எல்லா நதிகளும் ஒன்றாய் சங்கமிக்கும் இடம் கடல். அது போல எல்லா மருத்துவ முறைகளுக்கும் மனிதனை நலமாக்குதல் (CURING) ஒன்று தான் இறுதி இலக்கு என்று பொத்தாம் பொதுவாய் கருத்து கூறப்படுவதுண்டு. மரம் செடி  கொடிகளையும் உயிர்களையும் அழித்து, வீடுகளை அழித்து, நகரங்களை நிர்மூலமாக்கி பெரும்துயரத்தை ஏற்படுத்தி விட்டு ஒங்காரக் கூச்சலோடு கடலில் விழும் நதிகள் உண்டு. தனக்கென்று தனிப்பாதை வகுத்து உயிர்களை, பயிர்களை அழிக்காமல் அமைதியாய் ஒடிக் கடலோடு கை குலுக்கும் நதிகள் உண்டு. இவ்விரு வகை நதிகளை யும் ஒன்றாய் எடுத்துக்கொள்ள முடியுமா? எல்லா மருத்துவ முறை களுக்கும் ஒரே இலக்கு என்பதை ஏற்க முடியுமா?

                        உலக நல நிறுவனத்தின் தெளிவான வரை யறையின்படி மனிதன் உடல் ரீதியாக மட்டு மின்றி மனரீதி யாகவும், சமூகரீதியாகவும் நலமாக இருப்பதையே நலம் என்றும் ஆரோக்கியம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கில மருத்துவம் உடல்ரீதியான சிகிச்சையை மட்டுமே பிரதானமாகக் கொள்கிறது அதிலும் ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள், பின் விளைவுகளிலிருந்து யாரும் எளிதில் தப்பி விட முடியாது.

                        ஆங்கிலேயர்கள் காலனியாதிக்கம் செலுத் திய பல நாடுகள் விடுதலையடைந்துவிட்ட பின் னரும் ஆங்கில மருத்துவ முறையிலிருந்து விடுபட முடியவில்லை. ஒவ்வொரு நாட்டின் தாய்மருத்து வங்களும், மாற்றுமுறை மருத்துவங்களும் மக்களிடம் பரவிச் செல்வாக்குப் பெறும்போது மட்டுமே ஆங்கில மருத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை கிட்டும் தற்போது  ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற அணுகுமுறை குறித்து பல நாடுகள் கொள் கையளவில் விவாதித்து ஏற்றுக்கொள்கின்றன. அப்படியொரு அணுகுமுறை நடைமுறைக்கு வருமாயின் ஆங்கில மருத்துவத்தின் ஒரு சில அம்சங்களையும், அறுவை சிகிச்சையையும் சேர்க்க வேண்டிய  அவசியம் ஏற்படும். ஆயிணும் ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படையான அணுகுமுறை - தத்துவப்பார்வை மட்டுமே ஒருங்கிணைந்த மருத்துவத்தினை வழிநடத்தத் தகுதி யானது. அத்த கைய காலச்சூழல் வருங்காலத்தில் வரக்கூடும்.

       இன்றைய நிலையில் ஆங்கி லச் சிகிச்சை யின் பக்க விளைவு களை, பின் விளை வுகளை ஒவ்வா மையைக் குண மாக்க ஹோமி யோபதி மருந்து கள் பயன்படுகின் றன. இயற்கை நோய்களை மட்டுமின்றி மருந்து, மாத்திரைகள், ரசாயனப் பொருட்கள், போதைப் பொருட்கள், நச்சுப் பொருட்களால் ஏற்பட்ட உடல்நலக் கேடுகளையும் ஹோமியோபதி மருந்துகள் அகற்றி நிவாரணமும், நலமும் அளிக்கின்றன. அத்தகைய ஹோமியோ பதி மருந்துகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆர்சனிகம் ஆல்பம் 30C :

       ஆங்கில எதிர்உயிரி (Antibiotics)  மருந்து களால் ஏற்படும் ஒவ்வாமை, அதிகளவு ஆங்கில மருந்துகள் (Drug Overdoses)  எடுத்துக் கொண்டதால் ஏற்படும் பின்விளைவுகள், மார்பின், ஹெராயின், மயக்கமூட்டும் பிற போதைப் பொருட்களுக்கு அடிமையான நிலை, புற்றுநோய் சிகிச்சைக்குரிய ஹீமோதெரபின் பக்கவிளைவுகள் ... போன்றவற்றிற்கு ஆர்சனிகம் ஆல்பம் பயன்படும். ஆர்சனிகம் ஆல்பம்  நோய்க்குறிகள் குளிரிலும், நண்பகல் மற்றும் நள்ளிரவிலும் அதிகரிக்கும். வெப்பத்திலும் , வெப்பமான உணவு, வெப்பமான பானங்களிôலும் குறையும்.

ஆர்னிகா 200C:

                         அலோபதி மருந்து மாத்திரைகள் காரண மாக ஏற்படும் வலிப்பு நோயை ஆர்னிகா குணப் படுத்தும். (சில ஆங்கில மருந்துகள் மூளையில் தேவையற்ற தூண்டல்கள் ஏற்படுத்த, தசைகளைத் தன்னிச்சையாக சுருங்கி விரிவடையச் செய்து வலிப்பை ஏற்படுத்துகின்றன.)

காட்சியம் 30C :   புற்றுநோயாளிகளுக்கு ஆங்கில முறைச் சிகிச்சையில், ஹீமோ தெரபி மற்றும் கதிர்வீச்சுச் சிகிச்சை (Che-motherahpy and Radiation Theraphy)  அளிக்கப்படுவதால் ஏற்படும் குமட்டல், கருநிற வாந்தி மற்றும் கடுமையான இதர பக்கவிளைவு களை முறிப்பதற்கு காட்மியம் சல்ப் பயன்படும். இத்தகைய குறிகளுடைய நோயாளிகள் பலரும் எதுவும் சாப்பிட இயலாமல் துயருற்று மாண்டு போகிறார்கள். காட்மியம் சல்ப் இவர்களைக் காப்பாற்ற உதவுகிறது.

ஜெல்சியம் 200C :                    ஆங்கில மருந்து, மாத்திரைகளால் ஏற்பட்ட தூக்கமின்மை, ஒவ்வாமைக்காகப் போடப்படும் ஊசி மருந்துகள் (Allergy Injections)   ஏற்படுத்தும் வியாதிக்குறிகள் போன்றவற்றிற்கு ஜெல்சிமியம் சிறந்து.

லேடம்பால்30C :  ஊசி குத்தியதால் ஏற்படும் வீக்கத்தில் குளிர்உணர்ச்சியும், தொடமுடியாதளவு வலியும் இருத்தல், ஸ்டீராய்டு, கார்டிசோன் ஊசி மருந்து களுக்கு ஏற்படும் பின் விளைவுகள், பல்சிகிச்சை யின் போது போடப்படும் மயக்க ஊசியால் ஏற்படும் தாடைப்பிடிப்பு (Jaw Stiffness)   போன்ற வற்றிற்கு லேடம்பால் பயன்படும். (கார்டிசோன் மருந்தின் பின் விளைவாக உடலில் உப்பு மற்றும் நீர் தங்கி வீக்கங்கள் ஏற்படுகின்றன.)

பாஸ்பரஸ் 30C :

       போதைப் பொருட்கள், மயக்க மருந்துகள் காரணமாகத் தோன்றும் அதி ஒவ்வாமை (Hyper Sensitivity) உடனடி திருப்திக்காக குறிப்பிட்ட சில மருந்து மாத்திரைகளை அடிக்கடிச் சார்ந்து விட்ட அடிமை நிலை (Drug Dependency) உட்கொள்ளும் மருந்துகளின் நாற்றம் வியர்வையில் ஏற்படுதல் ஆகியவற்றிற்கு பாஸ்பரஸ் பயன்படும். 

சல்பர் 30C:     ஆங்கில மருந்திகளால் குறிப்பாக எதிர் உயிரி மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தோல்பாதிப்புகள், நீண்ட நாள் மருந்து மாத்திரை உபயோகத்தால் உண்டான மலச்சிக்கல், தூக்க மின்மை போன்ற பிரச்சனைக்களுக்கு சல்பர் ஏற்றது. ஆங்கில மருந்துகள் உண்டாக்கிய நோய்க் குறிகளை நீக்குவதோடு ,அவை உள்ளமுக்கப்பட்ட (Suppressed) நோய்க் குறிகளை விடுவித்து, வெளியேற்றி நலமளிக்கக் கூடியது சல்பர்.

தூஜா 30C :

       தடுப்பூசிகள் (Vaccinations) போட்டபின் தோள் மற்றும் மேற் கை பகுதிகளில் ஏற்படும் வீக்கம், புறப்பாடுகள், (eruptions) அமைதியின்மை, பதட்டம், தூக்கமின்மை, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, கண்வலி, தலைவலி. வலிப்பு, பேச்சு இழப்பு (Loss of Speech)  போன்ற பிரச்சனைகளுக்கு தூஜா நல்ல நிவாரணம் அளிக்கும்.

Pin It