு. இந்த அமைப்பின் பொதுச் செயலாளரும், உத்திரப் பிரதேச முன்னாள் காவல் துறை தலைவருமான எஸ்.ஆர். தராபுரி,

“லியாகத் ஷாவின் கைது என் பது போலித்தனமானது. ஏனெனில் சுனவ்லி சோதனைச் சாவடியில்லியாகத் ஷாவை டெல்லி போலீஸ் கைது செய்தபோது அது குறித்து உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தராமல் இருந்திருக்கிறது. கைது நடவடிக்கைகள் குறித்த சட்ட நெறிமுறைகளின் படி, டெல்லி போலீஸ் உள்ளூர் போலீசாரை உடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். லியாகத் ஷாவின் கைது பற்றி உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் பின்னர், லியாகத்தை டெல்லிக்கு கொண்டு செல்வதற்காக உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப டுத்தியிருக்க வேண்டும்.

இவ்வளவு சட்ட நெறிமுறை கள் இருந்தும் இதில் ஒன்றைக் கூட டெல்லி போலீஸ் பின்பற்ற வில்லை. இதன் மூலம் டெல்லி போலீஸ் நிகழ்த்தியிருக்கும் லியாகத் ஷா கைது சட்ட விரோதமாகிறது. எனவே சமாஜ்வாதி கட்சி அரசு உடனடியாக டெல்லி போலீஸ் அதிகாரிகள் மீது கடத்தல் வழக்கை பதிவு செய்ய வேண்டும்...” என்று தெளிவாக வலியுறுத்தியிருப்பதோடு,

“லியாகத் ஷா தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி டெல்லி போலீஸ் கைது செய்திருப்பதன் மூலம், மத்திய உளவுத்துறையான ஐ.பி.யும், டெல்லி குற்றப் பிரிவு போலீசும் இணைந்து நாட்டில் பாதுகாப் பாற்ற சூழலை உருவாக்க திட்ட மிட்டிருப்பதாக தெரிகிறது...” என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு, டெல்லி ஜமா மஸ்ஜித்துக்கு அருகாமையிலுள்ள ஹாஜி அராஃபக் விருந்தினர் இல்லத்தில் டெல்லி போலீúஸ ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் புதைத்து வைத்து விட்டு, பின்னர் அந்த விருந்தினர் இல்லத்தில் ரெய்டு நடத்தி வெடி மருந்துகளை கைப்பற்றியிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார் முன்னாள் டி.ஜி.பி. தராபுரி.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு லியாகத் டெல்லியில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்த வந்தார் என்று டெல்லி போலீஸ் கூறியது இந்த வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை காட்டித்தான்.

டெல்லி ஸ்பெஷல் செல் போலீஸ்ப் பொறுத்தவரை அது தொடர்ந்து இதுபோன்ற சட்ட விரோதக் காரியங்களில் ஈடுபட்டே வந்திருக்கிறது. டெல்லி ஜமா மஸ்ஜித் பகுதி தான் டெல்லி போலீஸின் இலக் காக இருந்து வருகிறது.

இப்பகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் டெல்லியின் முக்கிய குடியிருப்பு பகுதியாகும். ரெய்டு என்ற பெயரில் இப்பகுதி குடியிருப்புவாசிகளான முஸ்லிம்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்ளும் டெல்லி போலீஸின் சட்ட விரோத நடவடிக்கைகளின் பட்டியல் மிக நீளமானது.

பங்களாதேஷ், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களின் புகலிடமாக ஜமா மஸ்ஜித் பகுதி இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது டெல்லி போலீஸ்.

இப்பகுதி முஸ்லிம்களை தீவிர வாதிகளாக அடையாளப்படுத்த டெல்லி போலீஸ் எடுக்கும் முயற்சிகளுக்கு பின்புலத்தில் மத்திய உளவுத்துறையான ஐ.பி.யும், டெல்லிகிரைம் பிராஞ்ச் போலீசும் இருக்கிறதோ என்கிற நமது சந்தேகத்தை உ.பி.யின் முன்னாள் டி.ஜி.பி. இன்னும் வலிமைப்படுத் தியுள்ளார்.

ஐ.பி. மீதும், டெல்லி கிரைம் பிராஞ்ச் மீதும் இப்படி மிகப் பெரிய குற்றச்சாட்டை வைத்திருப்பது இந்தியாவின் சாதாரண குடிமகன் அல்ல. ஒரு மாநிலத்தின் - அதுவும், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் காவல் துறையின் அத்தனை பிரிவுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தி ருந்த டி.ஜி.பி. இக்குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என்பதால் இதை மறுக்க கிரைம் பிராஞ்சும், ஐ.பி.யும் தயாராக வேண்டும்.

ஆனால், இன்றுவரை திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அழுத்தமான மௌனம் சாதிக்கின்றன ஐ.பி.யும், டெல்லி கிரைம் பிராஞ்சும். லியாகத்தின் போலியான கைது டெல்லி போலீஸ் திருடர்களாகவும், கடத்தல்காரர்களாகவுமே அடையாளப்படுத்தியிருக்கிறது.

 திருந்தாத டெல்லி போலீஸ்!

டெல்லியை அடிப்படையாகக் கொண்டபல்கலைக் கழக ஆசிரியர்களின் சிவில் உரிமைகளுக்கான அமைப்பான ஜாமியா ஆசிரியர்களின் ஒருமைப்பாட்டு சங்கம் (ஜே.டி.எஸ்.ஏ.) கடந்த 23ம் தேதி டெல்லியில் ஸ்பெஷல் செல் குறித்து பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடமே டெல்லி காவல் துறை, அதிலும் குறிப்பாக டெல்லி ஸ்பெஷல் செல் காவல்துறை அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக ஜோடித்திருந்த 16 வழக்குகளை தொகுத்து ஆவண அறிக்கையாக வெளியிட்டிருந்தோம்.

துரதிருஷ்டவசமாக இப்படி தீவிர வாதிகளாக கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலோர் காஷ்மீரிலிருந்து வருபவர்கள் தான்.

நீதிமன்றத் தீர்ப்புகள், டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் சுதந்திரமான சாட்சிகளை (வழக்குகளில்) சேர்க்க அனுமதி மறுப்பதையும், சட்ட நெறிமுறைகளை பிடிவாதமாய் மீறுவதையும், சட்ட விரோதமாக கைது செய்வதையும், இந்த கைது நடவடிக்கைகளுக்கு பிந்தைய தேதிகளை காட்டு வதையும், ஆதாரங்களை ஜோடிப்பதையும், அவர்களுடைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்களை சிறிய அளவில்கூட காட்டத் தவறியதையும் சுட்டிக் காட்டி கண் டித்திருப்பதை (எங்கள் அறிக்கையில்) மேற்கோள் காட்டி யிருந்த போதிலும், டெல்லி போலீஸின் தலைமையோ மத்திய உள்துறை அமைச்சகமோ இதற்கு ஏதாவதொரு விசாரணை தேவை என்றுகூட உணரவில்லை.

டெல்லி ஸ்பெஷல் செல் போலீ ஸ்ரால் இப்படி (சட்ட விரோதமாக) பிடுபடுபவர்களில் பெரும்பாலானோர் போலீஸ் அல்லது ஐ.பி.யின் இன்ஃ பார்மர்களால் தகவல் தரப் பட்டு, கைது செய்யப்படுபவர்களும், தனிப்பட்ட பழியைத் தீர்த்துக் கொள்ள மாட்டி விடப்படுபவர்களும், டெல்லிக்கு குடியேறி வருபவர்களாகவே இருந்துள்ளனர்.

இதன் நீட்சியாகத்தான் ஹிஸ் புல் முஜாஹித்தீன் தலைநகரில் ஒரு மிகப் பெரிய தாக்குதல் நடத்த இருந்தது என்ற சமீபத்திய டெல்லி ஸ்பெஷல் செல் போலீஸின் ஹோலிப் பண்டிகை பரிசும் அமைந்திருக்கிறது.

ஆனால் மீண்டும் தனது செல்லமான ஸ்பெஷல் செல்லை பாதுகாக்கத்தான் முனைந்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இது, யாரையும் பிடித்துச் செல்ல, கைது செய்ய, தடுத்து வைக்க பொது மக்களை தீவிரவாத செயல்களோடு தொடர்புபடுத்த விசாரணை அமைப்புகளுக்கு ஊக்கமளிப்ப தாகவே அமையும்.

லியாகத் கைதில் ஈடுபட்டிருக்கும் டில்லி ஸ்பெஷல் போலீஸ் அதிகாரிகளில் மூன்று பேர் எங்கள் (ஜே.டி.எஸ். ஏ.) அறிக்கையில் இடம் பெற்றிருப்பவர்களில் முக்கியமானவர்கள்.

டி.சி.பி. சஞ்சீவ் யாதவ், ஜோடிக்கப்பட்ட 16 வழக்குகளில் 5ல் முக்கிய பங் காற்றியவர். டி.சி.பி. சஞ்சீவ் குமார் 2006ல் சோனியா விகாரில் நிகழ்ந்த போலி என்கவுண்ட்டரில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டார் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டவர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. அப்போது அவர் காவல்துறை ஏ.சி.பி.யாக இருந்தார்.

இந்த போலி என்கவுண்ட்டர் தொடர்பாக அப்பேதைய டிவிஷனல் கமிஷ்னர் ஸ்ரீவிஜய் யாதவ் விசாரணை நடத்தினார். அந்த விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என நாங்கள் கோருகிறோம். இந்த நீதி விசாரணையின் அறிக்கை நீர்த்துப் போகச் செய்யும் கூட்டு முயற்சிகள் நடக்கிறதோ என நாங்கள் அச்சப்படுகிறோம்.

இதுபோன்ற சட்ட விரோதச் செயல்கள் முடிவுக்கு வரும்வரை டெல்லி போலீஸ் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புகள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை காட்சிப்படுத்தப்படுவது, விருதுகள், வீரப் பதக்கங்கள் பெறுவது மற்றும் தற்கொலைப் படையினரை உற்பத்தி செய்வது போன்ற செயல்களுக்கு நாம் தொடர்ந்து சாட்சியாகவே இருப்போம்.

Pin It