திராவிடர் கழகம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அதில் திருச்சிக்கு அருகில் சிறுகனூரில், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அமைய இருக்கும் “பெரியார் உலக”த்தில் 95 அடி உயர சிலை அமைக்கப்படும், அதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது என்ற செய்தி இடம்பெற்றிருந்தது. இச்செய்தி சில ஏடுகளில் தவறாகவும் இடம் பெற்றிருந்தது.

பெரியார் உலகம், 27 ஏக்கர் நிலப்பரப்பில் தந்தை பெரியாரின் ஒலி, ஒளி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய பூங்கா, சுவையான உணவகம், வாகன நிறுத்தத்துக்கு வசதிகள் என்று, அமைய இருக்கின்ற சிறப்புமிக்க உலகத்தில், 40 அடி பீடம்,  95 அடி உயரத்தில் தந்தை பெரியாருக்கு ஒரு சிலையும் அமைக்கப்படும். இந்தப் “ பெரியார் உலகம்”  அமைக்க ஏறத்தாழ  ருபாய் 100 கோடி ஆகலாம்.

உடனே ஒரு கோயபல்ஸ்,  படேல் சிலைக்கு 3,000 கோடி, பெரியார் சிலைக்கு 100 கோடியா?  என்ன வித்தியாசம்? என்று சங்கியின் குரலாகக் கதறியது.

குஜராத்தில் படேல் சிலைக்கு மட்டுமே 3,000 கோடி செலவு செய்தனர். இங்கே பெரியார் சிலைக்கு மட்டும் இல்லை, ஒட்டு மொத்த பெரியார் உலகத்திற்கே செலவு 100 கோடி வரலாம். அந்த ‘சீமை’ க் கோயபல்ஸ் மண்டைக்கு இவை எல்லாம் எட்டாது, அதுகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை.

எனவே அமையவிருக்கும் திருச்சி, சிறுகனூர் “பெரியார் உலகம்” சிறப்பாகவும், விரைவாகவும் அமைய வேண்டும் என்று வாழ்த்தி, வரவேற்போம் - நாம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It