2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்களிக்கும் நாள் நெருங்கிவிட்டது, ஏப்ரல் 23.

யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? சர்வாதிகாரப் பாசிச டில்லி தாமரை அணிக்கா? சமத்துவ சமூகநீதிக் காவலின் அடையாளம் தமிழ்நாட்டு உதயசூரியன் அணிக்கா?

mk stalin in black shirtபாஜகவின் தாய்வீடான ஆர்எஸ்எஸ்-இன் 2000ஆம் ஆண்டின் தலைவர் கே.சுதர்சன் அன்று சொன்னார், "இந்திய அரசியல் சாசனம் வெளிநாட்டுக் கொள்கை, பண்பாட்டைச் சார்ந்திருக்கிறது. அதைத் தூக்கி எறியுங்கள். இந்தியப் "புனித நூலின்" அடிப்படையில் சாசனத்தை உருவாக்குங்கள்". அந்தப் புனித நூல் 'மனுஸ்மிருதி'

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது அமெரிக்காவின் லெய்டன் தீவிற்குச் சென்றிருந்தார். அங்கு இந்துக்களிடம் "இப்போது நமக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையில்லை. வருங்காலத்தில் நமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும். அப்போது நாம் விரும்பிய (ராமராஜ்ய) இந்தியாவை அமைப்போம்" என்று பேசியிருக்கிறார்.

சுதர்சன் இந்திய அரசியல் சாசனத்தை இந்துத்துவ சாசனமாக மாற்ற வேண்டும் என்றார். வாஜ்பேயி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வரட்டும் என்றார். இந்திய ஒன்றியம் எத்தகைய ஆபத்தில் இருக்கிறது என்பது இப்போது புரிகிறதல்லவா?

இப்போதுவரையும் தென்மாநிலக் கட்சிகளின் தொகுதிகள் பெறுகின்ற வெற்றியின் அடிப்படையில் ஒன்றியத்தில் ஆட்சி அமைந்தது. அதேநேரம் தென்மாநிலங்கள், குறிப்பாகத் தமிழ்நாடு பாஜகவுக்குப் பெரும் தடையாக இருந்து வருகிறது. கடந்தகாலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டைச் சரியாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது தென்மாநிலங்கள். அதற்குத் தண்டனையாகத் தொகுதிவரையறை என்ற பெயரில், தொகுதிகளை இங்கே குறைத்துவிட்டு, குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தாத உத்தரப் பிரதேசத்திற்கு 80இல் இருந்து 143 ஆகவும், பீகாரில் 40 முதல் 79 வரையும், இந்தி பேசும் சத்திஸ்கர், டில்லி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தொகுதிகளை அதிகப்படுத்தவும் திட்டமிடுகிறது ஆர்எஸ்எஸ்/ பாஜக. இதன்மூலம் தமிழ்நாடு 40 விழுக்காடு பின்னோக்கித் தள்ளப்படும். இதற்காகவே 543 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 850 இருக்கைகள் கொண்டதாக அமைத்திருக்கிறது பாஜக. இதன்மூலம் இனிவடக்கு மாநிலங்கள் வாக்களித்தாலே ஒன்றிய ஆட்சியை அமைக்கலாம் என்று சதி செய்கிறது பாஜக. ஒட்டு மொத்த இந்தியாவும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களால் இனி ஆளப்படும் என்பது இதற்குள் இருக்கும் சதி!

ஆகவே, கண்டிப்பாக பாஜகவைத் தோற்கடித்து விரட்ட வேண்டும் இந்தத் தேர்தலில்!

பாஜக, தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைப் பறிக்கிறது. பாசிசத்தைக் கையில் வைத்திருக்கிறது. மதவாதத்தைத் தூண்டி ஜனநாயகத்தைச் சிதைத்துக் கலவரத்தைத் தூண்டும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறது.

ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எவ்வித திட்டங்களையும் ஒதுக்குவதில்லை. தமிழ்நாட்டின் நலன்களைப் புறக்கணித்து வருகிறது. அத்துடன் கூட்டாட்சித் தத்துவத்திற்கு மாறாக, மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து, இந்தி மற்றும் கலாச்சார திணிப்பில் துணிந்து அது ஈடுபடுகிறது.

முக்கியமாக "ஏப்ரல் 16, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில் வலுக் கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்" என்று தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வது கவனத்திற்கு உரியது.

நமது முதலமைச்சர் சொல்கிறார், " தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டு இருக்கிறது" என்று. எஸ்.வி.ராஜதுரை சொல்கிறார், "வாசலில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது பாசிசம்".

பாசிச ஆர்எஸ்எஸ்/ பாஜகவை முற்றிலுமாகத் துடைத்து விரட்டியடிக்க வேண்டும் அதன் கூட்டணியுடன்.

வாருங்கள்! உதயசூரியன் தலைமையிலான மதச்சார்பற்ற திமுக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம்.

சுதர்சன், வாஜ்பேயி வழியில் வந்த மோடி, அமித்ஷாக்களை எச்சரிக்கிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நெருப்போடு விளையாட வேண்டாம் !"

எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.