சிவசேனா கட்சியின் "மவுத் பீஸ்' என்று அழைக்கப்படுகின்ற சாம்னா பத்திரிகையில் புகைப்படத்துடன் வந்த அந்த செய்தி இஸ்லாமிய அமைப்பான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மஹாராஷ்டிரா மாநில நிர்வாகிகளை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

சாம்னா பத்திரிகைதான் அந்தச் செய்தியை முதன் முதலில் வெளியிட்டது. அதனையடுத்து பல செய்தி ஏடுகளும், சில ஊடகங்களும் கூட அந்தச் செய்தியை வெளியிட்டன.

Girls Islamic Organisation (GIO) என்கிற இஸ்லாமிய மாணவியர் அமைப்பைச் சேர்ந்த இளம் பெண்கள் கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளை ஜிஹாதிற்கு தயார்படுத்துகின்றனர் என்ற செய்தியுடன், புர்கா அணிந்த முஸ்லிம் பெண்கள் துப்பாக்கிகளுடன் நிற்பதைப் போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டி ருந்தது சாம்னா. இதுதான் ஜமா அத்தே இஸ்லாமி அமைப்பினருக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

எஐஞ என்பது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பெண்கள் அமைப்பாகும். அதனால் இந்த செய்தி குறித்து ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பினர் சிரத்தையுடன் கவனம் செலுத்தியதில் அப்பட்டமான இந்த பொய்ச் செய் தியை ஊடகங்களுக்கு கொடுத்திருப்பது மும்பை போலீஸின் ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவுதான் என்பது தெரிய வந்தது.

மாநிலம் முழுவதிலும் இருக்கின்ற காவல் நிலையங்களுக்கு ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் அனுப்பியிருந்த சர்குலரில், 'GIO' என்கிற பெண்கள் அமைப்பு மக்களின் குணாதிசயங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிகள் நாயகம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் கொண்டவை) ஆகியவற்றின் அடிப்படையில் மாற்ற முயற்சித்து வருகிறது; கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளை ஜிஹாத்திற்கு தயார்படுத்துகிறது. மேலும் இந்திய சமூகத்தை இஸ்லாமியமயமாக்க விரும்புகிறது' எனக் குறிப் பிட்டிருந்தது.

இந்த தகவலை சேகரித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் அதன் மாநிலத் தலைவரும், 'GIO'வின் தலைமைப் பொறுப்பாளருமான தவ்ஃபீக் அஸ்லம் கான் தலைமையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி மும்பை ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் பிரிவின் கூடுதல் கமிஷ்னரான நாவல் பஜாஜ்ஜை சந்தித்து தங்களின் கடுமையான கோபத்தை யும், வேதனையையும் வெளிப்படுத்தினர். அவர்களிடம் மன் னிப்பு கேட்டிருக்கிறார் கமிஷ்னர் பஜாஜ்.

“எங்கள் துறையிலிருந்து ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. துறை சார்ந்த விசாரணை வைத்து இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்...” என அவர்களிடம் உறுதியும் அளித்திருக்கிறார் கமிஷ்னர் நாவல் பஜாஜ்.

கமிஷ்னர் நாவல் பஜாஜுட னான சந்திப்பு குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய தவ்ஃபீக் அஸ்லம் கான்,

“கமிஷ்னர் பஜாஜுடனான எங்கள் சந்திப்பு, எங்களின் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. அதற்காக கமிஷ்னர் எங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்த தகவலும், சர்குலரும் எங்களின் துறை சார்ந்தவர்க ளுக்கு மட்டுமாக இருந்தது. இது பொது மக்களுக்குரிய தில்லை என்பதை கமிஷ்னர் ஒப்புக் கொண்டார். மேலும், இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்பான தகவல்கள் எங்களுக்கு பல ஏஜென்சிகள் மூலம் வருகின்றன.

இதையெல்லாம் நாங்கள் சரி பார்ப்பதில்லை. அதை வைத்திருப்பதும் இல்லை. எங்களது வேலை தகவல்களைத் திரட்டுவதும் அதை துறைரீதியாக அனுப்பி வைப்பதும்தான் என்று கமிஷ்னர் தெரிவித்தார்...” எனக் கூறியுள்ளார்.

வெறும் வாய்மொழியான மன்னிப்பிலும் உறுதிமொழியிலும் எங்களுக்கு திருப்தியில்லை எனக் கூறியுள்ள தவ்ஃபீக் ஆலம், “ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் மீது அவதூறு வழக்குத் தொடர எங்கள் சட்டக் குழுவினரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆயினும், ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசிடமிருந்து அதிகாரப்பூர்வமான (எழுத்துப்பூர்வமான) பதில் கிடைத்த பின்னர்தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுப்போம்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்த நிலையில் துப்பாக்கிகளை ஏந்தியபடி இருக்கும் படத்தைப் போட்டு, சம்மந்தமில்லாத செய்தியை வெளி யிட்டிருக்கும் சாம்னா பத்திரி கையும் இது தொடர்பாக எங்களிடம் பேச வேண்டும்...” என்றும் கூறியுள்ளார்.

சாம்னா பத்திரிகை மீதும் அவதூறு வழக்கை தொடுக்க தயாராகி வருகிறது ஜமா அத்தே இஸ்லாமி.

முன்னதாக, மும்பை நகர ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவரான அப்ஸல் பேக், ஜமாஅத்தின் அதிருப்தியையும், புகாரையும் தெரிவிக்க கடந்த 1ம் தேதி சாம்னா பத்தி ரிகையின் நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறார்.

“சாம்னாவின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ராவத்தை தொடர்பு கொண்டபோது அவர் மும்பைக்கு வெளியே இருப்பதாக தெரிய வந்தது. அதனால் அப்பத்திரிகையின் மூத்த நிரூபரான ராஜேஷை சந்தித்து, சாம்னாவில் எழுதப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட செய்தி மற்றும் சம்மந்தமில்லாத புகைப்படம் குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறேன்...” என்கிறார் அப்சல் பேக்.

கடைசியாக, மஹாராஷ்டிரா மாநில சிறுபான்மை கமிஷன் தலைவரான முனாஃப் ஹக்கீமையும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக புகார் மனுவையும் அளித்துள்ளனர் ஜமாஅத்தே இஸ்லாமியினர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாஹினி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் துப்பாக்கி ஏந்தியபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து, நாட்டிலுள்ள ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசுக்கு எந்த இன்ஃபார்மரும், ஏஜென்சிகளும் தகவல் தர அவசியமில்லாத வகையில் பகிரங்கமாகவே துப் பாக்கிப் பயிற்சியில் இந்துத்துவா அமைப்புகளின் மகளிர் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை எந்த ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸின் பார்வைக்கும், காவி பயங்கரவாதத்திற்கு இளம் பெண்களை, இளைஞர்களை இந்துத் துவாவின் மகளிர் அமைப்புகள் தயார்படுத்தி வருவதாகப்படுவ தில்லை. அகில பாரதீய வித்யார் த்தி பரிஷத் போன்ற அமைப்புகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே ஊடுறுவி இந்திய சமூகத்தை இந்துத்துவா மயமாக்க முயற்சித்து வருவதும் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசுக்குத் தெரி தில்லை.

ஆனால், முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் இஸ்லாமிய ஒழுக்கவியல்களையும், மார்க்கத்தின் போதனைகளையும் எடுத்துச் சொல்லும் எஐஞ போன்ற இஸ்லாமிய மகளிர் அமைப்பினர் மட்டும் படுபயங்கர தீவிரவாதி களைப்போல் தெரிகிறார்கள் என்றால், அது டெல்லி ஸ்பெஷல் பிராஞ்ச் போலீûஸப் போலவே, மும்பை ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸின் மூளையிலும் காவிச் சிந்தனை அல்லது முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனை படிந்து போய் பழுப்பேறிக்கிடக்கிறது என்று தான் அர்த்தம்.

சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதைப் போலவே, இல்லாத தீவிரவாதிகளை இருப்பதாகக் காட்டும் காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஒரு ரகசிய தகவல் கிடைத்தால், அதை வெளியிடுவதற்கு முன் தீவிரமாக ஆராய்ந்து உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகே முடிவுக்கு வர வேண்டும் என்ற நேர்மையான சிந்தனையை நோக்கி நடைபோ டும் காவல்துறை.

"ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் மீது நடவடிக்கை எடுப்போம்” - மக்கள் ரிப்போர்ட்டிடம் பேசிய ரெஹான் அன்சாரி

மும்பையிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி அலுவலகத்தை தொடர்பு கொண்ட நாம், ஜமாஅத்தின் அடுத்த கட்ட முயற்சிகள் என்ன என்பது குறித்து கேட்டோம். நம்மிடம் பேசிய ஜமாஅத்தின் ஊடகப் பொறுப்பாளரான ரெஹான் அன்சாரி...

“ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். எங்கள் வக்கீல்களுடன் இது குறித்து பேசி வருகிறோம். தற்போது டெல்லியில் எங்கள் அமைப்பின் நேஷ்னல் ரெப்ர ஸன்டேடிவ் மீட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்காக, மஹாராஷ்டிரா மாநில ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உள்பட முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்தபின் நட வடிக்கைகள் எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள்.

டெல்லியில் தேசியத் தலைவர் கள் தரும் வழிகாட்டுதலின் அடி ப்படையில் மும்பை ஸ்பெஷல் பிராஞ்ச் மீதான சட்ட நடிவ டிக்கை அமையும்...” என்றவரிடம்,

“சாம்னா பத்திரிகை அவதூறாக செய்தி வெளியிட்டதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?” என்றோம்.

“எங்கள் மும்பை அமைப்பின் தலைவர் அப்ஸல் தான் சாம்னா நிர்வாகத்துடன் பேசினார். அப்பத்திரிகையின் முக்கிய நிர்வாகி ராவத் மும்பைக்கு வெளியே இருந்ததால் அங்கிருந்த ராஜேஷ், என்பவரிடம் பேசியிருக்கிறார். அவரிடம் எங்கள் ஆட்சேபனையை அப்ஸல் தெரிவித்தபோது, உங்களின் மறுப்பைத் தாருங்கள் சாம்னாவில் வெளியிடுகி றோம் என்று ராஜேஷ் சொல்லியிருக்கிறார்.

அந்தச் செய்தியுடன் நீங்கள் பிரசுரித்திருக்கும் படம் ஜிஹாதியப் பெண்களின்படம் அல்ல. அது இரான் நாட்டின் இராணுவத்தைச் சேர்ந்த பெண்களின்படம் என்று அப்ஸல் எடுத்துப் சொன்னபோது, "செய்திக்கு சிம்பாலிக்காக ஒரு படம் தேவை என்பதால் அதை போட்டோம்' என்று கூறியிருக்கிறார் ராஜேஷ்.

நீங்கள் "சிம்பாலிக்' என்கிறீர்கள். இது எத்தனை பேருக்கு தெரியும்? இந்தச் செய்தியை படிப்பவர்கள் எப்படி விளங்குவார்கள் என்றெல்லாம் அப்ஸல் கேட்க, உங்களின் ஆட்சேபனையை அப்ப டியே எழுதித் தாருங்கள் நாங்கள் வெளியிடுகிறோம் என்றாராம் ராஜேஷ். அதன்படியே அடுத்த நாள் பதிப்பில் எங்களின் மறுப்பை வெளியிட்டது சாம்னா பத்திரிகை...” என்று நமக்கு பதிலளித்தவரிடம்,

கடைசியாக, “துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என உங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடத்தில் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் ஏ.சி. வாக்கறுதி அளித்திருந்தாரே அதன்படி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டி ருக்கிறதா?” என்று கேட்டோம்.

“ஆமாம். விசாரணைக்கு உத்தர விட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். குற்றவாளி யார் என்பதையும், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாங்கள் உங்களுக்கு பர்ஸனலாக தெரிவிப்போம் என உறுதிய ளித்திருக்கிறார் கமிஷ்னர். இச்சம்பவம் நடந்து ஓரிரு நாட்கள்தான் (நாம் பேட்டி கண்ட கடந்த 4ம் தேதி நிலவரப்படி) ஆகியிருக்கிறது என்பதால் நாங்கள் காத்திருக்கிறோம்...”என்றார் ரெஹான் அன்சாரி.

Pin It