இந்தியாவில் நிறவெறி சில பகுதிகளில், சில இந்தியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கியிருக்க விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரும்போதும், வாடகைக்கு வீடு தேடும்போதும், வீதியிலும் பொது இடங்களிலும், எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் ஏற்படுகிற வெறுப்புணர்வுக்குக் காரணம், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் சாதி உணர்வுகள்தான். பட்டியல் இனத்தவரைத் தீண்டத்தகாதோராக காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் அதே அணுகுமுறையைத்தான், கருப்பாக இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக் கின்றனர். சாதியம் என்பது மிகப் பலரைத் தாழ்த்தியும், ஒரு சிலரை உயர்த்தியும் நடத்துவது. எளியவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பது. பொது இடங்களில் இந்தியச் சிறுவர்களும் புகைபிடிக்கின்றனர்; நாங்களும் அப்படிப் புகைத்தால், அது கஞ்சா அல்லது மரிஜுவானா தான் என்று முடிவுகட்டுகின்றனர் ஒலியை அதிகப்படுத்திப் பாட்டு கேட்டால் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர், அல்லது வீடு புகுந்து அடிக்கின்றனர். அதே அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் செய்யும்போது கேட்டு ரசிக்கின்றனர்.

நாங்கள் மிகவும் பின்தங்கிய கண்டத்திலிருந்து வந்திருக்கிறோம் என்று நினைக்கின்றனர்.. அது உண்மையல்ல. மனித வளக் குறியீட்டெண்ணில் இந்தியாவைவிடச் சிறந்து விளங்கும் ஆப்பிரிக்க நாடுகளும் இருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவைவிட வலுவான ஜனநாயகம் நிலவுகிறது. ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பிற கண்டங் களுக்கும் கொத்தடிமைகளாக இந்தியர்கள் சென்ற வரலாறும் இருக்கிறது. உண்மைகள் இப்படியிருக்க, நிறவெறியுடன் எங்களை மட்டமாக நடத்துவது ஏன்? இந்தியர்களைக் கொத்தடிமைகளாக அழைத்துச் சென்றதைப் போல, ஆப்பிரிக்கர்களை முழு அடிமை களாகப் பிற கண்டங்களுக்கு அழைத்துச் சென்றனர். நம் இரு கண்டமுமே இப்படி மற்றவர் களால் சுரண்டப்பட்டிருக்கும் பொதுவான நிலையில், ஆப்பிரிக்கர்களைத் தாழ்ந்தவர் களாக இந்தியர்கள் ஏன் கருத வேண்டும்?

இந்திய - ஆப்பிரிக்க மாணவர்கள் சங்கத் தலைவர் சாமுவேல் ஜாக்  எழுதிய கட்டுரையிலிருந்து

Pin It