இந்திய அரசியல் சாச னத்தின் அடிப்படை யில் அனைத்து மக்க ளுக்கும் பொதுவான ஆட்சி நடத்துவேன் என்று உறுதி மொழி ஏற்று முதல்வரான மோடி, முதல்வராக இருந்து கொண்டே முஸ்லிம்களுக் கெதிரான இனைச்சுத்திக ரிப்பு வேலையை கச்சிதமாக செய்து முடித்தார்.

படுபாதகங்களை செய்து பத்தாண்டுகள் கடந்தும் சுத்த தங்கமாக தன்னைக் காட்டிக் கொண்டு வலம் வருகிறார். இதன் மூலம் உலக அளவில் அதிதீவிர வாதியான அமெரிக்க ஆட்சியாளர்களையே தன் மீது பொறாமை கொள்ள வைத்துவிட்டார்.

ஏதேனும் ஒரு நாட்டில் முஸ்லிம்களின் ரத்தத்தில் காலையில் பல் துலக்கும் அமெரிக்காவையே கதிகலங்க வைத்து விட்டார் மோடி. அதன் தாக்கம்தான் மோடிக்கு விசா மறுக்கும் அமெ ரிக்காவின் முடிவு.

அமெரிக்கா இந்த முடிவை எடுத்து ஆண்டுகள் பல கழிந்தாலும், மோடிக்கு ஏற்பட்ட இந்த இழிவிலிருந்து மீட்கும் வகையில், "மோடி அமெரிக்காவிடம் விசாவே விண்ணப்பிக்காத நிலையில் தாமாகவே முன் வந்து மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்து விட் டது' என்று அத்வானி போன்றவர் கள் கூறியது, விசா கேட்காம லேயே மறுக்கும் அளவுக்கு மோடி கேவலமானவரா? என்ற தோற்றத்தை மக்களிடம் கொண்டு வந்து விட்டது.

இருப்பினும் இந்த பயங்கரவா திக்கு எப்படியேனும் அமெரிக்கா நுழைவுச் சீட்டை பெற்றுவிட சிலர் முயற்சிக்காமல் இல்லை. அந்த வரிசையில், அமெரிக்க எம்.பி. யான ஜோ வால்ஷ், அந்த நாட் டின் வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு இரு வாரங் களுக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி இருந்தார்.

அதில், நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் கொள்கை முடிவை மாற்றவேண்டும் என்று வற்புறுத்தி இருந்தார். இதற்கிடை யில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக் டோரியா நுலண்ட் பேட்டியளித்த போது, எம்.பி.யின் கடிதத்தை சுட்டிக்காட்டி நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் முடிவில் மாற்றம் வருமா? என்று கேட்கப் பட்டது.

அதற்கு பதில் அளித்த விக்டோ ரியா, மோடிக்கு விசா வழங்க மறுக்கும் அமெரிக்காவின் கொள்கை முடிவில் எந்த மாற்ற மும் இல்லை என்று திட்டவட்ட மாக அறிவித்தார் என்று செய்தி கள் கூறுகின்றன.

குஜராத் கலவரத்தில் மோடிக்கு எந்த சம்மந்தமுமில்லை என்று என்னதான் சங்பரிவாரங்கள் சரடு விட்டாலும் அதை அமெரிக்கா நம்பத் தயாராக இல்லை என்ப தைத்தான் விசா விசயத்தில் அமெரிக்காவின் திட்டவட்டமான முடிவு தெரிவிக்கிறது. ஆனாலும் ஷோ காட்டுபவர்கள் நம்பவா போகிறார்கள்? 

- முகவை அப்பாஸ்

Pin It