திறந்து விட்ட யர் நீதிமன்றம்!

ஒரு குற்றவாளி என கருதப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவருக்கோ, அல்லது தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கோ கோர்ட்டு ஜாமீன் வழங்குவதற்கு முன்னால், அவருக்காக ரேஷன் கார்டு உள்ள ஒருவர் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சில வழக்குகளில் வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிடுவதை நாம் நடைமுறையில் பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் கூட முஸ்லிம்கள் என்றால் சில நீதிபதிகள் கூடுதல் நிபந்தனை விதிப்பது தொடர்கதையாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத யாத்திரை பிரசாரத்துக்காக மதுரை வந்த அத்வானியின் பயணப் பாதையில் திருமங் கலம் ஆலம்பட்டி தரைப் பாலத்தின் கீழ் பகுதி யில் பைப் வெடிகுண்டு வைத்து இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய நேரத்தில் வெடிகுண்டை கண்டு பிடித்து போலீசார் அதை செயல் இழக்கச் செய் தனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த இஸ்மத் (வயது 28) உள்ளிட்ட சிலரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான இஸ்மத்துக்கு திருமங்கலம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அப்போது, கிரேடு1 பதவி யில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் இஸ்மத் துக்காக சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனை காரணமாக, இஸ்மத்தால் ஜெயிலில் இருந்து வெளியே வர முடிய வில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடுமையான ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என்று இஸ்மத், மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த அப்பீல் மனு நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இஸ்மத் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா,

"இஸ்மத்தின் தந்தை கூலி தொழிலாளி. அவர்களுடைய உறவினர்கள் யாரும் அரசு பணியில் இல்லை. பொதுவாக நடுத்தர வர்க் கத்தை சேர்ந்தவர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கடுமையான நிபந்தனை காரணமாக தொடர்ந்து ஒருவர் ஜெயிலுக்குள் ளேயே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளக் கூடாது என்று ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது...'' என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி, கைதான இஸ்மத் துக்கு கீழ்கோர்ட்டு விதித்த கடுமையான நிபந்த னையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் இஸ்மத்தின் உறவினர் யாராவது ஒருவர் ஜாமீன் பத்திரம் கொடுத்தால் போதுமானது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் வழங்குவதில் வழக்கமாக பின்பற் றப்படும் நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு, ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு திருமங்கலம் நீதிமன்றம் கூடுதலாக கடுமையாக நிபந்தனை விதித்ததற்கு காரணம் இது அத்வானி சம்மந்தப் பட்டது என்பதாலா? அல்லது குற்றம் சாட்டப் பட்டவர் முஸ்லிம் என்பதாலா?

ஏற்கெனவே பயங்கரவாதிகள் பலருக்கு ஜாமீன் வழங்கும் நீதிமன்றங்கள், கர்நாடக குண்டு வெடிப்பு வழக்கின் 31 வது குற்றவாளி யான மதானிக்கு மட்டும் தொடர்ந்து ஜாமீன் மறுத்து வருவது குறித்து நடுநிலையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் நிலையில், திருமங் கலம் நீதிமன்றத்தின் ஜாமீனுக்கான கூடுதல் நிபந்தனை என்பது நீதியின் பாரபட்சமான பார்வையோ என்ற கருத்தும் வலுவாக எழுகிறது.

ஆனாலும் மதுரை உயநீதிமன்றக் கிளை நீதியை நிலை நாட்டியுள்ளது சற்றே ஆறுதல் தரும் விசயமாக உள்ளது. நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கு சலுகை காட்ட வேண்டாம். தண்டிப்பதில் தாட்சண்யம் காட்ட வேண்டாம். ஆனால் சட்டம் வழங்கியுள்ள உரிமையை அவர்களுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதுதான் நீதியும் கூட.

- முகவை அப்பாஸ்

Pin It