திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புதியதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் நடக்கவிருந்த கணபதி ஹோமம் பூசை, கழக தோழர்களால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. பல்லடம் நகராட்சி புதிய கட்டிடத்தை அக்.17 அன்று தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு அக்.29 அன்று காலை 4 மணியளவில் கணபதி ஹோமம் பூசை நடத்தி, திறக்கப்படவிருக்கும் சேதி அக்.27 மாலை 4 மணிக்கு கழகத் தோழர்களுக்கு தெரிய வந்தது.

 உடனடியாக கழகத் தோழர்கள் தொடர்பு கொண்டு ஒன்றிய அமைப்பாளர் சி. விஜயன் தலைமையில், நகர செய லாளர் கோ. ஜெகதீஸ், பகுத்தறிவாளர் கழகத் தோழர் மா. திருமூர்த்தி, தோழர்கள் இராமசாமி, சூரி. ஆறுமுகம் ஆகி யோர், நகராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் ஹோமம் நடத்துவதை நிறுத்துமாறு மனு அளித்தனர்.

 பூசை நடத்துவதற்கான பூசணிக்காய், வாழை, பூசை பொருட்கள், செங்கற்கள், மாலைகள் வாங்கி வைத்துள்ளதை கழகத் தோழர்கள் பார்த்து, அரசு அலுவலகத்தை பூசை மடமாக்குவதைக் கண்டித்தனர்.

 இந்த பூசை, அரசு ஆணையை அவமதிக்கும் செயலாகும். மத சார்பற்ற நாட்டில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் பூசை நடக்கும் போதே பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என கழக சார்பில் எச்சரித்தனர். கழகத்தின் இந்த அறிவிப்பால், நடக்க இருந்த கணபதி ஹோமம் பூசை தடுத்து நிறுத்தப்பட்டது. கழகத் தோழர்களின் முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்.

Pin It