23-04-2026 தேர்தல் நாள். விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் நாள்கள் நகர்கின்றன. களத்தில் முதன்மையாக இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. மற்றது மதத்தை அரசியலாக்கி மக்களைப் பிளவுபடுத்தும் பாசிச பாஜக தலைமையிலான என்டிஏ (டில்லி) கூட்டணி. இதில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என்று ஒவ்வொரு துறைவாரியாக வளர்ச்சிப் பணிகளைச் செய்து வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். எந்தத் துறைதான் பின்தங்கி இருக்கிறது என்று தேடவேண்டிய நிலையில், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளார் முதல்வர். மக்களின் பெருவாரியான ஆதரவு திமுகவுக்குத்தான் என்பதைச் செரிக்க முடியாமல், தரம்தாழ்ந்த, நாலாந்தர மனிதனைப் போல, கணக்கற்றப் பொய்களை சிறிதும் நாணமில்லாமல் பேசிக்கொண்டு திரிகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
நயினார் நாகேந்திரன் பாஜகவுக்குத் தலைவராக இருந்தாலும், அந்த வேலையைத் தேர்தல் ஆணையம் சரியாகச் செய்து கொண்டு இருக்கிறது.
SIR தொடங்கி தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகிய உயர்மட்ட அதிகாரிகளை மாற்றிவிட்டு வேறு அதிகாரிகளை நியமிக்கிறது தேர்தல் ஆணையம். பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்று மாற்றம் செய்யாமல் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் செய்கிறது? சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?
எப்படி இருந்தாலும் பாஜக என்ற பாசிச வடிவம் எந்த விதத்தில், யார் தோளிலாவது ஏறியாவது தமிழக அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும்.
மக்கள்தான் தமிழ்நாட்டின் அதிகாரம். அது சமூகநீதிக்கான அடையாளம். மதவாத பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு ...
திமுக தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள், வரும் தேர்தலில்! தமிழ்நாட்டில் தொடர வேண்டும் திராவிட மாடல் அரசு - புனித ஜார்ஜ் கோட்டையில்!
- கருஞ்சட்டைத் தமிழர்