ஊழலுக்கு எதிராக பாஜக எடுத்த நடவடிக்கைகள் என்ன?

2013 ஆம் ஆண்டு ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் – 1136, 2014 ஆம் ஆண்டு – 993, 2015 ஆம் ஆண்டு 878, 2016-ம் ஆண்டு 71 லோக்பால் அமைப்பு – இது ஊழலை விசாரிக்கும் அமைப்பு.பிரதமர், முன்னாள் பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் குரூப் ஏ,பி,சி,டி பிரிவு அதிகாரிகள், அரசிற்கு தொடர்புடைய ஆணையங்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், 10 லட்சத்திற்கு மேல் அந்நிய நாட்டிலிருந்து நிதியுதவி பெரும் அமைப்புகள் – ஆகியவைகள் குறித்து விசாரிக்க முடியும்.

இந்த அமைப்புக்கான மசோதா காங்கிரஸ் ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளாக லோக்பால் அமைப்பு ஏன் உருவாக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.

லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதன் முடிவுகள் என்ன?

  • தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் 2018 முதல் 2022 வரை பாஜக 5270 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் 964 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றுள்ளது.
  • 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த கட்சிக்கு வெறும் 964 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்துள்ளது. வெறும் 9 ஆண்டுகள் ஊழலுக்கு எதிராக ஆட்சி செய்ததாக கூறும் பாஜகவிற்கு 5270 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.
  • நாட்டை பாதுகாக்கிறோம் என்று கூறி நாட்டின் வளங்களை தேசிய பாஜக கொள்ளையடிக்கிறது என்றால், மாநிலங்களில் இருக்கும் பாஜகவினரோ நாட்டிற்கும், சட்டத்திற்கும் எதிராக வரி எய்ப்பு போன்ற மோசடிகளை செய்து வருகின்றனர்.
  • வரி கட்டாமல் மோசடி செய்வது தான் நாட்டை பாதுகாக்கும் வழியா ?
  • ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது அதாவது இந்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது தான் நாட்டின் வளமா ?
  • பாஜகவில் இணையாதவர்கள் இந்துக்களே இல்லை என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். அவர்கள் கூற்றுப்படியே பாஜகவில் உள்ள இந்துக்களின் பணத்தை பாஜகவினரே ஏமாற்றுவது என்ன நியாயம் ?
  • பணத்தை திரும்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்களாம். பாஜகவை விட்டு வெளியேறிய மாநில பொருளாளர் பிரிவு செயலாளரும் அதை உறுதி படுத்தியுள்ளார்.
  • ஏழை இந்துக்களின் பணத்தை கொள்ளையடித்து ஒரு சிலரின் உயர்வுக்கு கொடுப்பது தான் பாஜகவின் அகில இந்திய கொள்கை போல!
  • பாஜகவின் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் வேலை வாங்கி தருவதாக பாஜகவின் உறுப்பினர் ஒருவரையே ஏமாற்றிவிட்டார் என்று மாநில தலைவர் அண்ணாமலையிடம் முறையிட்டால் எந்த வித நடவடிக்கையும் இல்லை. பிறகு அந்த பாஜக பிரமுகர் தமிழ்நாடு அரசு காவல்துறையிடம் சென்றார் பணத்தை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.
  • தாங்கள் ஆட்சி செய்யாத அனைத்து மாநிலத்திலும் ஊழல் நடைபெற்றதாக கூப்பாடு போடும் பாஜகவினர் அவர்களின் கட்சி உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் என மோசடிக்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

தொகுப்பு : மனோஜ்

(தொடரும்)

Pin It