ஆத்திகன் என்பவன் சுயநல வாதி;
நாத்திகன் என்பவன் அறிவு ஜீவி!
ஆத்திகன் என்பவன் பொதுஜன விரோதி;
நாத்திகன் என்பவன் மக்கள் தொண்டன்!
ஆத்திகன் என்பவன் குழப்ப வாதி;
நாத்திகன் என்பவன் சிந்தைத் தெளிந்தவன்!
ஆத்திகன் என்பவன் பிறரைக் கெடுப்பவன்;
நாத்திகன் என்பவன் தீமையைத் தடுப்பவன்!
ஆத்திகன் என்பவன்  பொய்யுரைப் போனே;
நாத்திகன் என்பவன் உண்மை விளம்பி!
ஆத்திகன் என்பவன் குறுகிய நெஞ்சன் ;
நாத்திகன் என்பவன் ஆய்வு மனத்தன் !
ஆத்திகன் என்பவன் குதர்க்க வாதி ;
நாத்திகன் என்பவன் நயத்தகுப் பேச்சினன் !
ஆத்திகன் என்பவன் எதற்கும் அஞ்சுவான் ;
நாத்திகன் என்பவன் வெளிச்ச சுடர்வான் !
ஆத்திகன் என்பவன் காட்டிக் கொடுப்பவன் ;
நாத்திகன் என்பவன் அணைத்துக் காப்பவன் !
ஆத்திகன் என்பவன் தேங்கியக் குட்டை ;
நாத்திகன் என்பவன் புதுமை விரும்பி !
ஆத்திகன் என்பவன் பள்ளம் பறிப்பவன் ;
நாத்திகன் என்பவன் மே(ட்)டைப் படைப்பவன் !
ஆத்திகன் என்பவன் ஆசை மிகுந்தவன் ;
நாத்திகன் என்பவன் அன்பு கொண்டவன் !
ஆத்திகன் என்பவன் அடுத்துக் கெடுப்பவன் ;
நாத்திகன் என்பவன் தடுத்து நிறுத்துவான் !
ஆத்திகன் என்பவன் வஞ்சகம் உள்ளவன் ;
நாத்திகன் என்பவன் நெஞ்சுரம் மிக்கவன் !
ஆத்திகன் என்பவன் புறமேப் பேசுவான் ;
நாத்திகன் என்பவன் துணிவாய் பேசுவான் !
ஆத்திகன் என்பவன் குறிக்கோள் அற்றவன் ;
நாத்திகன் என்பவன் இலட்சிய மிக்கவன் !
ஆத்திகன் என்பவன் விலங்கை யொப்பான் ;
நாத்திகன் என்பவன் ஒழுக்கம் மிகுந்தவன் !
ஆத்திகன் என்பவன் அயோக்கியன் ;
நாத்திகன் என்பவன் நல்லவன் பாரீர் !

ஆதாரம்: “அறிவுவழி” மாத இதழ்
டிசம்பர் 1988

தகவல்: தங்க. சங்கரபாண்டியன்

Pin It