மியான்மரில் கடந்த 2012ல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அராகன் பகுதி முஸ்லிம்கள் உயிரிழப்புக்கும்,பொருளாதார இழப்புக்கும் ஆளாயினர்.முஸ்லிம் கிராமங்கள் பௌத்த இனவெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வரலாறு காணாத வன்முறையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்தது மியான்மர் அரசு.தோல்வியடைந்தது என்பதை விட, கலவரத்தை அது மறைமுகமாகவே ஆதரித்தது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அரசுப் படைகள் ஒரு சார்பு தன்மையுடன் நடந்து கொண்டன.

கலவரக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவும் தவறவில்லை அரசு படைகள்.உலக நாடுகள் கூட இந்த வன்முறையை அமைதியாக வேடிக்கைதான் பார்த்தன. இரான், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர.

மியான்மருக்கு மிக அருகில் உள்ள உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் மௌனம் சாதித்தது.மியான்மர் நாட்டின் இராணுவ ஆட்சிக்கு எதிரான-மியான்மர் எதிர்கட்சித் தலைவி ஆங்சாங் சூகியின் போராட்டங்களிலெல்லாம் தலையிட்ட இந்தியா, முஸ்லிம்கள் மீதான பௌத்த இன வெறித் தாக்குதல்களுக்கு எதிராக கண்டனக் குரல்கூட எழுப்பவில்லை.

இதுபோன்ற சர்வதேச நாடுகளின் மௌனம்,மியான்மர் அரசின் இனவெறிப்போக்கு ஆகியவை தந்த ஊக்கம்,அங்குள்ள பௌத்தர்களின் வன்முறைச் சிந்தனைக்கு இன்னும் வேகத்தை கொடுத்திருக்கிறது என்பதை கடந்த 20ம் தேதி மியான்மரில் மீண்டும் நிகழ்ந்த முஸ்லிம்களின் மீதான பௌத்த இனவெறியர்களின் தாக்குதல் நிரூபிப்பதாக உள்ளது.

முதல்முறை நடந்த வன்முறைக்கு காரணம் பௌத்த இனப் பெண் ஒருத்தியை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பரவிய வதந்திதான் என்று கூறப்பட்டது.இந்த வதந்தியை அடுத்து,மியான்மரில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது பௌத்த இன வெறியர்கள் நடத்திய தாக்குதல் பெரும் கலவரமாக வெடித்தது.

இக்கலவரம் பல நாட்கள் நீடித்தது.வரலாறு காணாத இழப்பை முஸ்லிம்களுக்கும் மியான்மர் நாட்டுக்கும் ஏற்படுத்தியது.

இதில் 200க்கும் மேற்பட்ட ராக்கைன் பகுதி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடுகளை இழந்தனர்.

தற்போது மியான்மர் நகரின் மத்திய பகுதியில் நிகழ்ந்துள்ள வன்முறையில் 47 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பதாக கடந்த 24ம் தேதிவரை கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கும் இந்த வன்முறைக்கு காரணம் முஸ்லிம் நகைக்கடை அதிபருக்கும்,பௌத்த இன வாடிக்கையாளர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவு என்று கூறப்படுகிறது.

கடந்த 22ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த வன்முறை வேகமெடுத்திருக்கிறது.நகரில் பதற்றமான நிலையே நிலவுகிறது என தெரிவித்திருக்கிறார் மியான்மரின் எதிர்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானவின் டெய்ன்.

வின்டெய்ன் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில்,“மெய்க்டிலியா நகரின் பல பகுதிகளில் சுற்றி வந்த பௌத்த இன குழுவினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்''என்கிறார் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் வேனேஹே.

கலவரத்திற்கு பயந்து மெயக்டிலா நகரை விட்டு பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களும் வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர், நிலைமையை சீர்படுத்த பாதுகாப்புப் படைகள் ஒன்றுமே செய்யவில்லை எனத் தெரிவித் துள்ளனர்.

முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைக்கும் பௌத்த இனவெறி இளைஞர்களும்,பிக்குகளும் அந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகளை தடுத்து விடுவதாக செய்தி வெளிப்பட்டுள்ளஅல்ஜசீரா,கடந்த22ம்தேதிவரை5பள்ளிவாசல்கள்தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நகைக்கடை அதிபருடன் நடந்த தகராறில் புத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் மியான்மரின் முக்கிய நகரமான யங்கூனிலிருந்து வடக்கில் சுமார் 550 கி.மீ. தொலைவில் உள்ளது மெய்திலா நகரம்.

இங்குள்ள சுமார் 1லட்சம் மக்கள் தொகையில் 75ஆயிரம் பேர் முஸ்லிம்கள். இருக்கிறார்கள்.இங்கு 17பள்ளிவாசல்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இருந்தன. அவற்றில் பல தீக்கிரையாக்கப்பட்டு விட்டன.

இங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து தீர்மானமாக எதையும் கொல்ல முடியவில்லை. இது குறித்து தகவல்களைத் திரட்ட மிகவும் சிரமமாக உள்ளது.

ஏனெனில்,இப்பகுதி முஸ்லிம்கள் தெருக்களில் நடமாமிகவும் பயப்படுகிறார்கள். வன்முறையிலிருந்து தப்பிப் பிழைக்கவேறு பாதுகாப்பான இடங்களுக்கும், மதரஸாக்களுக்கும் சென்று தங்கியுள்ளனர்...''என்கிறார் அல் ஜசீரா தொலைக் காட்சியின் செய்தியாளரானவின் டெய்ன்.

“நாங்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணருகிறோம். அதனால் நாங்கள் பாதுகாப்பு நாடி இப்போது மதரஸா மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தஞ்சம் அடைந்து இருக்கிறோம்...'' என செய்ன் ஷ்வே என்ற ஒரு கடை முதலாளி தெரிவித்ததாக கூறும் அல் ஜசீரா செய்தி யாளர்,இந்த சூழ்நிலை முன் கூட்டியே எதையும் அறிய முடியாத வகையில் மிக ஆபத்தானதாக இருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது மியான்மரில் ஏற்பட்டிருக்கும் கலவரம் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.அதோடு,வன்முறையில் ஈடுபட்டவர்கள்யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.இதற்கென மியான்மர் அரசு கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதை அமைதியை விரும்பும் மியான்மர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Pin It