நீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி உள்ளிட்ட அனைத்து விவரங் களும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விலைக்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

அதாவது, 2018ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில், 2 லட்சம் மாணவர்களின் முழு விபரங்களும் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன; ரூ. 2 லட்சம் தந்தால், அந்த 2 லட்சம் மாணவர்களின் முழு விபரங்களையும் குறிப்பிட்ட இணையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் ஆகிய வற்றை குறிவைத்து, இந்த டேட்டாக்கள் விற்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வில் வெற்றி பெற்றும், குறைந்த மதிப்பெண் எடுத்ததால், சீட் கிடைக்காமல் போனவர்களை கண்டுபிடித்து, அவர்களை தங்கள் கல்லூரிகளில் சேருமாறு அழைக்க வும், இத்தனை லட்சம் கொடுத்தால் நீங்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று பேரம் பேசவும், தனியார் கல்லூரிகளுக்கு மாணவர் களின் தரவுகள் பயன்பட்டிருக்கின்றன.

அதேபோல நீட் தேர்வில் வெற்றி பெறாதவர்களை தொடர்புகொண்டு, அடுத்தாண்டு நீட் தேர்வில் வெற்றிபெற நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்; இவ்வளவு பணம் கட்டினால் போதும், நீங்கள் டாக்டர் ஆவது உறுதி என்று ஆள் பிடிப்பதற்கு, தனியார் பயிற்சி நிறுவனங்களும் இந்த தகவல்களை விலைக்கு வாங்கியிருக்கின்றன.

தகவல்களை விற்றதன் மூலம் குறிப்பிட்ட இணைய நிறுவனமும் கொள்ளை லாபம் அடைந்திருக்கிறது. தனியார் ஊடக நிறுவன மொன்றுதான் இந்த உண்மைகளை தற்போது வெளிக்கொண்டு வந்துள்ளது.

குறிப்பிட்ட அந்த இணையதள நிறுவனத் திடம், நீட் தேர்வர்களின் விவரங்களை விலைக்கு கேட்பதுபோல கேட்டு, தனியார் ஊடகம் நிறுவனம் ஊடாடியுள்ளது. அதற்கு அந்த இணையதளம், நீட் தேர்வர்கள் தொடர்பான ‘சாம்பிள் டேட்டா’வை வாட்ஸ் ஆப்பில் ஷேர் செய்துள்ளது.

அதை வைத்து, தனியார் ஊடகம், சாம்பிள் டேட்டாவில் குறிப்பிடப்பட்டிருந்த போன் நம்பர்களைத் தொடர்புகொண்டு பேசுகை யில், போனை எடுத்தவர்கள், தாங்கள் நீட் தேர்வு எழுதியவர்கள்தான் என்றும், அவர்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் உண்மைதான் என்றும் கூறியுள்ளனர்.

நீட் பயிற்சிக்கு வருமாறு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் பல தங்களைத் தொடர்பு கொண்டதையும் தெரிவித்துள்ளனர்.

‘நான் நீட்டில் வெற்றி பெற்று விட்டேன்; இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இதில் கல்லூரியில் சேர்ந்து கொள், அந்த படிப்பில் சேர்ந்து கொள் என்று நாளொன்றுக்கு சுமார் ஐந்து போன்களாவது வருகின்றது’ என்று மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஐடி ஆக்ட் 43A மற்றும் 72A ஆகிய சட்டங்கள், இதுபோன்ற தகவல்கள் கசிவை தடை செய்கின்றன. எனினும் இந்த சட்டங் களால் இதுவரை யாரும் தண்டிக்கப் பட்டதாக இல்லை என்பது முக்கியமானது. மாணவி ஒருவர் எழுதிய கடிதத்தை, பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த மாணவியின் மின்னஞ்சல் மற்றும் தொலை பேசி எண்ணை அவர் மறைக்கவில்லை. ஐடி ஆக்ட் 43A மற்றும் 72A அடிப்படையில் இதுவும் குற்றம் எனப்படுகிறது.

எனவே, சட்டங்கள் இவ்வாறெல்லாம் இருக்கும்போது, ‘நீட்’ தேர்வர்களின் தகவல் களை கசியவிட்டவர்கள் யார்; அவர்களை அரசு கண்டுபிடிக்குமா; தண்டிக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஏற்கெனவே, அதிகமான பாதுகாப்பு வசதிகள் கொண்டிருப்பதாக கூறப்பட்ட ஆதார் தகவல்களும் விலைக்கு விற்கப்பட்டன. ஒருவரின் ஆதார் ரகசியங்களை யார் வேண்டு மானாலும் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில்தான் பாதுகாப்பு இருக்கிறதா? என்று இப்போதுவரை கேள்விகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், நீட் தேர்வர்களின் விவரங்களும் இணையத்தில் கிடைக்கும் என்பது, ஆட்சியாளர்களின் அலட்சி யத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது.

Pin It