தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆம் பிறந்தநாளில் அவருக்கு நம் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் நம் முதல்வர் தன் பிறந்த நாளுக்குப் ‘பரிசு’ கேட்கிறார். அதுவும் மக்களிடம் இருந்து பரிசு கேட்கிறார்.

stalin 322என்ன பரிசு? அவரே சொல்கிறார்...

‘மத்தியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதுவே, நீங்கள் எனக்குத்தரும் பிறந்த நாள் பரிசு.’

அடடா! இப்படியும் ஒரு தலைவரா? தன் பிறந்நாளின் மகிழ்வைவிட மக்களின் மகிழ்ச்சியே பெரியது, மக்களின் நலமே முக்கியம் என்றல்லவா கருதுகிறார் முதல்வர்!

இன்றைய ஒன்றிய அரசின் ஆட்சியில் விலைவாசிகளின் கட்டுப்பாடு இல்லா உயர்வு, எரிபொருள்களின் விலையேற்றம், ஜி.எஸ். டி. என்ற பெயரில் ஒன்றியத்தின் சுரண்டல், மாநில உரிமைகளைப் பறிப்பதும் - அழிப்பதும், சாதிய-இன-மத வெறிகளைத் தூண்டுவது போன்ற மக்கள் விரோதச் செயல்களால் மக்கள் நிம்மதி இழந்து கொண்டு இருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் ஒன்றிய அரசு ஒரு பாசிச அரசு.

இன்னும் 100 நாள்களில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பா. ஜ. க. வெற்றி பெற்றால் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறுமா என்பது கூட சந்தேகம்தான்.

அதனால்தான் மக்களின், நாட்டின் நலனில் அக்கறை காட்டும் நம் முதல்வர் ஒன்றிய அரசின் ஆட்சி மாற்றத்தைப் பரிசாகக் கேட்கிறார்.

மக்களிடம் சொல்லுங்கள் முதல்வர் கேட்கும் பரிசை.

‘இந்தியா கூட்டணி வெற்றி’ என்ற பரிசோடு அன்று மீண்டும் வாழ்த்துவோம்.

அதற்குப் பாசிச பா.ஜ.கவைத் தோற்கடிப்போம், வரும் தேர்தலில்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It