Modi and Arnabhபா.ஜ.க. ஊது குழல் - ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்தும் கோஸ்வாமி நடத்திய ‘ரேட்டிங்’ மோசடி

இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் தொலைக்காட்சி’ முதலாளியுமான பார்ப்பன அர்னாப் கோஸ்வாமி, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும் டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரித்துக் காட்ட இலஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டது அம்பல மாகி இருக்கிறது.

குறிப்பாக, பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அர்னாப் கோஸ்வாமி தனது டிவி நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்துள்ளதாக மும்பை காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

எந்தெந்த டிவி சேனல்களை, மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் டிவி சேனல்களுக்கான செல்வாக்கு (டிஆர்பி) கணக்கிடப்படுகிறது. இதற்கேற்பவேவிளம்பர வருவாய் உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பதால் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க டிவி சேனல்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வது உண்டு.

அந்தவகையில், அர்னாப் கோஸ்வாமியின் தலைமையில் இயங்கும் ரிபப்ளிக் தொலைக் காட்சியால், பக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகியமராத்தி சேனல்களை மட்டுமே பார்க்க பொதுமக்களுக்கு ‘ஹன்சா’ என்ற நிறுவனம் மூலம் லஞ்சமாக பணம் அளிக்கப் பட்டுள்ளது.

அதாவது பணத்தை பெற்றவர்கள் எந்நேரமும் தொலைக்காட்சியை ஆன்செய்து, அதில் ரிபப்ளிக், பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா சேனல்களைஓடவிட வேண்டும். இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை லஞ்சம் வழங்கப்பட் டுள்ளது.

இந்த முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை காவல்துறை வழக்கு தொடர்ந்து உள்ளது. அவர்களில் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அர்னாப் கோஸ்வாமியும் விரைவில் விசாரிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப்கோஸ்வாமியும் விசாரிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு  இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீர்சிங், “முறை கேட்டில் சம்பந்தப்பட்டவர், எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கேள்வி கேட்கப் படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இதே போன்ற ‘ரேட்டிங்’ மோசடிகளை இங்கே பா.ஜ.க.வுக்காக ‘யு டியூப்’ சேனர்களை நடத்தும் மாரிதாஸ் போன்ற பேர்வழிகளும் செய்தது ஏதோ, இலட்சக்கணக்கானோர் தங்களைப் பின்பற்றுவதாக பாசாங்கு செய்து வருகின்றனர்.

விடுதலை இராசேந்திரன்

Pin It