குஜராத், துவாரகாவில் திராவிடர்கள் ஆட்சி செய்தார்களாம். அதனால் மோடிக்கும், திராவிடத்திற்கும் தொப்புள்கொடி உறவு உள்ளதாக டி.டி.வி.தினகரன் திருச்சி பாஜக கூட்டத்தில் பேசியிருக்கிறார். குஜராத்தை ஆட்சி செய்த திராவிட மன்னன் சேரனா? சோழனா? பாண்டியனா? குஜராத்தி மொழி ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது கூட தெரியாத 'ஞானசூன்ய' மாகப் பேசுயிருக்கிறார், டி.டி.வி.
திமுக அழியும் நிலையில் இருக்கிறதாம், பிரபல சோதிடர் எடப்பாடியின் கணிப்பு. இதை அழிந்து கொண்டிருக்கும் அதிமுக எடப்பாடிக்குச் சொல்ல எந்தந் தகுதியும் இல்லையே!
தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர தயாராகிவிட்டார்கள், டிரம்ப்பின் நண்பர் மோடி சொல்கிறார். அப்படி எல்லாம் இல்லை, திராவிட ஆட்சி தொடரவே விரும்புகிறார்கள் தமிழர்கள் என்பதை ஏனோ மறைக்கிறார் அவர்.
தமிழ்நாட்டை நாங்கள் முன்னேற்றுவோம் என்று பியூஸ் கோயல் சொல்கிறார். அது உத்தரப் பிரதேசம் போல இருக்கும் என்பதையும் சேர்த்துச் சொல்லி இருக்கலாம்.
திமுகவில் வாரிசு அரசியல் என்கிறார், நயினார் நாகேந்திரன்.
வேத் பிகாஷ் கோயல் x பியூஸ் கோயல்; தேபேந்திர பிரதான் x தர்மேந்திர பிரதான்; ராஜ்நாத்சிங் x பங்கஜ் சிங்; எஸ்.ஆர்.பொம்மை x பசவராஜ் பொம்மை; வசுந்தர ராஜே x துஷ்யந்த் சிங்; மேனகா காந்தி x வருண் காந்தி இப்படி நீண்டுகொண்டு போகும் பாஜக வாரிசுகளை ஏன் சொல்ல மறுக்கிறார் நயினார்?
மொத்தத்தில் திருச்சி பாஜக மாநாட்டில் "ராமா, ராமா கரணம் போடு" என்பதைப்போல என்டிஏ கூட்டணியினர் 'கரணம்' போட்டிருக்கிறார்கள், உருப்படியாய்ப் பேசியதாகத் தெரியவில்லை.
திருச்சிக்கு வந்தார் சென்றார் மோடி.
திருச்சிக்குச் சென்றார் வென்றார் ஸ்டாலின்.
- கருஞ்சட்டைத் தமிழர்