பாஜக ஏன் தமிழ்நாட்டின் அரசியலில் தலைதூக்கக் கூடாது?

சியோனிசமும், இந்துத்துவமும் அழிவின் இரண்டு சக்திகள். இங்கு சியோனிசம் இல்லை. ஆனால் பாஜகவின் காவி இந்துத்துவா விழித்துக் கொண்டு இருக்கிறது.

பாஜகவால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகும் பாரதூரமான விளைவு, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைப் படுகுழியில் தள்ளப் போடப்பட்டிருக்கும் ஆபத்து அது என்பதற்குப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்பட்டிருப்பது ஒரு சான்று. இது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை எப்போதும் மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சியின் காவி அரசியல் தமிழ்நாட்டில் நுழையலாமா?

மோடியின் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவர்களும் இவர்களுடன் கூட்டணி சேர்ந்த எவரும் வெற்றிபெறக் கூடாது.

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அதிமுகவையும் புறக்கணிப்போம்!

“வெளிப்படையாகவே தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அதிமுகவையும் புறக்கணிப்போம்.பாசிசத்தை வீழ்த்த, ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்” என்று 16- ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விடுத்த அறிக்கை இப்பொழுதும் பொருத்தமாக அமைகிறது. இப்படி பாஜகவின் துரோகத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்பது தமிழர்கள் அறியாயதது அல்ல.

ஆகவே பாசிச பாஜகவை வீழ்த்த, ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க, அடுத்தமாதம் நடைபெற இருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்.

வீழ்த்துவோம் என்டிஏ என்ற பாஜக கூட்டணியை!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.