modi 450 copyநம்ம ஊர்ல எம்.ஜி.ஆர்; படம் ரிலீசு.. ரிலீசு...

அடே அரக்காசு ஏன் சவிண்டு விடுது... அட தெரியாதா.. அம்பானி எம்.ஜி.ஆர்; படம் ரிலீசு ரிலீசு...

ஏய் அரக்காசு ஒனக்;கு பைத்தியம்.. லூசு..

எம்.ஜி.ஆர்; எறந்து எவ்ளோ வரு;சம் ஆச்சு.. நீ ரீறில் விடுது..

இல்ல அம்பானி.. உலகம் சுற்றும் வாலிபன்ற படத்துல நம்ம மோடி நடிக்கிறாப்ள.. சூட்டிங் போற எடமெல்லாம் கூட்டம் அள்ளுதாம்ல..

அதத்தான் கொஞ்சம் விளம்பரமா சொன்னேன்.

 அரக்காசு நீ சுத்த லூசு.. எத கேலி பன்றதுனு தெரியல ஒனக்கு..

நம்ம மோடி நாடு நாடா போயி பாரீன் இன்வஸ்ட் மென்ட் கொண்டுவருது..

அப்படினா?

அட அறிவில்லாத அரக்காசு வெளிநாட்டுப் பணம் கோடி கோடியா கொண்டுவந்து தருது..

அம்பானி ஓசியாவா மத்த நாட்டுக்காரனெல்லாம் தர்றான்... ஆமா அவன் எதுக்கு நமக்குத் தரணும்..

அது நம்ம நாட்டுல இன்வெஸ்ட் பண்ணி வளர்ச்சி ஏற்படுத்த செய்றாங்க. அதனால நம்ம கிட்ட ஒருசில சலுக எதிர்பார்ப்பாங்க..

இது ஊருக்குள்ள போன் டவர் ஊண்டுறவன் காசுதருவேன்னு சொல்றானே அதப்போலத்தான இருக்கு.. சரி வௌக்கிச் சொல்லுங்க அம்பானி..

அரக்காசு இந்தியாவுல நெறய தொழில் வளர்ச்சிய உருவாக்க மோடி நெனைக்குது... அதுக்கு வெளிநாட்டு முதலீடு கொண்டு வந்து தருது..

அம்பானி.. 20 மாதமா ரூபாய் மதிப்பு சரிஞ்சுகிட்டே போகுதாம்ல.. அத உயர்த்தனும்னா ஏற்கனவே மந்தமா இருக்குற தொழில் வேகம் பிடிக்கணுமாம்.. அப்படின்னா என்னா?

அதாவது வாங்கும் சக்தி மக்கள்ட்ட கொறஞ்சது நாள உள்நாட்டுச் சந்தை மந்தமா இருக்கு அதனால தொழில் மந்தமா இருக்குன்னு அர்த்தம் அரக்காசு.

அடடா.. அட முட்டாப்பய மக்கா.. இதச் சரி பண்றதுக்கு ஏன்டா முருகன் மாதிரி நாடு நாடா அலையணும். புள்ளையார்; மாதிரி தீக்க வேண்டிய விசயத்துக்கு மண்ணு..மக்கு.. மாதிரி ஒலகமா சுத்தறது..

அரக்காசு இடியாட்டிக்கா பேசாதே.. அது ஒண்ணும் சொலபமில்ல.

அம்பானி கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு பொருளாதாரம் பேசித்தான் நம்ம நாட்ட போக்கடிச் சிருக்கானுவ.. இந்த மோடி வேற பத்தரைலட்சம் ரூபாய்க்கு கோட்டு சூட்டு போட்டாராம் உருப்படுமா?

அம்பானி ஏழைபாழைக கையில காசு இருந்தா ஏன்யா தொழில் மந்தம் வரப் போகுது. நாங்க பாட்டுல செலவழிக்க காசு இருந்தா பொருள வாங்கப் போறோம்.. தொழிற்சாலையில உற்பத்தி செஞ்சுகிட்டே இருக்கலாம்.. எங்களப் புறாம் கோடிக்கணக்கான மக்கள பட்டினி போட்டுட்டு போண்டா வாங்கித்தின்னக் கூட வக்கத்த பயமக்களா மாத்திப்புட்டு, தொழில் மந்தம் போகணும் பொருள் உற்பத்தி வேகமாகணும்னா எப்படியா நடக்கும்..

ஏன்யா சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும். இந்த லட்சனத்துல தொழிலாளர்; உரிமைகள பறிக்க உள்நாட்டுல சட்டம் கொண்டுவந்து.. அவன மேலும் நடுத்தெருவுக்கு கொண்டுவர ஏற்பாடு பண்ணிட்டு வெளிநாடு போயி கடன் வாங்கினா தொழில் மந்தம் போயிரும்னு உலகம் சுத்துறது.. இது.. எபபடியிருக்குன்னா புள்ள வேணும்ன்றவன் பொண்டாட்டியச்சுத்துறத விட்டுப்புட்டுப் போயி லிங்கத்தச் சுத்துனானாம்.. அந்தக் கத மாதிரியில்ல இருக்கு..

ஏ அரக்காசு உலக அளவில போட்டி இருக்கு.. லேபர்; மார்க்கெட்ல போட்டி இருக்கு.. என்னா பன்றது.. சைனாவுல இதைவிட மலிவா சீப் லேபர்; இருக்கு.. அதனால இங்க சம்பளத்தக் கூட்டினா போட்டியில நிக்க முடியாது..

அதான் சேர்வாரோட சேரணுங்கிறது.. ஒலகத்துல எவனெல்லாம் தன் நாட்டு மக்களுக்கு சோறு நெறயா போடுறானோ அவனோட சேர்றத விட்டுப்புட்டு எவன் அதிகமா பட்டினி போடுறானோ அவனோட சேந்தா இப்படித்தான பேசுவீங்க.. ஏன்யா நாளைக்கு மனுசனுக்கு பதிலா வேற பிராணி கெடச்சா இந்த மனுசக்கூட்டத்த என்னய்யா செய்வீங்க.. அவனவன் கடல்ல போயி விழுந்துற வேண்டியதுதானா...அடடா.. கேணப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையா?

ஏய் அரக்காசு ரொம்ப வெவரமானவங்க ஊர்ல பொறந்ததா நெனக்காத.. ஒங்க ஸ்டேட்ல ஒங்க அம்மா நாட்டாம எங்களுக்குத் தெரியாதா என்ன..?

அம்பானி சொந்த ஒலக்குன்றதால தூக்கி பொடணியில அடிச்சிக்கறவன் நானில்ல.. அந்தம்மா ஒரு ஊழல் ராணிங்கிறத எங்க மக்க பெருமையாத்தான் சொல்றான். அதுலயும் எங்கம்மா ராணிடாங்கிறான். ஆனால் ஊழல்.. ஒழிப்பு.. கருப்புப்பணம் பறிப்பு என்றெல்லாம் வேசம் போட்டுட்டு மோடி&கோ போடுற நாடகம் தான் தாங்கல.. நிலம் கையகப்படுத்தல் சட்டம் என்கிற அபகரிப்புச் சட்டத்தைப் பி.ஜே.பி கொண்டுவந்ததுக்கும் அதுக்குப் பின்னால முன்வச்ச எல்லா மசோதாவுக்கும் மாடு மாதிரி அ.தி.மு.க. தலையாட்டுனதுக்கு பரிசா இந்த ஊர்சுத்தி மோடி கொடுத்த விடுதலை தான் இந்தத் தீர்ப்பு.. அத தீர்ப்புன்னு சொல்லக்கூடாது கொழுப்புன்னுதான் சொல்லணும்..

அந்த நீதிபதி குமாரசாமி அந்தம்மா வச்சிருந்த நானூறு சோடி செருப்பு கல்யாணத்துக்கு வந்தவுக கழட்டிப் போட்ட செருப்புன்னும் சசிகலா சுதாகரன் இளவரசி கும்பல் ஜெயலலிதாவுக்கு பினாமி இல்லன்னும் தீர்ப்புல எழுதியிருக்காப்ல.. எழுதவச்சது பி.ஜே.பி லாபி.

அரக்காசு நீ இன்னும் பாலிடிக்ஸ் தெரிஞ்சிக்கல.. அதெல்லாம் இல்லாம பாலிடிக்ஸ்ல நிக்க முடியாது..

ஆமா காத்தக் கெடுக்காம கம்பெனி நடத்த முடியாது.. தொழிலாளர சுரண்டாம சம்பாதிக்க முடியாது.. இனவெறியத் தூண்டாம அரசியல் பொழப்ப நடத்த முடியாது. போயா நீயும் ஒன் நியாயமும்..

அரக்காசு.. ஏய் அரக்காசு.. என்ன டென்சன் பண்ணாதே.. சும்மா இனவெறி இனவெறின்னு கூவாதே.. ஒங்க சீமான் கூட திருச்சி மாநாட்டுல ஆர்.எஸ்.எஸ் மாநாட்டுல வைக்கிற மாதிரியே ஹிட்லர்; போட்டோவ வச்சு வௌக்கம் சொல்லிருக்கு..ஹிட்லர்; நல்லவர்; தன்னினப் போராளி பெண்களையும் குழந்தைகளையும் அவர்; கொன்னதில்ல என்று சொல்லி இருக்கு.. நீ சும்மா சும்மா மோடிய மட்டும் கொற சொல்லாத.. என்ன நீ டென்சன் பண்ணுது..

அட சீமான் ராஜ்தாக்கரேவ பாருங்க.. ராஜ்தாக்கரேவப் பாருங்கண்ணு சொன்னப்பவே அவருக்கு தேசிய விடுதலை அரசியல்னா ஒண்ணும் தெரியயலன்னு நிர்வணமாயிருச்சு.. சிலர்; சாதிவெறிய கிளப்பி ஆட்சி பிடிக்க முடியும்னா.. தமிழ் இளைஞர்கள் ஒரு தேசிய ஜனநாயக அரசியல் வீரர்களா உலகத்துக்கே முன்னோடி அரசியல் தலைவர்களா உருவாக்க வக்கில்லாமல் பென்னம்பெரிய சாதியவெறியக் கௌப்புற கதையா இனவெறி கௌப்புறாரு. அவருக்கு ஹிட்லரப் பத்தியும் தெரியல.. தேசியவிடுதலை அரசியல்னா இனம் இனம்னு மொழங்குறதுதான்னு நெனச்சு கண்ணாடி பாத்து மனப்பாடத்துல எறங்குறாரு..

திராவிட வாரிசுகளுக்கு தமிழ் நாட்டுல நெறயா போட்டி இருக்கு. அதனால சீமானும் எதாவது டுபாங்கூர்; அடிச்சு முதல்வர்; நாற்காலியில ஒருமுறையாவது குத்த வைக்க முடியாதான்னு ஏங்குறாரு.. நீ நெனக்குற மாதிரி நானு தமிழ்நாட்டு அணுஉலைனா ஆதரிக்கிற ரகம் கெடயாது.. தமிழ் பெயருல யாரு போதய போட்டு ஔருனாளும் ஆதரிக்கிற ஆளும் நான் கெடயாது..

ஹிட்லரு.. மாதிரி ஆளுகள மொதலாளி கூட்டம் கையில வச்சுகிட்டு காரியம் சாதிக்கும்.. இவரு வி.வி.ஆர்; மினரல்ஸ் வைகுந்தராஜன் மாதிரி ஆளுகளுக்கு கைப்பிள்ளையா இருக்க விரும்புராரு..

அம்பானி.. மியான்மர்; நாட்டுல 800 வருசமா வாழ்ந்த இஸ்லாமிய மக்கள வெளியேத்தும் இனப்படுகொலை நடக்குதே சீமான் அதக்கண்டிச்சு ஆர்ப்பாட்டம் நடத்தப் போறாராம்.. அப்பத்தான் இருக்கு தமாசு.. சிங்கள, பர்மிய அரசு சொல்லும் ஓ.. சீமானே எங்களுக்கும் ஹிட்லர்தான் ரோல்மாடல்..னு

என்னமோ போயா அம்பானி.... எவன் வந்தாலும் ஒங்க பக்கம் தேத்திக் கொண்டுபோறீங்க பாரு.. அங்கதான்யா நீங்க ஜெயிக்கிறீங்க..

Pin It