“வடக்கே இருந்து வரும் ஆதிக்கக் குரலுக்கு ஒருபோதும் தெற்கே இடமில்லை" என்பதைத் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் இந்த மண்ணில் ஆழமாக விதைத்துச் சென்றிருக்கிறார்கள். இன்று அதே முழக்கத்தை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் தமிழ்நாட்டின் தளபதி, டெல்லி ஏகாதிபத்தியத்தின் செவிகளில் அறைந்து சொல்லியிருக்கிறார்.mk stalin karunanidhi anna periyarஒன்றிய பாசிச பாஜக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைக்கு எதிராகத் தனது கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் பதிவு செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி வெறும் அரசியல் உரையல்ல; அது, டெல்லி ஆதிக்கத்தின் செருக்கை அடக்கப் புறப்பட்டத் திராவிடத்தின் போர்க்குரல்!

குடும்ப நலத் திட்டத்தை இந்தியாவில் முன்னணியில் நின்று செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குப் பரிசாக அதன் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பது மிகவும் வேதனைக்குரியது என கலைஞர் அன்றே சாடினார்.

“1962-ஆம் ஆண்டு வரை 41-ஆக இருந்த தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள், 1967-இல் 39-ஆகக் குறைக்கப்பட்டன. மக்கள் தொகையைக் குறைத்தது குற்றமா? நாட்டு நலனுக்காகச் சிறப்பாக செயல்பட்ட ஒரு மாநிலத்தைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?.

மக்கள்தொகைப் பெருக்க விகிதம் குறைகிறது என்பதற்காகத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக்கூடாது. அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என 1999-லேயே தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அழுத்தம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

பிரதமர் மோடி தமிழர்களையும், தென் மாநில மக்களையும் இரண்டாம்தரக் குடிமக்களாகப் பார்க்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது என கர்ஜித்துள்ளார். ஒன்றிய பாசிச பாஜக அரசின் ஆணவப்போக்கைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றி, நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என முதல்வர் அறைகூவல் விடுத்துள்ளார்.

“இதுவரை டெல்லியின் பிடிக்குள் வராத தமிழ்நாடு, இனி டெல்லியைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வரும்!" என்று தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவர் இயற்றிய அரசியலமைப்பைக் காக்கப் புறப்பட்ட இந்தத் திராவிடப் போர், டெல்லி ஏகாதிபத்தியத்திற்குப் பாடம் புகட்டும். தமிழ்நாடு இனி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்காது. இனி டெல்லி சொல்வதைத் தமிழ்நாடு கேட்காது; மாறாக, தமிழ்நாடு சொல்வதைத்தான் டெல்லி கேட்டாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கும்.

 “தேர்தலும், அதிகாரமும் இரண்டாம் பட்சம். சுயமரியாதையும், மாநில உரிமைகளுமே திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சு” எனச்சொல்கிறார் முதல்வர்

தமிழ்நாடு போராடும்!.

தமிழ்நாடு வெல்லும்!.

ஸ்டாலின் தொடரட்டும்…

தமிழ்நாடு வெல்லட்டும்!.

- முனைவர் காந்திபாபு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.