ஜீ.முருகனின் இரண்டாவது நாவல் "மரம்' குடும்பம், கட்சி, மதம் என்னும் மூன்று நிறுவனங்களிலிருந்தும் அவற்றின் வரம்புகளிலிருந்தும் வெளியேறி வர வேண்டிய அவசியத்தை முன் வைக்கின்றது. உறவு நிலைகளின் விரிசலையும் கட்சிக் கோட்பாடுகளின் உள்ளீடற்ற தன்மையையும் ஆன்மீக வெறுமையினையும் அம்பலப்படுத்து கின்றது. "சிவகிரி' என்னும் நகரின் நிலவியல் காட்சிகளுடன் ஓர் ஆழமான உரையாடலைக் கொண்டுள்ளது.

நிறுவனத் தன்மை கொண்டு விடும் எதுவும், மூச்சுமூட்ட வைப்பதாகவே நாளடைவில் ஆகிவிடுகின்றன. இந்த நோக்கில்தான் நீட்ஷேவும் ரமணரும் (கோபாலரும்) எதிரெதிராக / அருகருகே வைக்கப்படுகின்றனர். இந்தியச் சூழலில் எத்தகைய சிந்தனையை முன்வைப்பர்களாக இருந்தாலும், அவர்களைச் சுற்றி அவர்களை எழுப்பி விடுகின்றனர். "நான் யார்?' என்னும் தத்துவார்த்த விசாரணைதான் அடிப் படையிலானதும் அவசியமானதும் என்று வற்புறுத்திய ரமணருக்கு, ரமணாஸ்ரமத்தில் சிலை வைத்து, பாலாபிஷேகம் செய்கின்றனர். எதனையும் பொருட்படுத்தாது சுதந்திரப் பறவையாகத் திரிந்த ராம் சுரத்குமார், அவரது வாழ்நாளிலேயே காட்சிப் பொருளாகி நிறுவனத்திற்குள் போய் விட்டார்.

எனவேதான், மந்தைகளிடமும் மேய்ப் பர்களிடமும் சமயங்களிலும் சொல்வ தற்கு எதுவுமற்ற ஜாதிஷ்ட்ரா, "சக படைப்பாளிகளையும் சக அறுவடையாளர்களையும் சக மகிழ்ச்சியாளர்களையும் தேடுகிறான்.'

மேலும் வேறு வேறான தேடல்களைக் கொண்டுள்ள ஆன்மீகமும் கலையும் பரஸ்பரம் பாதிப்புக்குள்ளாகி இன் னும் வளமானவைகளாக ஆகமுடியும் என்ற உரையாடலும் இந்நாவலில் நிகழ்கின்றது. ஓவியன் சிவனும் கோபாலரும் சந்தித்துக் கொள்கையில் இதனை நாம் பார்க்கின்றோம். அணுவைப் போல் ஆதாரமான ஒன் றில் ஆன்மீகவாதி ஐக்கியமாகிவிட, அகிலத்தின் எண்ணிலடங்கா வண்ணங்களைக் கொண்ட நிறமாலையைக் காணப் புறப்படுகிறான் கலைஞன்.

கட்சி கோட்பாடு நடவடிக்கைகளில் உள்ளீடு இல்லாது போவதுபோல, கட்சிக்காரர்களின் தனிப்பட்ட ஆளு மையிலும் உள்ளீடு இல்லாது போய் போலித்தனமும் சந்தர்ப்பவாதமும் மண்டிவிடுகின்றன. இதனை ரவியும் சிவனும் தம் எதிர்வினைகளால் பரிகசிக்கின்றனர்.

குடும்பம் என்னும் சட்டகத்தில் படிந்து, நண்பர்கள் தோழர்கள் என்று நெருங்கி, நிறுவனங்கள் சேவை என்று ஈடுபட்டு விடும் கிரி, அவ மானத்தையும் ஏமாற்றத்தையும் இழி வையுமே எதிர்கொள்கையில், நேரி டையாக எதிர்வினை புரியாது எல்லா வற்றையும் மனதுக்குள் அடக்கிக் கொள்வதால், பைத்திய நிலைக்குச் சென்று இறுதியில் தற்கொலை செய்து விடுகிறான். கிரியை பலி கொடுப் பவை உள்ளீடற்றுப் போன குடும்ப மும் சமூக நிறுவனங்களும்.

தேவைகளுக்காக வரம்புகளை மீறு கின்ற தேவகியை வெறுக்கும் ரவி என்னும் கம்ப்யூட்டர் இளைஞன், சுதந்திர உணர்வுடன் உறவு நிலைகளை மீறுவதும், உறவு நிலைகளுக்குள் கட்டுப்படுவதுமாயிருக்கும் சந்திராவை மதிக்கின்றான்.

டால்ஸ்டாயின் எழுத்துக்களில் பிடிப் புள்ள கண்ணன் ஒரு கட்டத்தில் நிலை கொள்ளாது தவிப்படைந்தாலும் பின்னர் தன் பாலியல் மீறல்களிலும் சுதந்திரப் பறவையான மனைவியை ஏற்பதிலும் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறார்.

உலகியல் நோக்கங்கள் இல்லாமல், போலித்தனங்களைப் பரிகசித்து, அரிய தருணங்களை அற்புதமானவைகளாகக் கொண்டாடி, இயல்பாக வாய்க்கும் உறவு நிலைகளில் தோய்ந்து, உடனே விட்டு விடுதலையாகி திரிந்து கொண்டிருக்கின்றான் ஓவியன் சிவன்.

‘எனது பயணம் இலக்கற்றது போலத் தான் தோன்றுகிறது. இங்கே லட்சியங் கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள எதன் மீதும் எனக்கு மதிப்பில்லை. அறிவாளிகள், புரட்சியாளர்கள், போராட்டக்காரர்கள் யாரும் இன்று முன்வைக்கும் மனிதம் என்ன? ஒன்றுமில்லை. வெறுப்பும், துவேஷமும் வன்மமும் கொண்ட பேரழித்தல் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் பார்வையாளனாக இருக்க மட்டுமே என்னை விதித்துக் கொள்வதா? என் தேடலை எப்படி அர்த்தம் செறிந்த ஒன்றாக மாற்றிக் கொள்வது?ற (பக்.210)

விஞ்ஞானிகள், விஞ்ஞானத்தைத் தங் கள் பவிசுக்கானதாக முன்னேற்றத்திற் கானதாக மாற்றுவதையும், அதிகார மாக்கி அழிவுசக்தியாக்குவதையும் கண்டு, தார்மீக கேள்விகளால் வதைக் கப்பட்ட வர்மா, தன் நிறுவனத்திலி ருந்து வெளியேறி சிவகிரி வந்து செவியர்களுடன் உரையாடுகிறார், கோபாலரைச் சந்திக்கிறார். ஓர் அடிப் படைக் கேள்வியையும் எழுப்புகிறார். ‘ஒருவனைக் கொல்லனும்னு முடிவு பண்ணிட்டு அதுக்கான நியாயங்க ளையும் சட்டங்களையும் உருவாக்கு கிற ஒரு அரசாங்கத்தோட கையில் ஒரு அணுகுண்டு இருக்கிறது எவ்வளவு ஆபத்தானது? சகல அதிகாரமும் கொடுக்கிற பதற்றத்தில் அதை அவங்க வெடிக்கச் செய்ய மாட்டாங்கன்றதுக்கு என்ன உத்தரவாதமிருக்கு?’ (பக்.170)

II

சமீபத்தில் சயீத் மிர்ஸா என்னும் திரைக் கலைஞர் அட்ட்டி : ஃஞுttஞுணூ tணி ச் ஈஞுட்ணிஞுணூச்tடிஞி Mணிtடஞுணூ என்னும் நாவலை வெளியிட்டுள்ளார். இந்த நாவல் எழுதுவதற்கான உத்வேகமாக / அடிப்படையாக இருந்தது எது?

‘அக்டோபர் 2001 இல் மத்திய ஆசியாவிலும் துருக்கியிலும் ஸ்பெயினிலும் பயணித்துக் கொண்டிருந்தபோது வரலாற்றுத் தவறுகளைப் பேச வேண்டியதன் இந்த அவசரத்தை உணர்ந்தேன். அதேவேளையில், விநோதமான வகையில், என் அம்மாவைப் பற்றிய நினைவுகளால் மனம் நிரம்பியிருந்தது. என்னைப் புரிந்துகொள்ள / சரி செய்து கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. இந்த வகையான பயணங்களிலிருந்து இந்த நாவல் உருக்கொண்டது.

"காதல் கதை, கருத்தியல் மோதல்கள், ஆஃபி கதைகள், அகரீதியான தனி மொழிகள் மற்றும் சந்தேகங்களின் கலவை இது. "ஆயிரத்தோடு இரவுகள்' என் மனப்பின்னணியில் இருந்தது. மெல்ல வளர்ந்து ஒருங்கிணைந்தா யிற்று’ என்று தொடர்ந்து தன் நாவலைப் பற்றி விளக்குகிறார்.

தனது காதல் வாழ்க்கை, சகாக்களு டனான கருத்து மோதல்கள் மற்றும் சந்தேகங்களிலிருந்து சூஃபி கதைகள் வரையிலான பயணத்தை, தாய்க்கு எழுதும் கடித வடிவில், நாவலாக்கி யுள்ளார் மிர்ஸா.

ஆக, நாவல் என்பது முற்றிலும் புனைவாக இருக்க வேண்டியது எப்படி அவசியமில்லையோ, அப்படியே முற்றிலும் யதார்த்தமாக இருக்க வேண்டியதும் அவசியமில்லை. ஒன்றிலிருந்து இன்னொரு தளத்திற்குத் தாவி, பார்வை நிலைகளை கன பரிமாணங்களை மாற்றி உருவாகும் எழுத்து அதனளவில் விடுலையாக இருக்கின்றது. விடுதலைக்கு வித்திடுவதாக இருக்கின்றது.

விடுதலை என்றால், சமூக அரசியல் தளத்தில் மட்டும் நிகழ்வதாக எண்ணிக் கொள்ள வேண்டியதில்லையே! விடுதலை, சிந்தனையில் தொடங்க வேண்டும். உறவு நிலைகளுக்கு வளர்ந்து, சமூக அரசியல் தளங்களுக்கு விரிவுகொள்ள வேண்டும். நாம் சிந்தனையில் தொடங்கலாம்.

 

மரம் (நாவல்)

ஆசிரியர்: ஜீ.முருகன் 

வெளியீடு

உயிர்மை பதிப்பகம்

அபிராமபுரம்

சென்னை 18

Pin It