இந்தியாவில் தீவிர இந்துத் துவ சிந்தனை கொண்ட அல்லது முஸ்லிம் விரோத மனப்பான்மை கொண்ட அரசுகள் மற் றும் அதன் பாதுகாப்பு இயந்திரமான காவல்துறை, உளவுத்துறை, இன்னபிற விசாரணை அமைப்புகள் ஆகியவை - சட்டவிரோதக் கைதுகள், போலி என்க வுண்ட்டர்கள் நடத்தியும், தீவிரவாத முத்திரை குத்தியும் முஸ்லிம் சமூகத்தின் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.

சமீப காலமாக போலி என்கவுண்ட்டர்களும், சட்ட விரோதக் கைதுகளும் பெரும்பாலும் முஸ்லிம் இளை ஞர்களைக் குறி வைத்து நடத்தப்பட்டாலும் முஸ்லிமல் லாத ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இதுபோன்ற கொடுமை கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இச்சூழலில், இந்தப் பிரச்சினை வெறும் முஸ்லிம்க ளுக்கு மட்டுமே உரியது என்ற பார்வையை விடுத்து - இது ஒட்டுமொத்த தேசிய பிரச்சினையாக முன்னெடுக் கப்பட வேண்டிய தேவையிருக்கிறது.

இக்கருத்தை வலியுறுத்தி டெல்லி பாட்லா ஹவுஸ் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்வரை யாத்திரை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர் சஅடங, சஇஏதஞ, அசஏஅஈ, சாத்பவ் மிஷன், மிஷன் பாரதியம், குதாய் கித்மா கர் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லி பாட்லா ஹவுஸ் பகுதியிலிருந்து ஏப்ரல் 12ம் தேதி புறப்பட்டு ஆக்ரா, ஜான்சி, போபால், காண்ட்வா, மாலேகான், பூனே, ஹுப்ளி, பெங்களூரு வழியாக பயணித்து கடந்த 19ம் தேதி சென்னை வந்தடைந்தனர்.

பயணம் செய்து வந்த நகரங்களில் சட்ட விரோதக் கைது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங் களை சாத்வீக முறையில் மேற்கொண்டு வந்திருக்கும் இக்குழுவினர், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் இஸ்லா மிய அமைப்புகளையும், மனித உரிமை அமைப்புகளை யும் சந்தித்து தங்கள் யாத்திரைக்கான ஆதரவைத் திரட்டியுள்ளனர்.

சென்னை வந்த இக்குழுவினரை சிறுபான்மையினர் உரிமைகள் பேரவையின் எம். ஜைனுல் ஆபிதீன், டாக்டர். அஜ்மல் மற்றும் என்.சி.ஆர்.சி.யின் தமிழக பொறுப்பாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் ஆகியோர் வரவேற்ப ளித்து பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தி - சட்ட விரோத கைதுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கின் றனர்.

கடந்த 19ம் தேதி மாலை சென்னை மண்ணடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அலுவலகத்தில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களது யாத்திரை விவரித்தனர் பயணக் குழுவினர்.

அன்றைய தினம் இரவு ஹஜ் கமிட்டியில் தங்கியிருந்த பயணக் குழுவினரை நாம் சந்தித்துப் பேசினோம்.

பயணக் குழுவிற்கு தலைமையேற்று வந்திருக்கும் பைசல்கானிடம் யாத்திரையின் நோக்கம் குறித்துக் கேட்டோம்.

“எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கப்பார் கான் 1929ல் குதாய் கித்மத்கார் (இறை சேவையா ளர்கள்) என்ற அமைப்பைத் துவக்கினார். தற்போது அதன் தலைமைப் பொறுப்பை கப்பார்கானின் பேரனான அஸ்ஃபரந்யார் கான் ஏற்றிருக்கிறார். நானும் அந்த அமைப்பில் பொறுப்பு வகிக்கிறேன்.

இந்தப் பயணம் என்பது சட்ட விரோதக் கைதுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு பயணம் என்றாலும், பொதுவாக தேசிய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மத வெறிக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத் தியும் இந்த யாத்திரையைத் துவக்கியிருக்கிறோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை காவல்துறையின் சட்ட விரோதக் கைதுகள், என்கவுண்ட்டர்கள் தங்க ளுக்கு எதிராக மட்டும் நிகழ்த்தப்படுவதாக எண்ணுகின்ற னர். அது தவறான எண்ணம். இதுபோன்ற கொடுமைகள் இந்துச் சகோதரர்கள் மீதும் நிகழ்த்தப்படுகின்றன.

இவற்றை எதிர்கொள்ள பிற சமுதாய மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இஸ்லாமிய வரையறைக்குள் இருந்து கொண்டே பிற சமூக மக்களுடன் இணைந்து போரட்டங்களை நடத்த முடியும். நம் போராட்ட முறைகள் சிறந்த அணுகுமுறை யோடு இருக்க வேண்டும். பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்த வேண்டும்.

சட்ட விராத கைதுகளை காவல்துறை மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பை பிரதிகளாக எடுத்து ஒரு பத்து பேர் கொண்ட குழு 10 காவல் நிலையத்தில் கொண்டு போய் அந்தப் பிரதிகளைக் கொடுத்து காவல் துறைக்கு உச்ச நீதி மன்ற வழிகாட்டலை நினைவூட்டலாம். இதுவும் சாத்வீக வழிமுறைதான்.

இன்று முஸ்லிம்களால் பிரதமரிடத்தில் நேரடியாக பிரச்சினைகளை முன் வைக்க முடிவதில்லை. ஆனால் சமூக ஆர்வலர் மேதா பட்கரை பிரதமர் தனியாக சந்திக் கிறார். காரணம் என்ன? நர்மதா அணை பிரச்சினை மட்டுமல்லாமல் எல்லாப் பிரச்சினைகளையும் மேதா மக் கள் மயப்படுத்துகிறார்.

ஆக, சட்ட விரோதக் கைதுகள் ஆகட்டும், போலி என்கவுண்ட்டர் ஆகட்டும் இவை முஸ்லிம்களின் பிரச்சி னை என்று கருதாமல் ஒட்டு மொத்த மக்களின் பிரச்சி னையாக விவாதிக்கப்பட வேண்டும். அதற்காக நமது கருத்துக்கு ஒத்த சக்திகளுடன் இணைந்து உழைக்க வேண்டும்.

முஸ்லிம்களை வேட்டையாடிய நரேந்திர மோடியை முஸ்லிம்கள் மட்டும் எதிர்த்தால் வெற்றி பெற முடியாது. மோடி கொடூரமானவர், அநியாயக்காரர் என்ற குரல் பெரும்பான்மை இந்துச் சகோதரர்களிடமிருந்து ஒலிக்க வேண்டும். அதில்தான் வெற்றியிருக்கிறது.

எங்கள் சஅடங (மக்கள் இயக்கத்திற்கான தேசிய கூட்டமைப்பு) அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பி னரான சந்தீப் பாண்டேவிற்கு அயோத்தி கோவிலில் பிரசாதம் கொடுத்தார்கள். அநியாயம் நிகழ்ந்த இடத்திலி ருந்து தரப்படும் பிரசாதத்தை நான் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறி அந்த பிரசாதத்தை வீசியெறிந் தார். இதுதான் பெரும்பான்மை சமூகத்தின் குரல்.

குஜராத் மோடி 2000 முஸ்லிம்களை கொல்ல வில்லை. மாறாக இந்து தர்மத்தை கொலை செய்திருக்கி றார் என்கிற குரல் இந்து சகோதரர்கள் மத்தியிலிருந்து எழ வேண்டும். இதுபோன்ற முயற்சிகளே இந்த யாத் திரையின் நோக்கம். நாங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்க ளுக்கு முஸ்லிமல்லாத சகோதரர்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். இதை எங்கள் சாதனையாகவே கருதுகிறோம். '' என்று உத்திரப் பிரதேசத்திற்கே உரிய செம்மையான உருதுவில் யாத்திரையின் நோக்கத்தை விளக்கினார் ஃபைஸல் கான்.

- அபு

Pin It