இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் பலம் வாய்ந்தது. இந்தியாவுடன் உலகளவில் பெரிய போட்டி நாடாகத் திகழ்வது சீனா. ஆனால் இந்த ஹோமியோபதி முறை சீனாவில் இல்லை. அதனால், போட்டியற்ற வெற்றியோட்டமாக இந்தியா இதில் முன்னேற வாய்ப்பு உள்ளது. 10 ஆண்டுகளில் ஹோமியோ மருத்துவத்தில் உலகின் ஆராய்ச்சி மையமாக இந்தியா திகழப் போகிறது என உலக மருத்துவ நிபுணர்கள் கணிக் கின்றனர் என்றொரு செய்திக் குறிப்பு இதழொன் றில் வெளியாகியுள்ளது.

                ஹோமியோபதி தோன்றிய காலம் முதல் இன்றுவரை சந்தித்த தடைகளும், அவதூறுகளும்,  எதிர்பிரச்சாரங்களும் வேறு எந்த மருத்துவ முறைகளும் சந்திக் காதவை. இன்றளவிலும் ஹோமியோபதி மீதான பொய்களும் கற்பனைக் குற்றச்சாட்டுகளும் எதிர் முகாமிலிருந்து (அலோ பதி துறையினரிடமிருந்து) அள்ளி வீசப்படுகின்றன. இத்தகைய தரங்குறைந்த, கீழ்த்தரமான முயற்சிகள் மூலம் ஹோமியோபதியை நோக்கி வந்து கொண்டிருக்கும் உலக மக்களைத் தடுத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். தடைகளை கடந்து பீடுநடைபோடுகிறது ஹோமியோபதி மருத்துவம். இந்த நூற்றாண்டு மாற்று மருத்துவங்களின் மறுமலர்ச்சி நூற்றாண்டாக அமையப் போகிறது; மாற்று மருத்துவங்களில் முதன்மை மருத்துவமாகத் திகழும் ஹோமியோபதி மருத்துவத்தின் மறுமலர்ச்சி நூற்றாண்டாக அமையப் போகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், மருத்துவமனைகளுக்கும் அவசரச் சிகிச்சை தேவைப்படுகிறது. கால்நூற்றாண்டாக முன்பு வரை குடும்பத்திற்கு நெருக்கமான வர்களைப் போல இருந்தவர்கள் மருத்துவர்கள். நோயாளியையும் அவரது குடும்பத்தின் பொருளா தாரத்தையும், உறவுச்சிக்கல்களையும் உணவுப் பழக்கங்களையும் தெரிந்திருந்தவர் இன்று மருத்து வம் என்பது சூழ்ச்சிகளும் விபரீதங்களும் மலிந்த வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. சேவை, கருணை, மனிதநேயம் மருத்துவத் துறையின் எந்த மூலை முடுக்கிலும் கூட காணப்படவில்லை. முறையான, மனசாட்சியுள்ள மருத்துவர்களும், ஆசியர்களும் இல்லாத ஒரு சமுதாயம் எத்தனை வளங்கள் குவிந்திருந்தாலும் நிலைத்து நிற்க முடியுமா?

       இந்தப் பின்னணியில் ஹோமியோபதியர் கள் முன் மகத்தான மக்கள்நலக் கடமைகள் காத்தி ருக்கின்றன. நோயை அறிவது மட்டுமல்ல: நோயுற்ற மனிதனைப் புரிந்து கொள்வதே மருத்துவத்தின் மையப் பணி. நோயாளரின் வாழ்க்கை, இருப்பு, தேவை, சூழல்... என எல்லாவற்றையும் சேர்த்துப் புரிந்து கொள்ளும் போது தான் மருத்துவம் முழுமை பெறுகிறது. இத்தகுதிகள் ஹோமியோ பதி மருத்துவத்திற்கு நூறுசதம் உள்ளது.

‘மருத்துவம்’, ‘மருத்துவன்’, ‘மருந்து’, ‘நோய்’, ‘நோயாளி’, ‘நலம்’ போன்ற சொற்களின் உண்மை யான பொருள் அறிந்து, உலகுக்கு உணர்த்தி, நடைமுறைப்படுத்திய மருத்துவம் ஹோமியோபதி.                                                                                                    ஹோமியோபதி மருந்துகளில் என்ன உள்ளது என்பதை ஹோமியோ சிகிச்சை பெறு வோரில் பலரும் கூட அறியாமல் இருக்கின் றனர். அவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக் குமே இது தெரியப்படுத்த பெருமுயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். வீரியப்படுத்துதல் என்ற முறையில் மூலம் தாவரங்கள், கனிமங்கள் உட்பட எண்ணற்ற பொருள்கள் போன்றவற்றிலிருந்து ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கு மாற்றப் பட்டுள்ளது. நோயுற்ற நபருக்கு எந்த வகை ஆற்றல் தேவை என்பதை அவரது தனித்தன்மை களிலிருந்தும், நோய்க்குறிகளிலிருந்தும் அறிந்து ஹோமியோபதி மருந்துகள் மூலம் அது தரப்படு கிறது. மருந்தினுள் பொதிந்துள்ள ஆற்றல் நோயுற்ற நபரின் ஜீவ ஆற்றலை மெருகேற்றி, நோயுடன் புதிய எழுச்சியுடன் போர்நடத்தி நலம் அளிக்கிறது.

       ஹோமியோபதி மருத்துவம் முழுமை யானது; ஹோமியோபதியர் குறையுள்ளவர். ஹோமியோபதி ஒருபோதும் தோற்பதில்லை ; ஆனால் ஹோமியோபதி மருத்துவர் தோற்கக் கூடும். இது ஒன்றும் புரியாத புதிரல்ல. அனுமா னங்கள் அடிப் படையிலோ, ஆங்கில மருத்துவ பாணியிலோ, மேலோட்டமான ஆய்வு அடிப் படையிலோ ஹோமியோபதி மருந்து தருபவர்கள் ‘முழுநலம்’ மீட்பது சிரமம். ஆழ்ந்த படிப்பும், பயிற்சியும், ஹோமியோ மேதைகளின் அனுபவ ஒளியைப் பருகி வழிநடப்பதும் வெற்றிக்கு ஆதாரங்கள்.

Pin It