ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்ட இருண்ட காலத்தைக் கடந்து வந்திருக்கிறது தமிழினம். அந்த இருளை விரட்டி, ஒடுக்கப்பட்டோரின் இல்லங்களில் அறிவொளி ஏற்றியது திராவிட இயக்கம்!

பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த கல்வி, இன்று சமூகத்தின் கடைசி வரிசையில் இருக்கும் மனிதனுக்கும் எட்டுகிறது என்றால், அதற்குப் பெயர் தான் சமூகநீதி.

mk stalin with instagram boys"கல்வி ஒன்றுதான் யாராலும் திருட முடியாத சொத்து". அடிக்கடி நினைவூட்டும் நம் முதலமைச்சர் அவர்கள், ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஆணிவேர் என்பது 'அனைவருக்கும் கல்வி' என்பதில் உறுதியாக நின்று ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையாக்குவதே இந்த அரசின் இலக்கு.

படிப்பு என்பது வெறும் சான்றிதழ் அல்ல; அது ஒரு மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், பகுத்தறிவையும், சுயமரியாதையையும் வழங்குகிறது. யார் முன்னும் கையேந்தி நிற்காமல், நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைத் தருவது கல்வி மட்டுமே. வறுமையின் பிடியில் இருந்து ஒரு குடும்பத்தை முழுமையாக விடுவிக்க கல்வி எனும் ஏணி அவசியம். இன்று தமிழகத்தின் பிள்ளைகள் உலகமெங்கும் உயர்ந்த பொறுப்புகளில் அமர்ந்திருப்பதற்குக் காரணம், நீதிக்கட்சி காலம் முதல் விதைக்கப்பட்ட கல்விக் கொள்கைதான்.

திராவிட இயக்கம் ஒருபோதும் ஆயுதங்களை ஏந்தியதில்லை; அது புத்தகங்களை மட்டுமே ஏந்திப் போராடியது. அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே, "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற இலக்கை நோக்கி நாம் நடைபோடுகிறோம்.

வாழ்க கல்வி! வளர்க பகுத்தறிவு! வெல்க சமூகநீதி!

ஸ்டாலின் தொடரட்டும்…

தமிழ்நாடு வெல்லட்டும்!

- முனைவர் காந்தி பாபு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.