(வேளாண், நெசவுத் தொழில் சார்ந்தோரை மேம்பட்ட நிலைக்கு உயர்த்துவதுதான் தீர்வு)

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விழுக்காடு - உலகிலேயே முதல் இடத்திற்கே வந்துவிட்டது என்று பெருமை பேசப்படு கின்றது. சீனா பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாய்ப் பொரு ளாதார வளர்ச்சி விழுக்காட்டில் முதல் நிலையிலிருந்ததைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி வந்துவிட்டது இந்திய ஒன்றியம் என்றெல்லாம் விதந்து சொல்லப்படுகிறது. இதில் முன்னிலை வகிப்பது பா.ச.க. ஆட்சியினர். அந்தக் கட்சியினர் ஒன்றை மனமறிந்து மறைத்து விடுகின்றார்கள். இந்த வளர்ச்சி பரந்துபட்ட வெகுமக்கள் அனைவருக்கும், சொல்லும் அளவுக் குக்கூட வேண்டாம்; ஓரளவுக்காவது சென்றடைந்துள்ளதா? என்பதை மனச்சான்றுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உண்மை நிலை என்னவெனில், ஒரு பெரும் தொகுப்பு மக்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றிப் பிழைக்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற அவல நிலையைப் பற்றிச் சற்றும் கவலையற்றவர்களாகப் பீற்றிக் கொண்டுள்ளனர். அதாவது இராம அரசு அமைப்பார்களாம்; நாட்டை வல்லரசு நாடாக மாற்ற உள்ளனராம். இதை மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமும் சொன்னது வேதனைக்குரியது. வெகுமக்களை வறுமையின் பிடிக்குள் வைத்துக் கொண்டு, இராமன் கோவில் கட்டுவதே நாட்டின் முதல்பணி என்று திரியும் இந்தப் பார்ப்பனிய மதவெறிக் கும்பலின் கூச்சலை அவர் உணர்ந்திருந்தாரா என எண்ணத் தோன்றுகின்றது.

உலகப் பொருளாதாரச் சரிவுகள் ஏற்பட்ட போதெல்லாம் நாட்டில் பொருளாதாரம் நிலைகுலையாமல் நின்றது என்று இங்குள்ள பொருளியல் வல்லுநர்கள் வெற்றுப் பெருமை பேசிக் கொள்கின்றனர். இவையெல்லாம் கடைந்தெடுத்த கயமைத்தனம். அடிப்படையில் ஆட்சியில், அறத் துறையில், மக்கள் மன்றங்களில் உள்ள மேல்தட்டில் உள்ளோரின் அடி மனதில் பார்ப்பனியச் சனாதனச் சிந்தனை வலுவாக ஆட் கொண்டுள்ளது என்பதுதான். இதேநிலைதான் பரந்துபட்ட மக்களின் ஆழ்மனங்களிலும்.

அண்மையில் இங்கு சுப்பிரமணியம் சாமி வெளிப்படை யாகச் சொல்கிறார், நான் காவலாளியல்ல பிராமணன் என்று, வங்கத்தில் பொதுவுடைமை அரசில் மூத்த அமைச்சராக இருந்தவர், நான் முதலில் இந்து, பின் நான் ஒரு பிராமணன், பின்புதான் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கிறார். கேரளத்தில் பொதுப் பள்ளிகள் தொடங்கப்பட்டபோது பொதுவுடைமை இதழ் நடத்தியவர் ஈழவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக் கக்கூடாது என்றார். இது ஏதோ அவர்கள் மேல் சேற்றை வாரி இரைப்பதற்கானதன்று. இந்த உளவியல்தான் இந்திய ஒன்றிய மக்களின் மனங்களில் வேரூன்றி உள்ளது என்பது தான்.

உண்மையில் பொதுவுடைமைவாதிகள் இந்திய ஒன்றியச் சமூகச் சூழலை, வரலாற்றை மார்க்சு வலியுறுத்திச் சொல்வது போன்று படிக்க, ஆய்வு செய்ய முற்படவே இல்லை. அதனால் தான் பார்ப்பனியச் சனாதத்தைப் பெரியாரும், அம்பேத்கரும் தோலுரித்துக் காட்டிய போது இவர்கள் சமூகப் பிரிவினை வாதிகள் என்று புறம் தள்ளினர். நியாயமாகப் பார்த்தால் பொதுவுடைமைவாதிகள்தான் பார்ப்பனியத்தை வேரறுத்திடும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் இந்திய சமூகத்தில் முன்னோடிகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவ்வமைப்பு களின் மேல்தட்டிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் அவர்களது தன்சாதிப் புத்திதான் (Blood is thicker than water)  மேலோங்கியிருந்தது. அதனால்தான் நெடுங்காலம் பொதுவுடைமை அமைப்புகள் தவிர்த்த எந்த அமைப்பும் கட்சியும் பொதுவுடைமைக் கருத்துக்களை, கோட்பாடுகளை, சித்தாந்தத்தை பேசுபொருளாகக் கூடக் கருதாத நிலையில் பொதுவெளிக்கு அச்சு ஊடகங்கள், நெடும் பரப்புரை வாயிலாகவும் பரவலாகக் கொண்டு சேர்த்த பெரியாரை, பார்ப் பனர்களை ஒழிக்க முற்பட்டார் என்பதாக அவரை வகுப்பு வாதி என்று அவரின் விரிந்த பரிமாணத்தைச் சுருக்கி, கடும் வசை பாடுவதையே வேலையாகக் கொண்டிருந்தனர்.

young india census 600இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் விதைத்துவிட்ட நச்சுச் சிந்தனை - உழைப்பு, உடல் உழைப்பு இழிவானது, வெறுக்கத்தக்கது. உடல் உழைப்போர் எவ்வழியிலும் சுரண்டப் படலாம்; இழிவுபடுத்தப்படலாம். இவர்களுக்கு இழி ஊதியமே போதுமானது, இவர்கள் பிழைப்புக்கே தகுதியற்றோர் என்பதும், படிப்புத்தான் உயர்ந்தது, படித்தவன்தான் உயர் ஊதியம் பெறுவதற்கும், வளவாழ்வுக்குரியவன் - இந்திய ஒன்றியச் சமூகத்தின் நிலைத்ததாகவே நின்று வருகிறது. இந்த வகையில் உழைப்பையே முதன்மையான மூல முதலாகக் கொண்ட வேளாண்மை, நெசவு போன்ற தொழில்களும் இத்தொழில்கள் சார்ந்தோரும் மதிப்புடை வாழ்வு மறுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

வேளாண்மைசார் மக்கள் மேம்பாட்டை அடைவதற்கு வேளாண்மைத் தொழில் கட்டமைப்புகளும், முறைகளும், பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்கு உட்படுத்தும் வகையில் திட்டங்களும், செயல்பாடுகளும் வகுக்கப்பட்டு வடி வமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தொடர்ச்சி யாக நெசவுத் தொழிலும் அடிப்படையில் வேளாண்மைத் தொழிலைச் சார்ந்து அமைந்துள்ளதால் இத்துறையும் சீர மைக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து தனித்தனியாய் விரிவாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அதற்கு முன்பாக அரசு அமைப்பு அலகுகளான மக்கள் மன்றம், நிருவாகம், அறமன்றங்களில் இவர்களுக்கான சமூக அடிப்படையிலான பங்கீடுகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதைக் காணலாம்.

இந்திய ஒன்றியம் குடியேற்ற நாடாக இருந்த காலத்தி லிருந்தே ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அரசு எந்திரத்தில் பங்கீடு என்ற தன்மையிலின்றி பெயரளவுக்கான ஒதுக்கீடு பெற்று வந்தன. அதன் நீட்சிதான் விடுதலைபெற்ற குடியரசான ஒன்றி யத்தின் அரசமைப்புச் சட்டத்திலும் அதற்கான விதிகளும் இடம் பெற்றன. ஆனால் அதன் செயல் வடிவம் முற்றிலுமாக முரணான நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுதான், தற்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் என்ற பெயரிலான அவர் களுக்கான அரசுப் பணிகளிலும் கல்வியிலும் 10 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டம். இது புயல் வேகத்தில் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. அதாவது பல பத்தாயிரம் கணக்கில் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஒன்றிய அரசு ஆணைகள் வெளியிடுகின்றது. அடுத்து உடன் பணியிடங்களின் பணியமர்த்தப்படுவோருக்கான சம்பளச் செலவிற்காக இலக்கம், கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்கிறது அரசு. உண்மையில் தற்பொழுதுள்ள பணியிடங்களில் 30 விழுக்காட்டுக்கு மேலான இடங்கள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் காவிக் கூட்டம் 10 விழுக்காடு ஒதுக்கீட்டுக்காக விரைவில் செயல்படுகின்றது.

இந்த வேகத்தில் இந்திய வரலாற்றில் ஏதும் நிகழ்ந் திடவே இல்லை என்றே சொல்லலாம். 2006-இல் ஒன்றிய அரசுக் கல்வியில் இதர பிற்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து வெளியிடப்பட்ட சமயத்தில், அந்த இட ஒதுக்கீடு செயல்படுத்த முடியாத அளவுக்கு எவ்வாறெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட முடியுமோ, அவ்வளவும் வஞ்சக மாக விதிக்கப்பட்டு அந்த ஒதுக்கீடு இப்பொழுது வரை முடக் கப்பட்டுவிட்டது. அவை : ஒவ்வொரு ஆண்டும் 9ரூ மட்டுமே இடஒதுக்கீடு அளித்து மூன்றாம் ஆண்டில் 27% அளிக்கலாம். ஆனால் அந்த 9% இடஒதுக்கீட்டுக்கு உருவாக்கப்படும் இடங் களுக்கான அந்தந்தக் கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இருந்திட வேண்டும். கூடுதல் இடங்களுக்குப் போதுமான ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து ஆசிரியர் கள் தேர்வு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என உறுதி செய்திடல் வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு குழு ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை ஒன்றிய அரசு மனிதவள மேம் பாட்டுத் துறைக்கு அளித்து அவர்கள் இசைவளித்த பின்தான், 9ரூ ஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு சட்டம் நடைமுறைக்கு வந்து 12 ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் 27% ஒதுக்கீடு முற்றிலும் நிறைவேற்றப் படாததாகத்தான் உள்ளது.

இதேபோன்று 2009இல் அனைவருக்கும் கல்வி என்ற சட்டம் கொண்டுவரப்பட்டு, 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது முடக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25ரூ இடங்கள் நலிவுற்ற மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதற்கான செலவை அரசே ஏற்கும் என்பதாக அறிவிக்கப் பட்டது. இது வெகுமக்களைக் கொடுமையாக வஞ்சிக்கும் திட்டம். இது அரசே தனியாரை ஊக்குவித்து அரசின் நிதியை வீணடித்துவிட்டு கல்வியை வணிகச் சரக்காக மாற்றிவிட்டு மக்கள் நல அரசு என்ற பொறுப்பிலிருந்து தன்னை முழுமை யாக விலக்கிக் கொள்வதற்காகச் செய்த ஏற்பாடுதான்.

இதுபோன்றதுதான் ஒன்றிய அரசு மண்டல் குழு அறிக் கையின் அடிப்படையில் 1990-இல் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27% ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது அது 1994 வரை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு நிருவாக, சட்டமன்றம், அறமன்றங்கள் ஒருங்கிணைந்து வஞ்சகமாகத் தடுக்கப்பட்டது.

இவ்வாறான தொடர் தடைகளினால் இதர பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் குலத்தினர், பழங்குடி மக்களுக்கான முறையே 27%, 15% மற்றும் 7.5% இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசுப் பணிகளிலும், கல்வியிலும் பெற்றிடாத வகையில்தான் எந்த அரசியல் கட்சி ஆட்சியிலான அரசுகளும் செயல்பட்டு வந்துள்ளன. பார்ப்பனர்கள் எவ்வாறு ஆக்கிரமித்து உள்ளனர் என்பதை அட்டவணையில் காணலாம். அரசின் உயர்நிலைப் பணியிடங்களில் இந்த நிலையை தெளிவுபடுத்தும் வகையில்  அரசின் பல உயர்நிலை பணிகளில் உள்ளோரின் எண்ணிக்கை ஒன்றிய அரசால் தகவல் பெறும் சட்டத்தின்படி அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் தவிர்த்த அனைத்து மாநில அரசுகளில், உயர் பணியிடங்களில் உள்ளோரின் விகிதமும் இதேபோன்றதுதான். இந்தத் தகுதி வாய்ந்த, திறமைமிக்க இப்பெருங்கூட்டத்தார் விடுதலை பெற்ற இந்திய ஒன்றியத்தை 70 ஆண்டு களுக்கும் மேலாக ஆண்டவர்கள், ஆட்டிப் படைப்பவர் கள் நாட்டையும், நாட்டின் வெகுமக்களான எளிய மக்களை எவ்வளவு கொடூரமாகச் சூறையாடி-எவ் வளவு இரங்கத்தக்க இழிவான நிலையில் உலக நாடு களிடையே வைத்துள்ளனர் என்பதைச் சென்ற இதழில் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளோம். (அருள்கூர்ந்து வாய்ப் பிருந்தால் பார்க்கவும்).

அரசமைப்புச் சட்டப்படி அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையான இடஒதுக்கீட்டைக் காலந்தோறும் வஞ்சக மாக உரிய அளவில் அளிக்காமல் மறுத்தே வரப்பட் டுள்ளது. உண்மையில் வேலை, கல்வி மட்டிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியது மட்டுமின்றி பிற்படுத்தப் பட்டோரின் நலனுக்காக மண்டல் தம் அறிக்கைகளில் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள இவர்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இம்மக்களுக்கு அரசுத் திட்டங்கள் அனைத்திலும் 27% இடஒதுக்கீடு வழங்கிட வேண்டு மெனப் பரிந்துரைiத்தார்.

மண்டல் நாடு முழுவதும் பல்வேறு கள ஆய்வு களை மேற்கொண்டும், பல நிலைகளிலுள்ள மக்களிடம் விரிவாக விவாதித்தும் மக்களின் சமூக நிலை, கல்வி நிலை, விவசாய நிலை, வாழ்க்கைச் சூழல், அடிப்படை வசதி நிலை என இன்னும் இதுபோன்ற பல்வேறு தன்மைகளையும் கருத்தில் கொண்டு முதன்மை விவரங்களையும் (Primary data) அரசு, பிற நிறுவனங்களில் மேற்சொன்ன கூறுகள் தொடர்பாகப் பதிவாகியிருந்த இரண்டாம் நிலை (Secondary data) விவரங்களையும் அடிப்படையாகக் கொண்டு உலகே கண்டிராத தருக் கத்திற்கும்  (Logical) அறிவுப் பூர்வமான (rational) வினாக்களுக்கும் விடை தரும் மேன்மையான அறிக் கையைச் செயல்படுத்தத் தக்க நியாயமான புரிந்துரை களுடன் ஒன்றிய அரசுக்கு வழங்கினார்.

இந்த ஒப்பரிய அறிக்கையை அரசுப் பணி, கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு என்று மட்டும் அரசு திட்டமிட்டு குறுக்கிக் கொண்டு அறிக்கையின் சுருக்கத்தை மட்டும் நாடாளுமன்ற அவைகளில் வைத்ததுடன் மேல்நட வடிக்கை இன்றிக் கிடப்பில் போட்டுவிட்டது.

மண்டல் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அரசு, தொழில் தொடங்குவதற்குள்ள திட்டங்கள், அரசுப் பொது நிறுவனங்கள் மேற் கொள்ளும் வீடுகட்டும் தொழில்கள், வணிக வளாகங்கள் அமைத்தல் என பல்வேறு பணித் திட்டங்கள், இதனால் பயனடைவோர்கள் என்ற பல்வேறு நிலைகளிலும் தளங்களிலும் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு உரிய ஈடுசெய் (representation) பங்காக இடஒதுக்கீடு அளித்திடப் பரிந்துரைகள் தந்தார். பிற்படுத்தப்பட்டோர் என்பதை அடையாளப் படுத்த பல்வேறு அளவுகோல்களை வகுத்து அந்த ஆய்வின் அடிப்படையில் அந்தப் பட்டியலை இறுதி செய்தார். அந்த அரிய சிறப்பான அறிக்கையை எவ்வித முழுமையான ஆய்வுக்கும் உட்படுத்தாமல் செயல்படுத்துவதற்கு எவ்வித முனைப்பும் காட்டாமல் பார்ப்பனியச் சிந்தை கொண்ட அனைத்து நிலை யிலும் உள்ளோர் புறம்தள்ளிவிட்டனர்.

எனவே பார்ப்பனியச் சனாதனச் சிந்தனை குறிப் பாக உழைப்பு, உடல் உழைப்பு இழிவானது என்ற சிந்தனை இச்சமூகத்திலிருந்து முற்றிலுமாக வேரறுக் கப்பட்டால்தான், வெகுமக்கள் மதிப்புடன் கூடிய வாழ்க் கையைப் பெற முடியும். இது சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் பேசுபொருளாக மட்டும் நெடுங் காலமாக இருந்து வருகின்றது. இதன் பயனாய்ப் பார்ப்பனியத்தின் வேர்ப் பிடிப்பில் நெக்குவிட்டதாகக் கூட இல்லை. ஆனால் தலைகீழ் பொருளாதார மாற்றம் தான் அந்த வேரறுப்பு வேலையைச் செய்யும்.

எனவே இதற்கான மாற்றுத் திட்டம் வகுத்தெடுக்கப்பட்டு செயல்படுத்தினால்தான், இந்தச் சிக்கலுக்கான தீர்வை நோக்கி நகரலாம். அத்தன்மையில் முதலில் வேளாண் பொருளியல் நிலையை ஆய்வுக்குட்படுத்தலாம். இந்திய ஒன்றியச் சமூகத்தின் பெரும் பகுதி வேளாண்மையில் ஈடுபட்டும், சார்ந்தும் இருந்து வரு கின்றது. மக்கள் தொகையில் 70ரூ வேளாண் மக்கள் உள்ளனர். இவர்களுள் 90ரூ-க்கு மேலான வெகுமக்களாக உள்ள குறு, சிறு விவசாயிகள், விவசாயக் கூலிகளாக விளிம்பு நிலை பிழைப்பு நடத்துபவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, வறுமையின் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விடுதலையும், வாழ்வும் ஒருசேரக் கிடைத்திட அவர்களின் பொருளாதாரம் மேம்பட வழிகாண வேண்டும். எனவே வேளாண்மைத் துறை பற்றியும், அதைச் சார்ந்துள்ள மக்களின் பொருளாதாரத் தைப் பற்றியும் இனிவரும் இதழ்களில் விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

Pin It