• குஜராத், கோவா, மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு மகாராஷ் டிரா மாநிலத்தில்அமைக்கப்பட்டு சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டதால் அங்குள்ள விவசாயிகள் ஆலையை அடித்து நொறுக்கியுள்ளனர். அதன் பிறகு மகாராஷ்ட்ரா மாநில அரசு ஆலைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.
• இயற்கை சமன்பாட்டில் முக்கியப் பங்காற்றும் அரிய வகை உயிரினங் களுக்கு தாயகமான மன்னார் வளை குடாவில் 21 தீவுகள் அமைந் துள்ளன. அத்தகைய பாதுகாக்கப் பட்ட கடற் பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்திற்கு வேதியியல் தொழிற் சாலைகள் அமைக்கக் கூடாது என்ற விதிகளை மீறி மன்னார் வளைகுடா உயிரியல் மண்டலத் திற்கு ஆபத்தை விளை விக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டது.
• தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தாமிரத் தாது கொண்டு வந்த கப்பலைமீனவர்கள் படகுகளில் சென்று விரட்டி அடித்தனர். தாமிரக் கழிவுகளை கடலில் கலப்பதை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தினர்
• ஸ்டெர்லைட் ஆலை அமைந்த போது அதனால் காற்று மண்டலத்தில் ஏற்படும் மாசு அளவுகளைக் கட்டுப் படுத்த 250 மீ சுற்றளவிற்கு பசுமை வளையம் (மரங்கள்) அமைக்க வேண்டும் என்கிற சட்டத்தை வளைத்து ஸ்டெர் லைட் நிறுவனத் திற்கு சாதகமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 10-இல் ஒரு மடங்கு 25 மீ பசுமை வளையம் அமைத்தால் போதும் என்ற சலுகையை கொடுத்தது. இதனை யும் ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுத்த வில்லை.
• ஸ்டெர்லைட் நிறுவனம் விதி முறைகளை மீறிச் செயல்பட்ட தற்காக இரு முறை ஆலை நீதிமன்றம் உத்தரவிட்டு மூடப் பட்டது.
• 2013ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி நச்சு வாயுக் கசிவு காரணமாக பலர் மயக்கமடைந்தனர். கண் எரிச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு பாதிப்புக்களுக்குஉள்ளாகினர். இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத் தாது தயாரிக்கும் போது வெளியேறும் கழிவுகளைத் தேக்கி வைத்து மழைக்காலங்களில் திறந்து விட்டு நிலத்தையும், நீர்நிலைகளையும், கடலையும் மாசுப்படுத்தியுள்ளது.
• ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரும், நிலமும், விவசாயமும் பாதிக்கப் பட்டுள்ளது. கால்நடைகள் நஞ்சு கலந்தநீரை குடித்து இறந்துள்ளன.
• கந்தக டை ஆக்ஸைடு காற்றில் கலந்து மாசு நிறைந்துள்ள நகரங் களில் இந்தியாவில் நான்காவது நகரமாக தூத்துக்குடி மாநகரம் உள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடியும் அதனைச் சுற்றி யுள்ள கிராமங்களும் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறி வருகின்றன.
• புற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றனர். இந் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் நான்கு மடங்கு விரிவாக்கம் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித் துள்ளது. இதற்கு பொது மக்களிடம் கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற கடை யடைப்புப் போராட்டமும், 20 ஆயிரம் பேர் குடும்பத்துடன் பங்கேற்ற பொதுக் கூட்டமும், பொது மக்களின் எழுச்சி தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த 50 நாட்களாக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட் டத்திற்கு அனைத்து அரசியல் கட்சி யினரும், பல்வேறு அமைப்புக் களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆயினும்தமிழக அரசும், மத்திய அரசும், ஆலையை மூடுவதற்கும், அனுமதியை ரத்து செய்வதற்கும் மறுத்து வருகிறது.
• ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் 50 நாட்களைக் கடந்து ஏ.குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். குமரெட்டியாபுரத்தைத் தொடர்ந்து பண்டாரப்பட்டியில் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் பண்டாரப் பட்டியை அடுத்துள்ள சங்கரப் பேரி கிராமத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.