கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

காஷ்மீர் மாநிலத்தின் இயற்கை அழகைப் பார்த்துக் கொண்டே இருக் கலாம். பச்சைபசேலென்று புல் தரை, பாதையின் இரண்டு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூக்கள், நிழல் தரும் அகண்ட விழுதுகள் தொங்கிய மரங்கள், தெளிவான நீல வர்ணத்தில் காட்சி தரும் ஏரிகள், பனி மூடிய மலைகள் என்று அந்த சொர்க்க பூமியின் அழகை இரசித்துக் கொண்டே இருக்கலாம்.  

அப்படிப்பட்ட சொர்க்க பூமி இன்று புல் தரைகள் மா பெரும் பாறைகளாக மாறி காட்சி கொடுக்கிறது. இன்று மரங்களுடைய விழுதிற்கு பதிலாக முள் வேலிகள் தொங்குகின்றன. வன்முறை யால் காஷ்மீரின் அழகு சிதைந்து காணப்படுகிறது. அந்த அமைதிப்பூங்கா இன்று அனல் நெருப்பாக தவிக்கிறது. பூக்களால் அலங் கரிக்கப்பட்ட படகு வீடுகள் இன்று குழம்பிக் கிடக்கும் தால் ஏரியில் தூசு படிந்து மிதந்து கொண்டிருக் கிறது. தன்னை அலங்கரிக்க சுற்றுலா பயணிகள் வர மாட் டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கி வாடிப் போகும் படகு வீடுகளும், இன்றாவது ஒரு வேளை சோற்றுக்கு வழி பிறக்காதா? என்று எண்ணிக் கொண்டு பரிதவிக்கும் படகு ஓட்டுனர்களும் இன்றைய காஷ்மீரின் பழுதுச் சின்னமாக காட்சி கொடுக்கி றார்கள். காஷ்மீர் என்ற அழகிய சோலைவனம் இன்று அழுது வடியும் சோதனைக் களமாக தோன்றுகிறது. 

உள்துறை அமைச்சர் காஷ்மீருக் கென்று ஒதுக்கப்பட்ட இராணுவப் படையின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்று அறிவித்தார். 1987ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீரில் இராணுவப் படையும், இராணுவத்தைத் தழுவிய காவல்துறையும் நடமாடிக் கொண் டிருக்கின்றன. அங்கு வாழும் மக்கள் மனநிறைவிற்காக அமைதியை கனவில் கூட நினைக்க முடிவதில்லை. காஷ் மீரில் வளர்ந்து 18 வயதுள்ள இஸ் லாமியப் பெண் தன்னுடைய குழந் தைப் பருவம் எப்படிப்பட்ட மோச மான சூழ்நிலையை பார்க்க வேண்டிய தாயிற்று? என்று நினைவு படுத்தி உலர்ந்து போன காயத்தை மறுபடியும் ஈரமாக்கிக் கொண்டாள். அவளுடைய குழந்தைப் பருவம், ஒரு காலத்தில் சொல்லப்பட்ட அழகிய காஷ்மீரை பிணக்கிடங்காக பார்த்தது. அமைதிக்கு பெயர்பெற்ற காஷ்மீர் எண்ணற்ற மக்கள் தங்களுடைய உற்றார் உறவினர் களை இழந்து ஓலமிடும் நரகமாக தோன்றிய காஷ்மீர் மட்டும்தான் அவளுடைய ஞாபகத்திலுள்ளது. அவளுடைய குழந்தைப் பருவம் துப் பாக்கிகளின் ஓசையில் வளர்ந்தது. மூன்று வயதில் கண் எதிரே நடந்த கொலைச் சம்பவத்தை நினைவுப் படுத்திச் சொல்லும் அந்த இஸ்லாமியப் பெண்ணின் கண்கள் காஷ்மீர் சாதாரண வாழ்க்கை நிலைக்கு எப்போது திரும் பும்? என்று ஏங்குகின்றன.  

வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை, அப்படியே நடந்து சென்றால் பாதுகாப்பாக வீடு திரும்பு வோமா? என்ற பயத்தோடு நடமாடு கிறோம். தன்னைப் போன்ற வயதுக்கு வந்த பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை. ஒருபக்கம் தீவிர வாதிகளின் தொல்லை என்றாலும், இன்னொரு பக்கம் இராணுவர்களின் அராஜகம் பொறுக்க முடியவில்லை. தீவிரவாதிகள் எப்போதாவதுதான் துன்புறுத்துகிறார்கள். ஆனால் இராணு வமோ தன்னைப் போன்ற பல பெண் களின் அன்றாட வாழ்க்கையை தினம் தினம் கொன்று கொண்டு இருக்கிறது. மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவ மும், காவல்துறையும் செயல்படு வதற்கு பதிலாக பெண்களுடைய வாழ்க்கையோடு விளையாடிக் கொண் டிருக்கிறது. 

மேலும் சுற்றுலாத்துறையின் மூலம் எந்த விதமான வருமானத்தை யும் எதிர்பார்க்க முடியாத நிலை யினால் மாநில அரசாங்க கஜானா காலியாக இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி அங்கிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகள், சிந்திக்க முடியவில்லை. ஒருசில பதவி யிலிருப்பவர்கள் வயதுக்கு வந்த பெண்களை விரும்பத்தகாத ஆன்மாவை விற்றுப் பிழைக் கும் தொழிலில் ஈடுபடுத்தி, அவர்கள் சம்பாதிக்கும் வரு மானத்திலிருந்து முக்கால்வாசி பங்கை பலவந்தமாக பிடுங்கிக் கொள்கிறார்கள். இதற்கு காவல்துறையும் துணை செல்கிறது.  

தங்களுடைய கற்பிற்கு களங்கம் ஏற்படாமலிருக்க வயது வந்த பெண்கள் அழகை மறைப்பதற்காக எண்ணெயில் கருப்பு நிறச் சாயத்தை கலந்து முகத்தில் பூசிக் கொண்டு நடமாடிய நாட் களையும் நினைவு கூர்கிறார்கள். முதலில் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழியே இல்லாமல் தட்டுத் தடுமாறும் இளவயது பெண்கள் தங்களுடைய முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை.  

- அண்மையில் தென்காஷ்மீரி லுள்ள கிராமத்தில் ஷோபியா இனத் தைச் சார்ந்த இரண்டு இளம் பெண்கள் காவல்துறைப் பணியிலிருப்பவர்களால் கற்பழித்து, கொலை செய்யப்பட் டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் கிராம மக்களை பெருமளவில் பாதித்து, அவர் களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கிறது. பெண்களுக்கு பாதுகப்பு கொடுக்க முடியாத மாநில அரசை எதிர்த்து போராட்டமும், கலவரமும் நடை பெறுகிறது. பொதுமக்களுக்கு பாது காப்பு தர வேண்டிய இராணுவமும், காவல் துறையும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபடுவது மிகவும் வெட்கப் பட வேண்டிய விஷயமாகும். எந் நேரமும் கண்மூடித்தனமாக வெடித்துக் கொண்டிருக்கும் குண்டும், துப்பாக்கி களும் அப்பாவி பொது ஜனங்களை விழுங்கி விடுகிறது. மேலும், இராணுவம் எண்ணற்ற இளைஞர்களை பிடித்து துன்புறுத்தி அவர்களை தீவிரவாதி யென்று வற்புறுத்தி ஒத்துக் கொள்ள வைக்கிறது. இதனால் எத்தனையோ நிரபராதிகள் ஒரு குற்றமும் செய்யாமல் இராணுவத் திடம் சிக்கி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு நாட்டையே பாதுகாக்கும் கடமை இந்திய இராணுவத்தின் கைகளில் ஒப்படைக் கப் பட்டிருக்கிறது. இன்று காஷ்மீரின் இளவயது பெண்களும், ஆண்களும் இராணுவத்தின் மீது நம்பிக்கையை இழந்து, அவர்கள் காஷ்மீர் மாநிலத் திலிருந்து வெளியேற வேண்டுமென்று போராடுகிறார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு மத்திய அரசு ஏதா வது நல்லதொரு நடவடிக்கை எடுக்கு மென்ற தன்னம்பிக்கையோடு அன்றாட வாழ்க்கையை பயத்தோடும் பீதி யோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். காஷ்மீருக்கு எவரிடமிருந்து சுதந் திரம் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் மக்கள் வாழ்க்கைக்கு நல்ல தொரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று ஏங்குகிறார்கள். அவர்கள் ஏக்கம் நிறைவேற வேண்டும். காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.