முதல் தகவல் அறிக்கை

குற்ற எண்: 87/2015

பிரிவுகள்: 153 A(i) (a) 295A IPC

திருவாடானை காவல் நிலையம், இராமநாதபுரம் மாவட்டம்.

எதிரி: மீ.த.பாண்டியன் த/பெ தசரதன்,

மதுரை

முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம்: 

08-4-15 ம் தேதி 14மணிக்கு நான் (காவல் ஆய்வாளர்) நிலையத்தில் இருக்கும்போது இராமநாதபுரம் ADP அலுவலகத்தில் இருந்து வரப்பட்ட Leagal opinion தபாலை பெற்று கடந்த 23.02.2015 ம் தேதி CPML 19 மணிக்கு திருவாடானை தெற்குத் தெரு ஆதிரெத்னேஸ்வரர் கோவில் சூச்சனி போகும் விலக்கு ரோட்டில் மீதேன் வாயுவை எடுப்பதற்காக நிலத்தை தோண்டுவதை கண்டித்து விவசாயத் தோழர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரியும் டாஸ்மாக் கடையை மூடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன் பேசும்போது 7வயது பார்ப்பான் 70 வயது தேவரையும் சேர்வாரையும் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவான் என்றும், சங்கராச்சாரி, திருஞானசம்பந்த மடங்கள்யாவும் இவ்வாறு தோன்றியவைதான்.

கருமாதி மந்திரத்தை காமாட்சி மந்திரம் என்று சொல்லி ஓதிக் கொண்டு இருக்கிறவர்களும் (அய்யங்கார்) இருக்கிறார்கள் என்பதும் அவர்களிடையே பலருக்கு தெரியாமலும் இருக்கிறது. புதைக்க வேண்டும் என்றால் பள்ளனைத் தேடுவான். வைகுண்டம் போகவேண்டும் என்றால் ஐயரைத் தேடுவான். சாணானைப் பார்த்தாலே தீட்டு என்பார்கள்.

ஆனால் இன்று நாடார்கள் பெரிய அளவில் முன்னேறிவிட்டார்கள் என்றும், மேலும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை டாக்டர்ஸ் கான்பரன்ஸ் ஒன்றில் பேச அழைத்தபோது மனித உடலோடு தலையை இணைத்து எமது முன்னோர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்கள். இதனைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் என்று இந்த முண்டம் பேசியிருக்கிறது என்றும் முட்டாள் பயல் சிவபெருமான் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்த பிள்ளையின் கழுத்தை வெட்டியதால்தான் யானைத் தலை மனித உடல் கொண்டு புதிய உருவம் வந்ததாகக் கதை. பிள்ளையாரை கண்மாயில் கரையில் உக்காந்து சைட் அடித்துக் கொண்டிருப்பதாகக் கதை.

இந்தப் பிள்ளையாரை கண்மாய் கரைகளில் உடைக்கிறதா? கடலில் கொண்டுபோய்ப் போட்டு அமுக்கறதா என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிற கும்பல் என்றும் இன்னொருபக்கம் சாராய பேக்டரிகளை அமைத்து மக்களைக் கெடுத்துக் கொண்டு இருக்கிற தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பின்னங்காலிலே எதிரிகளை அடித்து விரட்டுகிற விஜயகாந்த் இவர்களிடத்தில் மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.

எனவே மேற்படி எதிரி மத உணர்வு, ஜாதி உணர்வு, அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்படும் வண்ணம் தூண்டுதல் மற்றும் பொது அமைதியைச் சீர்குலைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

Pin It