அமெரிக்கா, குத்துச் சண்டை வீரர் முகமது அலி தனது உலக வீரர் விருது போட்டிகளுக்கு முன் உடலுறவைத் தவிர்த்ததாக அவரின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக போட்டி பந்தயங்களில் ஈடுபடுவோர்கள் சில வாரம் சிலமாதம் உட லுறவை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுபாடு நிலவுகிறது. இதனால் ஒலிம்பிக் போன்ற உலகப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களின் உடலுறவு விவரம் கூட குழுத்தலைவர்களால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
சமீப காலங்களில் இது குறித்து மருத்துவத் துறையில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. உடலுறவு என்பது உடலிலும் மனதிலும் முக்கிய மான தசை நரம்புகளில் முறுக்கைத் தளர்த்தி சமநிலைப்படுத்தக் கூடியது.விளையாட்டு போட்டிக்கு முதல் நாள் இரவு 15 நிமிட நேரம் மனைவியுடன் உடல்உறவு கொள்வது அடுத்தநாள் வெற்றியை பாதிப்பதில்லை. மாறாக நன்மை செய்யும் என்று விûளாட்டுத்துறை மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இத்தாலி நாட்டின் விளையாட்டு நிபுணர்களின் டாக்டர் டெர்சி விளையாட்டு வீரர்கள் வாரம் 3 முறை உடலுறவில் ஈடுபடலாம். முன்காதல் விளையாட்டில் Fore play எனப்படும் சரச கல்லாபத்தில் அதிக நேரம் ஈடுபட்டால் மூளை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
(கட்டுரை அக்டோபர் 2008 மாற்று மருத்துவம் இதழில் வெளிவந்தது)