தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் பூவுலகின் நண்பர்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு, விவாதங்கள், பிரசுரங்கள், வெளியீடுகள், பொது நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வரும் பூவுலகின் நண்பர்கள், மேலும் சூழல் செயல்திறனாளர்களை இணைத்து சூழல் குறித்த ஆர்வத்தையும் அக்கறையையும் பரவலாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சூழல் குறித்த அக்கறை கொண்ட யாரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சூழல் செயல்திறனாளராக இணையலாம். அவரவர் சக்திக்கேற்ப பணிகளை மேற்கொள்ளலாம். சூழல் குறித்த புதிய அம்சங்களை அடையாளம் காட்டலாம். சூழல் குறித்த தங்கள் அறிவையும், அனுபவத்தையும் பகிரலாம். உரிய நிபுணர்களிடமிருந்து தேவையான ஆலோசனைகளைப் பெறலாம். இதற்காகச் சூழல் குறித்த ஆர்வம் கொண்டோரைப் பதிவுசெய்து உரிய பயிற்சி அளித்து சூழல் செயல் திறனாளராக உருவாக்கும் முயற்சியைப் பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சூழல் செயல்பாடுகளில் தற்போது அமைப்பு ரீதியாக செயல்படுவோரும் இந்தச் செயல்பாடுகளில் பங்கேற்கலாம். அவர்தம் அமைப்புரீதியான அடையாளங்களை இழந்துவிடாமல் சூழல் செயல்பாடுகளில் மேலும் செம்மையாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் பூவுலகின் நண்பர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளிலும், ஜாதி & மதம் சார்ந்த அமைப்புகளிலும் பதவி வகிப்போர் தவிர மற்றவர்கள் யாரும் பூவுலகின் நண்பர்களின் செயல்பாடுகளில் சூழல் செயல்திறனாளராகப் பங்கேற்கலாம்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சூழல் செயல்திறனாளராக இணைந்து செயலாற்ற விருப்பமுள்ளவர்கள், தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பைக் கீழ்க்காணும் இணைய முகவரியில் இணைத்துள்ள படிவத்தில் நிரப்பி பதிவுசெய்து கொள்ளலாம்.

இந்தச் சூழல் செயல்திறனாளர்களுக்கு சூழல் பிரச்சினைகளைக் கையாள்வது குறித்து உரிய நிபுணர்கள் உதவியுடன் அனுபவப் பகிர்தல் முகாமும் கருத்துப் பகிர்தல் முகாமும் நடத்தப்படும். தேவைப்படுபவர்களுக்கு வழிகாட்டுதலுக்கான ஏற்பாடும் செய்து தரப்படும்.

இந்த நிகழ்வுகளுக்கான காலம், இடம் போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

பூவுலகின் நண்பர்களுடன் சூழல் செயல்திறனாளராக இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

http://poovulagu.org/volunteer,

கைப்பேசி: 9841624006

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It