காவி உடுத்திய சாமியார் வேடத்தில் உலாவிக் கொண்டு ஆஸ்ரமத்திற்குள் காமக் களியாட்டங்களில் ஈடுபட்ட நித்தியானந்தாவுக்கும், எழுத்தாளன் என்னும் போர்வையில் பெண்களை தனது காம வலையில் வீழ்த்த நினைக்கும் சாரு நிவேதிதாவுக்கும் என்ன வித்தியாசம்? நித்தியானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்துவது போல் பாசாங்கு செய்யும் சாருவின் அந்தரங்கத்தில் கசங்கிப் போன பெண்களின் வாழ்வை இக்கடிதம் அம்பலப்படுத்துகிறது. நித்தியானந்தாவுக்கு தன் மனைவி அவந்திகாவை அறிமுகம் செய்து வைத்தது சாருதான். அந்த சாருவின் மனைவியே இக்கடிதத்தை தனக்கு எழுதியதாக, கடந்த 13/07/2011 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார் நித்தியானந்தா. இக்கடிதம் சாருவின் வீட்டுப் பிரச்சினை என்பதைவிட, அசிங்கமான அவரது அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியை வெளிப்படுத்துகிறது என்பதுதான் உண்மை.

சாருவின் மனைவி எழுதியதாக நித்யானந்தா கொடுத்த கடிதம், அப்படிக்கு அப்படியே இங்கே...   

“Beloved Swamy,

சாரு நிவேதிதாநான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி. எனக்கென்று இருக்கும் ஒரே ஆதாரம் இப்பொழுது நீங்கள்தான் சுவாமி. NSP இரண்டாம் நாளிலிருந்து இன்றுவரை காய்ச்சல் எனக்கு விட்டபாடில்லை சுவாமி. என்னைவிட என் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்தான் சுவாமி. இறைவனின் அருளால் எல்லா சூழ்நிலைகளிலும் மிகவும் ஆனந்தமாக மட்டும்தான் இருக்கிறேன் சுவாமி. அதனால்தான் தங்களை திரும்பவும் காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

நான் தங்களை முதலில் கண்டது முதல் இன்றுவரை மிகப்பெரிய அவதார புருஷனாகவோ அல்லது தவ ஞானியாகவோ என்னால் உணர முடியவில்லை. பல ஜென்மங்களாக பழகிய மிகவும் நெருக்கமான என் ஜீவனின் ஜீவனாக மட்டும்தான் உங்களை என்னால் உனர முடிகிறது. இதுநாள்வரை எவரிடமும் இல்லாத, என் மகனிடம்கூட இல்லாத நெருக்கம், என் ஜீவனின் அடி ஆழத்திலிருந்து தங்களிடம் மட்டும்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. உங்களைக் கண்டால் மட்டும்தான் நான் இவ்வளவு உருகிவிடுகிறேன். அதனால்தான் “there is something wrong” என்று தாங்கள் அன்று கூறினீர்கள். ஆனால், அன்றே முடிவு செய்துவிட்டேன் சுவாமி. இனி தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதிமொழியே எடுத்துக்கொண்டேன்.

என்னைப் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். நான் சாருவை இரண்டாவதாக மணம் முடித்தவள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சாரு எனக்கு இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்தார். அதனால்தான், இன்றுவரை அமைதியாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சாருவை மணந்த உடன் என் துன்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால், பலவித கோணங்களில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பிறகுதான் தெரிந்தது. உங்களை சந்திக்கும்வரை சுவாமி, கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக வீடு விட்டால் office என்று நான் வெளி உலகமே தெரியாத ஒரு அடிமைபோல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

சாரு என்னை மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாவது மாதம், என் உயிர்த்தோழியை சாருவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். என் வீட்டில், என் கண் முன்னால் அவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதம்... அந்தக் காட்சிகளை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை சுவாமி. நான் பட்ட துன்பங்கள், அவமானங்கள்... சுவாமி உங்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது. ஆனால், நான் எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப்போல் பொறுத்துக்கொண்டேன் சுவாமி.

தினமும் குடி, கும்மாளம். வீட்டிற்கு வந்தவுடன் எல்லாவற்றையும் போட்டு உடைப்பது, கண்ட வார்த்தைகளால் என்னைத் திட்டுவது, உதைப்பது, ஒரு நரகத்திலிருந்து தப்பித்து இன்னொரு நரகத்தில் விழுந்துவிட்டது, சுவாமி அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதுப்பெண், கல்லூரி மாணவி மாறி விடுவாள். அதனால், கல்யாணமான இரண்டாவது மாதத்தில் இருந்து முடிவு செய்தேன் சுவாமி. இனி சாருவிற்கு தாயாக வாழ்ந்துவிடுவது என்று. இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

நான் இதைப்பற்றி சாருவிடம் பலமுறை பேசிப் பார்த்தேன். “நீ ஏன் ஒரு எழுத்தாளனை கல்யாணம் செய்துகொண்டாய்? இப்படி அடிமையாகத்தான் நீ வாழ்ந்தாகவேண்டும். உண்மையான அன்பு மனதளவில் இருந்தால் போதும். உன்னைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை. என்னை விட்டுச் சென்றுவிடாதே” என்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்பான். உண்மையான அன்பு என்பது உடல், மனம், ஜீவன் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து ஒரே ஒரு ஜீவன்மேல் வைக்கப்படும் காதல் அது என்று நான் சொன்னாலும் அதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான்.

அவன் என்னுடன் பேசிய வார்த்தைகளைவிட, அவன் காதலிகளிடம் அவன் கொஞ்சிய நேரங்களே அதிகம். நான் எப்பொழுதாவது பேசுவதற்கு அருகில் சென்றால், எனக்கு எழுத நிறைய இருக்கிறது என்பான். ஆனால், அடுத்த நிமிடமே காதலியிடம் பேச ஆரம்பித்தால், இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பான். திடீரென்று இரண்டு அல்லது மூன்றுநாட்கள்கூட காணாமல் போய்விடுவான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு புதுக் காதலிகள் அமையும்போது எனக்குக் கிடைக்கும் அர்ச்சனைகள், மிகப் பிரமாதமாக இருக்கும்.

நாளாக, நாளாக அவனது ஆட்டம் தாங்க முடியவில்லை. ஒரு கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். என் மகன் கார்த்திக் இருந்ததால், என்னிடம் உண்மையைக் கூறும்படி ஆகிவிட்டது.

இதற்கு நடுவில் அவன் வேறு ஒரு பெண்ணை, கந்தர்வ விவாகம் புரிந்துகொண்டான். அவன் செய்துகொண்ட திருமணம் முழுவதும் என் கனவில் அப்படியே ஒரு சினிமாபோல் தோன்றியது. அந்தப் பெண்ணின் பெயர், அந்தப் பெண்ணுடன் இருந்தவரின் பெயர், சாரு மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடை, கலர், எங்கு திருமணம் நடந்தது எல்லா விபரங்களையும் என் கனவுக் குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். ஏதோ ஒரு நாள் அதைப் பார்த்த சாரு, மிரண்டுபோய், நான் சொல்லும் எல்லா விஷயங்களுமே உண்மை என்பதை அப்பொழுதுதான் புரிந்துகொண்டான்.

மனுஷ்யபுத்திரன் & சாரு நிவேதிதாஅது மட்டும் அல்லாது என்னுடைய மைத்துனருடைய மகள் கல்லூரி மாணவி (சாருவின் தம்பி மகள்) எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாள். சாருவுடன் எல்லா இடங்களுக்கும் சென்று வருவாள். சாருவிற்கு உள்ள புகழையும், பெயரையும் கண்டு மயங்கி சாருவை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்த உடனேயே, சாரு எனக்குக் கட்டிய தாலி, தரையில் அவிழ்ந்து கிடந்ததை இறைவன் எனக்குக் காண்பித்தார். அதற்கான காரணம் என்னவென்று நான் ஷீரடி சாயிராமனிடம் கேட்டபொழுது, என் மைத்துனரின் மகளைக் காண்பித்து இவள்தான் காரணம் என்றார்.

உடனே, கடவுளே என் புத்தி இவ்வளவு கீழ்த்தரமாக வேலை செய்கிறதே என்று எண்ணிக்கொண்டு அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், இரண்டே நாட்களில் நான் கண்ட அந்தக் காட்சி... அதுவும் என் வீட்டில்.... உடைந்து போனேன், மருகினேன், துடித்தேன். அன்று எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஆனால், இன்றுவரை இறைவன்தான் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

நான் அன்று என் தாலியைக் கழற்றி இறைவன் பாதத்தில் வைத்தேன். நான் யாருக்கும் மனைவி கிடையாது, தாய் கிடையாது. இறைவனுக்குத்தான் என் ஊன், உயிர் எல்லாம் சொந்தமென்று அர்ப்பணம் செய்தேன். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

காமம் என்று வந்தால், தாய் மகள், அப்பா மகள் உறவுகூட அத்துப்போய்விடும் என்று நான் அறிந்த அன்று வியந்துபோனேன் சுவாமி. என் மகன் கார்த்திக், இதைப் பற்றி கேட்டபொழுது, உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு  வெளியே சென்றுவிடு என்றான் இதே சாரு.

அப்பொழுது நீ எங்கிருந்தாய் நித்யா? என்னைக் கூட்டிக்கொண்டு அப்பொழுது சென்றிருக்கலாமே. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி விழுந்து அவனுடன் வாழ ஆரம்பித்தேன். இன்றுவரை அவன் என் மகன் கார்த்திக்கை பேசாத வசைச் சொற்கள் எதுவுமே இல்லை.

நான் உங்களைப் பார்க்கும்வரை அவனைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் என்று(சாரு) அவன் நினைத்திருந்தான். ஏனென்றால், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு அடிமைபோல் வாழ்ந்தேன் நான். சாருவைவிட்டு உங்களிடம் வந்து சேர்ந்துவிடுவேன் என்று பயப்படுகிறான். “என் கவுரவம் என்ன ஆவது? சமுதாயத்தில் எனக்கென்று உள்ள பெயர் நீ spritual life மேற்கொண்டுவிட்டால், கெட்டுப்போகும். நீ ஏன் ஒரு எழுத்தாளனை மணம் செய்துகொண்டாய்? அதனால், இந்த ஜென்மம் முழுவதும் என்னுடன்தான் வாழவேண்டும். நான்தான் உன் சுவாமியை உனக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். என்னைவிட்டு எங்காவது செல்ல நினைத்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன். நான் தனியாக வாழ ஆரம்பித்தால், பத்திரிகைத் துறை என்னைக் கேள்வி கேட்டே துளைத்துவிடும். நான் இப்பொழுது எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். அதனால், நீ என்னுடன்தான் இருக்கவேண்டும். உன்னால், உன் சுவாமிக்குத்தான் கெட்ட பெயர். நீ spritual activity செய்ய எங்கும் செல்லக்கூடாது” என்று பல வழியாக என்னை பிளாக்மெயில் செய்கிறான் சுவாமி.

சாரு நிவேதிதாஇதற்கு நடுவில்தான் சுவாமி, எனக்கு பல உண்மைகள் உரைக்கப்பட்டன. நான், எல்லாவற்றையும் அறிந்து எவரிடமும் உண்மைகளைக் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடல், மனம், ஜீவன் எல்லாவற்றையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு வெறும் ஜடமாக இந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் சுவாமி. என்னை அன்று கடிந்துகொண்ட உடன், நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம். அதனால்தான், சுவாமி இவ்வளவு கோபமாக சொல்கிறார். நான் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பு, மிகவும் தூய்மையானது சுவாமி. எல்லோருக்கும் அவதார புருஷனாக, கடவுளாக தெரியும் தாங்கள், எனக்கு பல ஜென்மங்களாக பழகி மிக நெருங்கிய தோழனாக, என் தாயாக, என் மகனாக, என் ஜீவனாக இருக்கிறீர்கள் சுவாமி.

சில உணர்வுகளை நான் இங்கு எழுதவில்லை சுவாமி. நான் ஒரு சிறு குழந்தையைவிட மிகவும் கள்ளம் கபடம் இல்லாதவள் சுவாமி. இந்த உலகில் யார் என்னை எப்படி நடத்தினாலும் பரவாயில்லை சுவாமி. ஆனால், உங்களது முகம் அன்று மாறியதைக் கண்டு இன்றுவரை நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று சொல்வதற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. என் வாழ்நாள் இறுதிவரை, தங்களை நினைத்து என் ஜீவன் உருக, உங்களை எண்ணி நான் மேற்கொள்ளப் போகும் என் தவக் கோலத்தை அந்த இறைவனே நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆனாலும், நான் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்.

தங்கள் திருமேனியை வாழ்நாளில் தரிசித்து, தங்களுடன் பேசி, தங்கள் ஆசிகளை நான் பெற எனக்கு உதவிய இறைவனுக்கு நன்றி. நான் உங்கள் மேல் செலுத்தும் பக்தி, எதற்கு ஈடாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் உங்களைக் காதலித்தது உண்டா? அந்த இறைவனைக் காதலித்தது உண்டா? நீங்கள் எப்பொழுதும் கூறும் மீரா, ராதை, ரமணர் இவர்களின் காதலைக் கண்டவள் இல்லை நான். ஆனால், இந்த எல்லாக் காதலையும்விட நான் உங்கள்மேல் கொண்டுள்ள பக்தி மிகவும் உயர்ந்தது. இதை தங்களிடம் வெளிப்படுத்த என்னைத் தூண்டியதே தாங்கள்தான்.

உங்களின் பக்தையாக நான் இருக்கிறேன் என்றாலே, நான் உங்கள் மேல் கொண்டுள்ள பரிபூரண அன்பு எவ்வளவு தூய்மையானது, ஆழமானது என்பதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும். நான் கரைந்து உருகி காணாமல்போய் பல ஜென்மங்கள் ஆகிவிட்டது இறைவனே. உங்களுக்காகவே பல பல ஜென்மங்களாய் பிறப்பெடுத்துக்கொண்டிருக்கும் இந்த பக்தையை ஏற்றுக்கொள்ள ஏன் இவ்வளவு தாமதம்?

நீங்கள் பலப்பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்தித்துக் கொள்கிறேன். சிறு குழந்தையாக இருந்தால்கூட அவர் ஏதாவது நினைக்கக்கூடும், அவர்கள் கடிந்துகொள்ளக்கூடும் என்று நினைப்பவள் நான். ஆனால், தங்களிடன் எனக்கு ஒரு சிறு தயக்கம்கூட ஏற்படவில்லை.

என்னிலிருந்து வேறுபட்டவர் தாங்கள் என்றுகூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி, தாங்கள் என்ன செய்ய சொல்கிறீர்களோ, அதைச் செய்கிறேன்.

உங்களை நான் பார்க்காமல் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என்று நான் நினைப்பதுண்டு. உடனே, உங்களுக்குக்காகவே பல ஜென்மங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் என்னால், எப்படி உங்களைக் காணாமல் இருக்க முடியும் என்று என் ஆன்மா பதில் சொல்லும். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? இறைவா! தங்களின் சேவையை செய்வதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் என்னை ஏற்றுக்கொள்ள ஏன் இந்தத் தாமதம்? என் தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளக் கூடாதா?

with lots of divine love
ma.anadavalli.

*ஆனந்தவல்லி என்பது ஆனந்தத்தை போதிக்கும் சுவாமிஜி அவர்கள், சாருவின் மனைவி அவந்திகாவுக்கு வைத்த பெயர்.
-------
நித்தியானந்தா வெளியிட்ட கடிதத்தின் scanned version:
Pin It