திமுக ஊழல் கட்சி, அது ஊழல் ஆட்சி. மக்கள் ஸ்டாலின் ஆட்சியை வெறுக்கிறார்கள். அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி போகிற போக்கில் பேசிக் கொண்டு இருக்கிறார்.
கருணாநிதி என்ற பெயரும், ஸ்டாலின் என்ற பெயரும் தமிழ்ப் பெயர்களா என்று திருமாவளவனுடன் முட்டிக் கொண்டு இருக்கிறார் டி.டி.வி. தினகரன், அவரின் அரசியல் அவ்வளவுதான்.
ஆட்சியில் பங்கு தருகிறோம் கூட்டணிக்கு வாருங்கள் என்று கூவிக்கூவி அழைப்புவிடுத்த தவெக தனிமரமாக நிற்கிறது.
திமுகவுக்கு சரியான எதிரி யாரும் இல்லை என்று பேசும் ஸ்டாலினுக்கு, என்னை நினைவுக்கு வரவில்லையா? என்று அவ்வப்போது தமாஷ் செய்து கொண்டு இருக்கிறார் சசிகலா.
தேர்தல் வரும்போது மட்டும் தமாகாவின் ஒரே நிரந்தர உறுப்பினர் ஜி.கே.வாசன் என்டிஏ கூட்டணிக்குள் ஒளிந்து கொள்வார்.
பிரேமலதா அம்மையாரின் அரசியல் வியூகத்தைப் புரிந்து கொள்ள இன்னும் யாரும் பிறக்கவில்லை.
டாக்டர் கிருஷ்ணசாமி, நாங்கள் இருக்கும் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவ்வப்போது வந்து பஃபூன் வேலையைக் காட்டுவார். எந்தக் கூட்டணி என்றால் தெரியாது.
நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இருவரும் அமித்ஷாவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
திமுகழகத் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் கிரேக்க வீரன் 'ஹெர்குலிஸ்' போல, தேர்தல் களத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறார், தன் கூட்டணியுடன்.
இன்னும் இரண்டு மாதங்களில் வெல்லப் போவது யார்?
ஸ்டாலின், ஸ்டாலின், ஸ்டாலின்!
ஆம், திமுக கூட்டணி!
- கருஞ்சட்டைத் தமிழர்