தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி வலிமையாக இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணி கலகலத்துப் போய்விட்டது.
அ.தி.மு.க நான்கு குழுக்களாக சிதறிக்கிடக்கிறது. இராயப்பேட்டை தலைமைக் கட்டிடத்தைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இவரின் கூட்டணியில் இருக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. அதுவும் தமிழ்நாட்டில் 'போனி' ஆகாத கட்சி.
புறக்கடை வழியாக 'பம்மிப் பம்பி' ஆட்சியைப் பிடித்துப் பழக்கப்பட்ட பா.ஜ.க.வின் பாச்சா பலிக்காததால் தீவிரத் தேர்தல் திருத்தம் (SIR) என்ற பெயரில், பீகாரில் செய்த தில்லுமுல்லுகளைத் தமிழ்நாட்டிலும் செய்து, புறக்கடை அரசியல் செய்து கொண்டு இருக்கிறது.
SIR விண்ணப்பங்கள் வழங்குவதில் குழப்பம், கேட்கும் கேள்விகளில் குழப்பம், கொடுக்க முடியாத ஆவணங்களைக் கேட்பதில் குழப்பம், ஆதார் அட்டையை ஒதுக்கித் தள்ளுவதிலும் குழப்பம். அதுவும் ஒருமாதத்தில் முடிக்க வேண்டுமாம்.
65 லட்சம் வாக்காளர்களைக் காணாமல் ஆக்கிவிட்டு பீகார் தேர்தலில் வென்றதைப் போல இங்கும் நடத்தப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இதை வரவேற்றுப் பேசியும், இதற்கு ஆதரவாக வழக்குத் தொடுப்பதும் எடப்பாடியின் நேர்மையற்ற, தமிழ் விரோத அரசியலாகவே இருக்கிறது.
வாக்குரிமை என்பது மக்களின் ஆயுதம். அதைப் பறிக்க நினைக்கும் காவி பா.ஜ.கவையும், இலை அ.தி.மு.கவையும் தேர்தலில் முறியடிக்க வேண்டும், முறியடிப்பார்கள் மக்கள்.
- கருஞ்சட்டைத் தமிழர்