உலகின் கோடானு கோடி கண்கள் சாட்சியாக அத்வானி உள்ளிட்ட மதவெறி யர்கள் தலைமையில் நடை பெற்ற கரசேவை மூலம் அல் லாஹ்விற்கு சொந்தமான, முஸ்லிம்களுக்கு உரிமை யான பாபர் மஸ்ஜித் தரை மட்டமாக்கப்பட்டு, அங்கே தற்காலிக கோயிலை எழுப்பி காவிகள் வணங்கி வருகின் றன.

 இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., "சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களின் பேச்சுக்க ளால் தூண்டப்பட்டுத்தான் கரசே வகர்கள் மசூதியை இடித்தனர் என்றும், இது முன்கூட்டியே திட் டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல் என்றும் குற்றம் சாட்டியதோடு, இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தலை வர்கள் முரளி மனோகர் ஜோஷி, ரிதம்பாரா, வினய் கத்தியார், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, உமா பாரதி மற்றும் பலர் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டை சுமத்தி இருந்தது.

பலபேர் பார்க்க பள்ளிவாசலை இடித்த இந்த பயங்கரவாதிகளை 'ஒன்றும் தெரியாத பச்சைப் புள்ளைகள்' என்று தீர்ப்பளித்து, சமீ பத்தில் அலகாபாத் ஐகோர்ட்டு இவர்களை இவ்வழக்கிலிருந்து விடுவித்தது.

பாபர் மஸ்ஜித் இடம் விசயத்தில் இடித்தவனுக்கு இரண்டு பங்கும், இடத்தை இழந்தவனுக்கு ஒரு பங்கும் வழங்கிய அதே அலகாபாத் உயர் நீதிமன்றம்தான் இந்த அற் புதமான(!?) தீர்ப்பையும் வழங்கியுள் ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ., சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு செய்தது. இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள், இவ்வ ழக்கை ஜூலை 25ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

அடுத்த விசாரணையில் அத் வானி வகையறாக்கள் பாபர் பள்ளி வாசல் இடிப்பு குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்களா? அல்லது உச்சநீதிமன்றம், அலகாபாத்தின் தீர்ப்பை வழிமொழிந்து இந்த பயங்கரவாதிகளை விடுவிப்பதன் மூலம் நீதியை பாபர் பள்ளியைப் போல் தரைமட்டமாக்கப் போகி றதா என்பதைத்தான் இப்போது நீதியை விரும்பும் மக்கள் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.

மதவெறி மாய்க்கப்பட வேண் டுமெனில், அது பள்ளிவாசல் இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக் கப்பட்டால் மட்டுமே சாத்தியம் என்பதை நீதியரசர்கள் உணர்ந்து கொண்டால் நல்லது.

- முகவை அப்பாஸ்

Pin It