பாரதி முற்போக்கு வாலிபர் சங்கமும், தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து எட்டயபுரம் பாரதி மணிமண்டப வளாகத்தில் நடத்திய மகாகவி பாரதி விழாவில் 18-9-2011 ஞாயிறு அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் சிறந்த படைப்பாளிகளுக்கு 2011-ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்பட்டது.

ஞா.ஸ்டீபன் (தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள்), முனைவர் அ.சங்கரி (நாயன்மார் கதைகள் - பெரிய புராணமும் ஹரிஹரன ரகளை யும்), சு.இராமன் (மருந்து - மொழிபெயர்ப்பு), யூசுப் ராஜா (தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை - மொழிபெயர்ப்பு), எஸ்.அர்ஷியா (ஏழரைப் பங்காளி வகையறா), ஆர்.எஸ்.ஜேக்கப் (பனையண் ணன்), அன்பாதவன் (பம்பாய்க் கதைகள்), உஷா தீபன் (நினைவுத் தடங்கள்), ஆரிசன் (பள்ளிக்கூட மைனாக்கள்), வானொலி அண்ணா என்.சி.ஞானப் பிரகாசம் (நம்மால் முடியும்), முனைவர் மு.இராம சாமி (தோழர்கள்), மு.ஆதிராமன் (குதிரைச் சில்லு), லட்சுமணன் (ஒடியன்), முனைவர் சுமதிராம் (கோடிட்ட இடங்களை நிரப்புதல்), பா.ராமமூர்த்தி (உலக சினிமா), இரா.விச்சலன் (தமிழில் காந்திய நாவல்கள்) ஆகியோருக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் முதன்மைச் செயன்மையர் சண்முகம் சரவணன், முதுநிலை மேலாளர் அ.கந்த சாமி, மதுரை மண்டல மேலாளர் அ. கிருஷ்ண மூர்த்தி, சேலம் மண்டல மேலாளர் அ. கணேசன் ஆகியோர் விருதுகளை வழங்கினர். திருச்சி மண்டல மேலாளர் குமார், திண்டுக்கல் கிளை மேலாளர் எத்திராஜ், திருநெல்வேலி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள், வர்க்கீஸ் ஜெயராஜின் தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை - மதுரை மாவட்டம், தமிழில் காந்திய நாவல் கள், உலக சினிமா ஆகிய நூல்களுக்காக, பாவை பப்ளிகேஷன்ஸ், ஏழரைப் பங்காளி வகையறா, பனையண்ணன், நினைவுத் தடங்கள் ஆகிய நூல்களுக்காக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், நாயன்மார் கதைகள் - பெரியபுராணமும் ஹரி ஹரன ரகளையும் நூலுக்காக காவ்யா பதிப்பகம், புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து நூலுக் காகக் கிழக்குப் பதிப்பகம், பம்பாய்க் கதைகள் நூலுக்காக உதயக்கண்ணன் வெளியீடு, பள்ளிக் கூட மைனாக்கள் நூலுக்காக அன்னை ராஜேஸ் வரி பதிப்பகம், நம்மால் முடியும் நூலுக்காக கற்பக வித்யா பதிப்பகம், தோழர்கள் நூலுக்காக செம்பி படைப்பகம், ஒடியன் நூலுக்காக மணிமொழி பதிப்பகம், கோடிட்ட இடங்களை நிரப்புதல் நூலுக்காக வம்சி புக்ஸ் எனப் பத்துப் பதிப்பகங்கள் பாரதி விழாவில் பாராட்டப் பெற்றன.

இவ்விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் திரு.எஸ்.பி.ஆர்.சங்கர்குமார், திரு.கைலாசமூர்த்தி, திரு.தி.கணேசன், திரு.வெ.நடேசன், திரு.வ.பால முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரதி முற்போக்கு வாலிபர் சங்கமும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து எட்டயபுரம், பாரதி மணி மண்டப வளாகத்தில் நடத்திய மகாகவி பாரதி விழாவில் 17-9-2011 சனி அன்று திரு.பொன்னீலன் தலைமையில் நடை பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத் தலைவர் திரு.கு.வெங்கடேஷ்ராஜா வரவேற்புரையாற்ற, பொன்னம்பல அடிகளார் தொடக்கவுரையாற்றி னார். மனச்சாட்சியின் குரல் பாரதி (ரகுநாதன் கட்டுரைகள்), சிறையிலிருந்து ஓர் இசை (ஆர். நல்ல கண்ணு கட்டுரைகள்) ஆகிய நூல்களை திரு.ச.ரகு அந்தோணி வெளியிட திரு.ந.சேகரன் பெற்றுக் கொண்டார். தொகுப்பாசிரியர் திரு.இளசைமணி யன் ஏற்புரையாற்றினார்.

அண்மையில் அமரரான தமிழ் அறிஞர் கார்த்தி கேசு சிவத்தம்பி அவர்கள் திருவுருவப் படத்தை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வீ.அரசு திறந்து வைத்து உரையாற்றினார்.

பாரதி முற்போக்கு வாலிபர் சங்கமும், தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து எட்டயபுரம் பாரதி மணி மண்டப வளாகத்தில் 18-9-2011 அன்று ‘இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூக அசைவுகளில் சில நிகழ்வுகளும், போக்கு களும்’ என்ற பொருளில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.

 திரு.சீ.காசிவிஸ்வநாதன் வரவேற்புரையாற்ற திரு.இளசைமணியன் அறிமுக உரையாற்றிய இக்கருத்தரங்கில் ‘விவசாயிகளின் எழுச்சி’ என்ற தலைப்பில் தோழர் ஆர்.நல்லகண்ணு, ‘தலித் எழுச்சி’ என்ற தலைப்பில் திரு.ந.முத்துமோகன், ‘பாரதி பாடல்களுக்குத் தடையும் நீக்கலும்’ என்ற தலைப்பில் திரு.பா.ஆனந்தகுமார், ‘இன்றைய ஊடகம்’ என்ற தலைப்பில் திரு.ஹமீம் முஸ்தபா ஆகியோர் உரையாற்றினர். திரு.மு.மணிபாரதி நன்றியுரையாற்றினார்.

Pin It